நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?

துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?

ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

``நான் மும்பை, குஜராத், சூரத் எனப் பல நகரங் களிலிருந்து சிறிது டேமேஜ்-ஆன துணிகளை வாங்கி விற்கிறேன். என் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம். நான் ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிய வேண்டுமா? நான் கட்டிய வரியை எப்படித் திரும்பப் பெறுவது?”
 
கே.வி.நவநீதன், திண்டுக்கல்.     

துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?

‘‘உங்களுடைய மொத்த விற்பனை ரூபாய் 20 லட்சத்துக்கு அதிகமாக இருப்பதால், நீங்கள் ஜி.எஸ்.டி-யில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும். மேலும், தாங்கள் மும்பை, குஜராத், சூரத் எனப் பல நகரங்களிலிருந்து பெறுவதால், ஐ.ஜி.எஸ்.டி என்ற வரி செலுத்தவேண்டியிருக்கும். ஐ.ஜி.எஸ்.டி என்பது சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி-யின் கலவையாகும். ஒரு மாநிலத்தி லிருந்து மற்ற மாநிலங்களுக்கு விநியோகம் செய்கிறபோது ஐ.ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். வரித் தாக்கல் செய்யும்போது அந்த ஐ.ஜி.எஸ்.டி-யை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். நீங்கள் செலுத்திய வரியை வரித் தாக்கல் செய்யும்போது உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எடுத்துக்கொண்ட உள்ளீட்டு வரி வரவும் செலுத்திய வரியும் ஒப்பீடு செய்யப்பட்டு, அது சரியாக இருந்தால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படும். எனவே, நீங்கள் மட்டுமல்லாமல், உங்களுடன் தொழில் புரியும் நபரும் வரித் தாக்கல் தவறாமல் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

``நாங்கள் ஜிப்சம் மாவை மொத்தமாக வாங்கி,  பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறோம். இந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி?”

கருணாநிதி, கோவை.

‘‘காபி, தேநீர், மசாலா, பீட்சா, ரஸ்க், மண்ணெண்ணெய், நிலக்கரி, மருந்துகள், சென்ட்,  ஜிப்சம் போன்ற பொருள்களுக்கு 5% என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய வரி விதிப்பு அட்டவணை 1, வரிசை எண் 129-ல் ஜிப்சம் மாவு குறிப்பிடப்பட்டுள்ளது. வரி செலுத்தும்போது நீங்கள் ஒரு மாநிலத்துக்குள் விற்பனை செய்தால், ஜி.எஸ்.டி 5 சதவிகிதம், சி.ஜி.எஸ்.டி 2.5 சதவிகிதம், எஸ்.ஜி.எஸ்.டி 2.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். இதர மாநிலத்துக்கு  விநியோகம் செய்யும்போது ஐ.ஜி.எஸ்.டி 5% எனக் குறிப்பிட்டு வரி செலுத்த வேண்டும். மேலும், பொருளுக்கான சரியான சரக்குக் குறியீட்டு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் ஜி.எஸ்.டி அதிகாரி யிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வரலாம்.’’

துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?



``நான் பிரின்டிங் பிரஸ் நடத்துகிறேன். ஆண்டு டேர்ன் ஓவர் ரூ.10 லட்சம். நான் காகிதம் மற்றும் இங்க் வாங்கும்போது ஜி.எஸ்.டி வரி செலுத்துகிறேன். நான் ஜி.எஸ்.டி-யில் பதியவில்லை. நான் கட்டிய வரியானது எனக்கு எப்படித் திரும்பக் கிடைக்கும்?’’

பாண்டியன், சென்னை.


‘‘உங்களுடைய ஆண்டு மொத்த விற்பனை (TurnOver) 10 லட்சம் ரூபாய்க்குள்தான் என்பதால், பதிவு அவசியமில்லை. எனவே, உள்ளீட்டு வரி கிடைக்காது. இருப்பினும், நீங்கள் உள்ளீட்டு வரியை எடுக்க விரும்பினால், மொத்த விற்பனை 20 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருந்தாலும் தாமாக ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யும் வசதி செய்யப் பட்டுள்ளது. உள்ளீட்டு வரி வரவு எடுக்க சில நிபந்தனைகள் உள்ளன. விலைப்பட்டியல் அல்லது பற்றுக் குறிப்பு (Debit Note) அல்லது வரி செலுத்தியதற்கான ஆவணம் இருக்க வேண்டும். பொருள்கள் மற்றும் சேவைகளைப் பெற்றிருத்தல் வேண்டும். சரக்குகளைக் கூலித்  தொழிலாளர் களுக்குக் கூடுதல் வேலைபாடுகளுக்காக அனுப்பும்போது அதற்கான ஆவணத்தை, அதாவது விநியோகச் சீட்டு (Delivary Chalan) பெற்றிருக்க வேண்டும். வரித் தாக்கலைத் தவறாமல், முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

சரக்குகளைத் தவணை முறையில் பெறும்போது கடைசித் தவணைப் பொருள்கள் பெறும் போதுதான் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியும். சரக்குகள், சேவைகளை விநியோகிப்பவருக்கு விலைப்பட்டியல் தேதியிலிருந்து 180 நாள்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட உள்ளீட்டு வரி வரவை ரிவர்ஸ் (Reverse) செய்ய வேண்டும். பிறகு எப்போது பணம் செலுத்தப்படுகிறதோ, அப்போதுதான் அந்தச் சரக்கு மற்றும் சேவை களுக்கான உள்ளீட்டு வரி வரவை எடுக்க முடியும்.

மூலதனப் பொருள்களின்மீது தேய்மானம் எடுத்திருந்தால், அதற்கு உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியாது. விலைப்பட்டியல் அல்லது பற்றுக் குறிப்பு இருந்தால், வரித் தாக்கல் செய்த தேதி அல்லது வருடாந்திர வரித் தாக்கல்  செய்த தேதி  இவற்றில் எது கடைசியாக செய்யப்படுகிறதோ, அப்போதுதான் உள்ளீட்டு வரி வரவை எடுக்க முடியும்.’’  

துணி விற்பனை... ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்ய வேண்டுமா?