நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

ஜெஃப் பேஜோஸ்... உலகின் நம்பர் 1 பிக் பாஸ்!

லகின் நம்பர்1 பணக்காரராக இத்தனை நாளும் இருந்தார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ். அந்த இடத்துக்கு இப்போது வந்திருக்கிறார் அமேசானின் ஜெஃப் பேஜோஸ்.  

BIZ பாக்ஸ்

நியூயார்க் பங்குச் சந்தையில் அமேசான் பங்கின் விலை கணிசமாக உயர்ந்ததால், பில்கேட்ஸைவிட பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார் பேஜோஸ்.

அமேசானின் பங்கு விலை 1,065.92 டாலரை எட்டியது. இதனால் பேஜோஸின் நிகர சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலர் மட்டுமே.

நம்பர் 1 இடத்தைத் தொடர்ந்து தக்க வச்சுக்குவீங்களா பிக்பாஸ்?

BIZ பாக்ஸ்

குறையும் விவசாயிகளின் தற்கொலை!

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது கடந்த இருபது ஆண்டுகளில் (1996-2016) இல்லாத அளவுக்குக் குறைந்து உள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

2016-ல் இந்தியா முழுக்க 11,458 விவசாயிகள் கொண்டார்கள். 1995-ல் 10,720 விவசாயிகளும், 2004-ல் 18,241 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டார்களாம்.

எனினும், 2016-ம் ஆண்டுக்கான நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவின் (NCRB) அறிக்கை இன்னும் வெளியாக வில்லை. அது வந்த பின்பே சரியான புள்ளிவிவரம் கிடைக்கும் என்கிறார்.

விவசாயிகளின் வேதனை என்றுதான் தீரப் போகிறதோ?

BIZ பாக்ஸ்

அதிக சம்பளம் வாங்கும் ஆட்டோ நிறுவன சி.இ.ஓ-க்கள்!

ன்றையத் தேதியில் ஆட்டோ நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களின் சம்பளம் ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப்பின் சி.இ.ஓ பவன் முன்ஜாலின் சம்பளம் 2015-ல் ரூ.44.62 கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.59.66 கோடியாக உயர்ந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் ராஜீவ் பஜாஜின் சம்பளம் 2015-ல் ரூ.20.49 கோடியாகவும் 2017-ல் ரூ.25.59 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

2015-ல் ரூ.6.64 கோடியாக இருந்த அசோக் லேலாண்டின் வினோத் தாசரியின் சம்பளம், 2017-ல் ரூ.12.89 கோடியாக உயர்ந்திருக்கிறது.  கீப் இட் அப்!

BIZ பாக்ஸ்

ஆக்ஸிஸ் வங்கியின் சி.இ.ஓ. சீக்கா சர்மா!

டுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் சி.இ.ஓ-வாக மறுநியமனம் செய்யப்பட்டிருக்கிறார்  சீக்கா சர்மா. இவரது  பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுவதைத் தொடர்ந்து, ஆக்ஸிஸ் வங்கியின் அடுத்த சி.இ.ஓ-வைத் தேடும் பணி தொடங்கியது.

இந்த நிலையில், டாடா கேப்பிட்டல் நிறுவனத்துக்கு சீக்கா சர்மா மாறப் போவதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஸ் வங்கியின் சி.இ.ஓ மற்றும் எம்.டி-யாக மறுபடியும் நியமிக்கப்பட்டிருக்கிறார் சீக்கா.

கன்கிராட்ஸ் மேடம்!

BIZ பாக்ஸ்

ஹாலிவுட் ஸ்டார்களின் உதவும் உள்ளம்!

‘டைட்டானிக்’ படத்தில் நடித்த லியனார்டோ டிகேப்ரியோவும் கேட் வின்சிலட்டும் இணைந்து நற்காரியங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தைச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், ஆட்டிஸத்தினால் பாதுகாக்கப்பட்டவர்களுக்காகவும் செலவிடப் போவதாக இருவரும் அறிவித்துள்ளனர். கோடம்பாக்கம், யுவர் அட்டேன்ஷன் ப்ளீஸ்!

50 கோடி - 2018-ல் இந்தியாவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வோல்ட் (VoLTE) ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை!

ரூ.385 கோடி - ஸ்நாப்டீல் நிறுவனத்தின் ஃப்ரீ சார்ஜ் நிறுவனத்தை வாங்க, ஆக்ஸிஸ் வங்கிக் கொடுத்த தொகை!

ஸ்நாப்டீலை 850 மில்லியன் டாலர் தந்து, ஃப்ளிப்கார்ட் வாங்கலாம் என்கிற தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் உள்ள தனது நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களில் ரூ.3,798 கோடியை அமேசான் முதலீடு செய்துள்ளது. அமேசான் செல்லர் சர்வீசஸில் ரூ.1,680 கோடியும், அமேசான் டேட்டா சர்வீசஸில் ரூ.1,381 கோடியும், பிற நிறுவனங்களில் சுமார் ரூ.740 கோடியை முதலீடு செய்துள்ளது. அப்ப, இன்னும் அதிக தள்ளுபடியை எதிர்பார்க்கலாமா?