நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில்  தாம்பரத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின.    

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

முதலில், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். முதலீட்டில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களான இலக்குகள், திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். மேலும், குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்.   

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் எஸ். குருராஜ், ‘‘எது நல்ல முதலீடு என்பதன் இலக்கணத்தை அறிந்துகொள்வது அவசியம். பாதுகாப்பு, எளிதில் பணமாக்குதல், நல்ல வருமானம், வரிச் சேமிப்பு ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ள முதலீடே நல்ல முதலீடு. இந்த அம்சங்கள்  இருக்கும் முதலீடுகளைத் தேர்வு செய்தால், நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் லாபத்துக்கு  எந்த கேரன்டியும் கிடையாது’’ என்றார்.   

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா?

முதலீட்டு ஆலோசகர், வ.நாகப்பன் சிறப்புரை ஆற்றினார். அவர் எடுத்த உடனேயே, ‘‘பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்” என்று கூட்டத்துக்கு வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். பலரும் பல பதில்களை சொல்ல, ‘‘முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால் செல்வந்தன் ஆகலாம்” என்றவர், அது எப்படி என்பதை விளக்கினார். சென்செக்ஸும், நிஃப்டியும் உச்சத்தில் வர்த்தகமாகும் நிலையில், பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார். இறுதியில், வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.

- சி.சரவணன் 

படங்கள்: சி.ரவிக்குமார்