நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!

கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!

கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!

‘கமாடிட்டியில் நீங்களும் கலக்கலாம்’ என்கிற ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் கோவையில் நடந்தது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு ஏராளமானோர் பல்வேறு நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சி வகுப்பினை நடத்தினார்.     

கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!

அப்போது, கமாடிட்டி டிரேடிங்கில் வெற்றி பெறுவது எப்படி, கமாடிட்டி வகைகள் - புல்லியன், மெட்டல்ஸ், எனர்ஜி, அக்ரி கமாடிட்டி எப்படி வர்த்தகமாகிறது, கமாடிட்டி டிரேடிங், ஃபியூச்சர்ஸ் டிரேடிங் குறித்த விவரங்களைத் தெளிவாக சொன்னார்அருள்ராஜன். மார்ஜின் மணி ஏன் கூடுகிறது, ஹெட்ஜிங் எப்படிச் செய்வது, கமாடிட்டி டிரேடிங்கில் ரோல்ஓவர் செய்வது லாபகரமானதா என்பது பற்றியும் அவர் விளக்கமாகச் சொன்னார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களிடம், ‘இந்த வகுப்பில் என்ன கற்றுக்கொள்ள வந்தீர்கள்’ என்பதை ஒவ்வொருவரிடமும் இருந்து தனித் தனியாக எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்தது பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. சந்தையின் முக்கிய டிரேடிங் விதிமுறைகள், டிரேடர்கள் எப்படி என்ட்ரி, எக்ஸிட் செய்வது என்பதற்கு டிப்ஸ் தந்தார்.   

கோவையில் பயிற்சி வகுப்பு... - விதிமுறைகளைக் கற்று, கமாடிட்டியில் கலக்குவோம்!

நிகழ்ச்சியின் இறுதியில், டிரேடர் ஒருவர் தன் அனுபவத்தைப் பகிரும்போது, ‘`முன்பு கமாடிட்டியில் நான் நிறைய பணத்தை இழந்தேன். அதன்பிறகு, அதுபற்றி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இன்றும் கற்று வருகிறேன். இப்போது நல்ல லாபம் பார்க்கிறேன்’’ என்று சொன்தைப் பலரும் பாராட்டினார்கள். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைவரும், ‘கமாடிட்டி பற்றி நன்கு கற்றுக்கொண்டு கலக்கு வோம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
 
- சோ.கார்த்திகேயன்