நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?

ஓவியம்: பாரதிராஜா

நிறைய சம்பாதிப்பவர்களில் பலர், நிறையவே முதலீடு செய்கிறார்கள். ஆனால், தங்களுக்குப் பிடித்த, தாங்கள் அறிந்த முதலீட்டுத் திட்டங்களிலேயே முதலீடு செய்கிறார்கள். எதிர்கால இலக்குகளை சரியாக அடைய சரியான திட்டங்களில்   அஸெட் அலோகேஷன் முறைப்படிப்  பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் இன்னும் கூடுதலான பலனைப் பெறமுடியும். 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?

சேலத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு 52 வயது. ஆசிரியர். அவர் மனைவியும் ஆசிரியைதான். அவருக்கு வயது 48. இருவருக்குமாகச் சேர்த்து மாதம் ரூ.97,000 வருமானம் வருகிறது. இவர்களின் ஒரே மகன் கீர்த்திவாசன் 12-ம் வகுப்பு படிக்கிறான். 

“கீர்த்தியை ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என ஆசை. அதற்கான பயிற்சிகளுக்குப் பணம் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே வீட்டுக் கடனுக்கும், கார் கடனுக்கும் இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன். வீட்டுக் கடன் மொத்தம் ரூ.40 லட்சம். இன்னும் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும்.

 2023-ல் நானும், 2027-ல் என் மனைவியும் ஓய்வுபெற்று விடுவோம். எங்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.70 ஆயிரம் பென்ஷன் வரக்கூடும். என் அப்பா மாதம் 25,000 பென்ஷன் வாங்குகிறார். எனவே, என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக நான் உதவ வேண்டியதில்லை. அவர்தான் மாதம் ரூ. 5,000 வரை எனக்குக் கொடுப்பார். அதைத்தான் செலவுகளுக்கு ஈடு செய்துள்ளேன்.

அரசு தந்துள்ள 4 லட்சம் வரையிலான ஹெல்த் கவரேஜ் எங்கள் மூன்று பேருக்கும் உள்ளது. எண்டோவ்மென்ட் பாலிசி இரண்டு உள்ளது. முதிர்வுத் தொகை மொத்தம் நான்கு லட்சம் ரூபாய். சிட் ஃபண்ட் மூலம் அடுத்த ஆண்டு ரூ.3.5 லட்சம் கிடைக்கும்.

அவசர கால நிதியாக மியூச்சுவல் ஃபண்டில்  ரூ.8 லட்சம் உள்ளது. இதை விவசாய நிலம் வாங்க பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளேன். ரூ.30 லட்சம் மதிப்பில் விவசாய நிலத்தை அடுத்த மூன்று வருடங்களில் வாங்க வேண்டும்.

மகனை முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்க்க ரூ.5 லட்சம் தேவை.  2024-ல் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கான செலவுகளுக்கு ரூ.5 லட்சம் தேவை. 2026-ல் மகன் திருமணத்துக்கு ரூ.5 லட்சம் தேவை. இந்தச் செலவுகளை எல்லாம் இன்றைய மதிப்பில் சொல்லியிருக்கிறேன்” என்ற கண்ணன், தன் வரவு செலவு மற்றும் பி.எஃப் விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?

* வருமானம்: ரூ.97,000 + 5,000 (அப்பா தருவது)

* வீட்டுச் செலவுகள்: ரூ.30,000

* கார் லோன் இ.எம்.ஐ: ரூ.6,800 (இன்னும் 41 மாதங்கள்)

*
வீட்டுக் கடன் இ.எம்.ஐ:  ரூ.15,555 (இன்னும் 72 மாதங்கள்)

*
வருமான வரி: ரூ.6,000  *  இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.1,000

*
போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ்: ரூ.800

* ஆர்.டி: ரூ.1,100  *  எஸ்.ஐ.பி: ரூ.3,000

* பேங்க ஆர்.டி.: ரூ.6,000 (வருடாந்திர பண்டிகைச் செலவுகளுக்காக)

* சிட் ஃபண்ட்: ரூ.32,000 (அடுத்த 10 மாதங்கள்)

* மொத்தம்: ரூ.1,02,255

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ்  பார்த்தசாரதி.

“மிஸ்டர் கண்ணன், உங்கள் இருவரின் வருமானத்துக்கு மாதம் ரூ.6,000 வருமான வரி செலுத்துவது அதிகம். உங்கள் இருவரின் பெயரிலும் சேர்த்து வீட்டுக் கடன் வாங்கி இருந்தால் இன்னும் கூடுதலாக வருமான வரியைச் சேமித்திருக்க முடியும்.

இன்றைய நிலையில், நீங்கள் கேட்டுள்ள அனைத்து இலக்குகளுக்கும் முதலீட்டைத் தொடங்க ரூ.80 ஆயிரம் தேவை. ஆனால், சிட் ஃபண்ட் உள்பட தற்போது 37 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்து வருகிறீர்கள்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?



முதலில் விவசாய நிலம் குறித்த உங்கள் இலக்கை மூன்று ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக, நான்கு ஆண்டுகள் எனத் தள்ளிப் போடுங்கள். நான்கு ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.30 லட்சம் தேவையெனில், முதலில் பி.எஃப் லோன் எடுத்து வீட்டுக் கடன் முழுவதையும் அடைத்துவிடுங்கள். அதற்கான இ.எம்.ஐ தொகை ரூ.15,500-யை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு (2018 மற்றும் 2019 மட்டும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். 2021-ல் நிலம் வாங்க பணம் எடுக்க வேண்டும் என்பதால், அப்போது வேறு இலக்குகளுக்கான முதலீட்டை வரி சேமிக்கும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்) முதலீடு செய்யுங்கள். அதன் மூலம் உங்களுக்கு ரூ.9.1 லட்சம் கிடைக்கும். சிட் ஃபண்ட் மூலம் ரூ.3.5 லட்சம் கிடைக்கும். அதனை 2021 வரை முதலீடு செய்கிறபோது ரூ.4.3 லட்சமாகக் கிடைக்கக்கூடும்.

தற்போது மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் வைத்துள்ள ரூ.8 லட்சம், நான்கு ஆண்டுகளில் ரூ.11.7 லட்சமாக இருக்கும். மொத்தம் ரூ.25.1 லட்சம் போக, மீதம் உங்களுக்கு ரூ.4.9 லட்சம் மட்டுமே தேவை. அதற்கு 12% வட்டியில் உங்கள் மனைவியின் ஓய்வுக் காலத்தைக் கணக்கிட்டு கடன் வாங்கினால், ரூ.8,700 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

அடுத்து, தற்போது சிட் ஃபண்டுக்கு மாதம் ரூ.32 ஆயிரம் செலுத்தி வருவதால், மற்ற எல்லா இலக்குகளுக்கான முதலீட்டையும் அடுத்த வருடம் முதலே தொடங்க இயலும்.

உங்கள் மகனின் முதுகலைப் படிப்புக்கு ரூ.6.5 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.15,500 முதலீடு செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு ரூ.7.5 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.9,500 முதலீடு செய்ய வேண்டும். மகனின் திருமணத்துக்கு ரூ.8.5 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.5,500 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் ஓய்வுக்குப் பிறகு விவசாய வருமானம் வர ஆரம்பித்திருக்கும். அப்போதைய சூழலில் பற்றாக்குறை ஏதேனும் இருப்பினும் சுலபமாகச் சமாளிக்கலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முதிர்வுத் தொகையை அவசர கால நிதியாக வைத்துக் கொள்ளவும். உங்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.70 ஆயிரம் பென்ஷன் வரும் என்பதால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குப் போதுமானதாக இருக்கும்.     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?

பரிந்துரை: விவசாய நிலம் வாங்க... டாடா டாக்ஸ் சேவிங்க்ஸ் ஃபண்ட் - ரூ.7,500, மோதிலால் ஓஸ்வால் லாங் டேர்ம் ஈக்விட்டி -ரூ.7,500

மகன் படிப்புக்கு... மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் - ரூ.3,500, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் - ரூ.5,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஹை குரோத் கம்பெனீஸ் - ரூ.4,000, ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூல் - ரூ.3,000

மகன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு... ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் - ரூ.2,500, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்ட் மிட்கேப் - ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் - ரூ.2,500, பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் கிரெடிட் - ரூ.2,000.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878
 
கா.முத்துசூரியா 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 8 - மகனை ஐ.ஏ.எஸ் ஆக்க எவ்வளவு செலவாகும்?