நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

@ ரவிக்குமார்

“என் வயது 39. இதுவரை சேமிப்பு என்று எதுவும் இல்லை. எங்கள் மாதச் செலவு ரூ.40,000. என் மகளுக்கு ஒரு வயதாகிறது. என்னால் மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய முடியும். இதனை மகளின் மேற்படிப்புக்காகவும்  என் ஓய்வுக் காலத்துக்காகவும் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும்?” 
 
‘‘உங்கள் குழந்தையின் கல்லூரிப் படிப்புக்கு இன்னும் 16 வருடங்கள் உள்ளன. அதேபோல், உங்கள் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 19 வருடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில், இந்த இரு தேவைகளுக்காகவும் தலா 5,000 ரூபாயை பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.

உங்களின் வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் மாத முதலீட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள். குழந்தையின் கல்விக்காக கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் மாதம் 5,000 ரூபாயும், உங்கள் ஓய்வுக் காலத்துக்காக பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்டில் மாதம் 5,000 ரூபாயும் முதலீடு செய்யவும்.”

@ பாலா


“நான் கடந்த மூன்று வருடங்களாக ஆக்ஸிஸ் லாங் டேர்ம் -ல் மாதம் ரூ.5000 முதலீடு செய்து வருகிறேன். இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா, வேறு     இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மாற்றிக்கொள்ளலாமா?”

ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?



“ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட், கடந்த ஓராண்டு காலத்தில் தன் பெஞ்ச்மார்க் குறியீடான பி.எஸ்.இ 200-ஐ விடக் குறைவான வருமானத்தையே கொடுத்துள்ளது. அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறியீட்டை ஒட்டியே வருமானத்தைக் கொடுத்துள்ளது.

ஆகவே, நீங்கள் அக்ரஸ்ஸிவான வருமானத்தை எதிர்பார்ப்பவர் என்றால், பிரின்சிபல் டாக்ஸ் சேவிங்ஸ் அல்லது மோதிலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு லாங் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம். சற்றுக் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்பினால், டி.எஸ்.பி. – பி.ஆர் டாக்ஸ் சேவர் ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளலாம்.”

@ கே.ராமச்சந்திரன்


“நான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 2010-லிருந்து மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பித்தேன். பிறகு 2015 மற்றும் 2016 -லிருந்து மேலும் மாதம் தலா ரூ.10,000 என முதலீட்டை அதிகரித்தேன். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் என் மகனுக்காக இந்த முதலீட்டைச் செய்து வருகிறேன். தற்போது நல்ல லாபத்தில் இருக்கும் இந்த ஃபண்டுகளை, சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் என்ன செய்ய வேண்டும்? இந்த முதலீட்டைத் தொடரலாமா, வெளியேறிவிடலாமா?”


‘‘வெளிநாட்டில் வாழும் உங்கள் மகனுக்காக மியூச்சுவல் ஃபண்டுகளின்  பல்வேறு திட்டங்களில் மாதம் ரூ.30,000 பிரித்து முதலீடு செய்வது குறித்து மகிழ்ச்சி.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதன் முழு நோக்கமே, சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பாராமல், சராசரி செய்வதற் காகத்தான். சந்தையின் உச்சம் எது, இறக்கம்  எது என்று யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.  

எனவே, இப்போது போலவே எப்போதும் உங்கள் முதலீடு சென்றுகொண்டே இருக்கட்டும். உங்கள் மகனுக்கு எப்போது இந்தப் பணம் தேவையாக இருக்கிறதோ, அதற்குச் சில வருடங்கள் முன்பு பணத்தை எடுப்பதற்குத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.’’ 

ஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?