நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

ரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தங்கம் விஷயத்தில், ‘புதிய நகை வாங்கும்போது மட்டுமல்ல, பழைய நகையை விற்பவர்களும் ஜி.எஸ்.டி  வரியைக் கட்ட வேண்டும்’ என்று தகவல் பரவ, இந்தச் சூழலில் அவசரத்துக்கு நகையை விற்றால் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் செய்வதறியாமல் திகைத்தார்கள் பலர். இப்போது அவசரத் தேவைக்காகக்கூட பழைய நகையை விற்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் பெண்கள். 

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

நகை வியாபாரிகள், மூலப்பொருள்களுக்குச் செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் சலுகை பெறுகின்றனர். இதன்படி, தங்கக் கட்டிகள் வாங்கும்போது செலுத்திய வரியை நகை விற்பனையின்போது வாடிக்கை யாளரிடம் இருந்து திரும்பப் பெறுகின்றனர். பழைய தங்க நகைகளை உருக்கிப் பெறப்படும் தங்கத்துக்கு நகைக் கடைக்காரர்கள் வரி எதுவும் கட்டுவதில்லை. எனவே, மூலப்பொருளுக்கான வரியைத் திரும்பப் பெறும் பேச்சே இல்லை.

ஆனாலும், சென்னையிலும், ஏனைய சிறு நகரங்களிலும் உள்ள நகைக் கடைக்காரர்கள் பழைய நகைக்கு பதிலாக புதிய நகைகளைப் பெற வரும் வாடிக்கையாளர்களிடம் ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
சென்னையைச் சேர்ந்த ஒருவர், தன்னிடம் இருந்த பத்து பவுன் பழைய நகையைத் தந்துவிட்டு, புதிய நகை வாங்க, அதற்கு அந்த நகைக் கடையினர் ஜி.எஸ்.டி வரி என ஒரு தொகையைக் கேட்க, புதிய வரி பற்றிய தெளிவு இல்லாததால், நகைக்கடைக்காரர்கள் கேட்ட பணத்தைத் தந்துவிட்டு வந்திருக்கிறார். பிற்பாடு விஷயம் தெரிந்துகொண்டு, மோசம் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

‘‘நகைக்கடைக்காரர்கள் ஜி.எஸ்.டி வரியால் தங்களுக்கு ஏற்படும் இழப்பை, பழைய நகைகள் விற்பவர்களின் தலையில் கட்டுகிறார்கள்.  பழைய நகைகளின் மதிப்பில் வரிக்குச் சமமான தொகையைப் பிடித்தம் செய்து வழங்குகிறார்கள்’’  எனச் சிலர் நம்மிடம் சொல்ல, உண்மையில் பழைய தங்க நகைகளுக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா,   இது தொடர்பாக நிலவும் குழப்பங்களுக்கு என்ன பதில் என்று தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம்.

“பழைய நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி வரி வாங்குகிறீர்களா” என்று லலிதா ஜுவல்லரியின் மேலாளர் ஞானசேகரனிடம் கேட்டோம்.

‘‘பழைய நகைகளை விற்றுப் பணமாகப் பெறுவது என்றால், வாங்கிய கடையிலேயே விற்பது சரியாக இருக்கும். அப்போது தங்கத்தின் தரத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். ஜி.எஸ்.டி வரி பெறப்படுவதில்லை.   

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

அதேபோல், பழைய நகையை மாற்றிப் புதிய நகையாக வாங்கும் போது வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் புதிய நகைக்கு மட்டுமே 3% ஜி.எஸ்.டி செலுத்து கின்றனர். நகையை மாற்றும்போது பழைய நகைக்கு ஜி.எஸ்.டி வரிப் பிடித்தம் செய்தால், புதிய நகைக்கு அதைச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக் கொள்ளப் படும். பழைய நகையை மாற்றிக் கொள்வதால், வாடிக்கையாளர் களுக்கு வரிப் பிரச்னை எதுவும் இல்லை’’ என்று சொன்னார் ஞானசேகரன்.
மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா, பழைய தங்க நகைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பு பற்றி அளித்திருக்கும் விளக்கமும், பழைய நகைகளை விற்பவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதாக உள்ளது.

‘‘பழைய தங்க நகைகள் அல்லது தங்கக் கட்டிகளை விற்பனை செய்யும்போது 3% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். தங்கத்துக்கு 3%    ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளை செய்துதருவது, பழுது பார்த்துத் தருவது, புதிய வடிவமைப்புக்கு மாற்றுவது ஆகிய பணிகளுக்கு 5% வரி செலுத்த வேண்டும். இதன்படி, ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பழைய தங்க நகைகளை விற்பனை செய்தால் 3% ஜி.எஸ்.டி பிடித்தம் செய்யப்படும். நகைக் கடைக்காரர் வரித் தொகையான 3,000 ரூபாயைக் கழித்துக்கொள்வார். அவர்கள் விற்பனையில் இருந்து கிடைக்கும் தொகையில் புதிய நகைகளை வாங்கினால் அதற்கான வரி, ஏற்கெனவே பழைய நகைகளுக்குச் செலுத்திய வரியில் கழித்துக் கொள்ளப்படும். கலப்பு வரி விதிப்பை விரும்பும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் ஜூலை 21-ம் தேதி முதல்           ஜி.எஸ்.டி.என் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்’’ என்று ஹஸ்முக் ஆதியா தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி பிராக்டீஸ் டாய்கூன், அட்வைசர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் ஃபவுண்டர் லீடர் ஆடிட்டர் சத்யகுமாரிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘நகைக் கடைகளில் பழைய நகைகளை விற்கும்போதும், அவற்றைப் புது நகையாக மாற்றும் போதும் 3% - 4% வரை ஜி.எஸ்.டி என்ற பெயரில் வரி வசூலிக்கப் படுவதாக மக்கள் மத்தியில் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 19-ம் தேதி ஒரு கூட்டம் நடந்தது. அதில் செகண்ட் ஹேண்ட் பொருள் களுக்கு ஜி.எஸ்.டி வராது என்று தெளிவுபடுத்தப்பட்டது. எனவே, பழைய நகையை விற்கும்போது அதற்கு வாடிக்கையாளர் எந்த வரியும் செலுத்தத் தேவை இல்லை. பழைய நகையை மாற்றி புதிய நகையாக வாங்கும்போது அவர்கள் வாங்கும் புதிய நகைக்கு மட்டுமே ஜி.எஸ்.டி வரியாக 3% செலுத்த வேண்டும். பழைய நகைக்கு வரி கேட்டால் வாடிக்கையாளர்கள் தரத் தேவையில்லை’’ என்றார்.

உஷார் மக்களே உஷார்!

- யாழ் ஸ்ரீதேவி