நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?

ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?

ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

``ஜி.எஸ்.டி வரியை அதிகமாக வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா?”

ராமநாதன், காரைக்குடி   

ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?

``நுகர்வோர் நீதிமன்றம் என்பது சேவை சம்பந்தப்பட்டது; ஒரு பொருளை விற்கும்போது, சேவைக் குறைபாடு இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஆனால், ஜி.எஸ்.டி என்பது வரி சம்பந்தப்பட்டது. எனவே, நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.

ஆனால், நீங்கள் உங்கள் புகாரை முறையற்ற லாபத் தடுப்புப் பிரிவிடம் முறையிடலாம். இந்த முறையற்ற லாபத் தடுப்பு முறையின்கீழ் உள்ளீட்டு வரி அல்லது குறைக்கப்பட்ட வரி விகிதத்தின் காரணமாகப் பொருள்களின் விலை குறைக்கப்பட வில்லை என்று அரசு கண்டறிந்தால், அவர் களுக்குத் தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. இது ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைப்படி நடக்க உள்ளது.

முறையான ஒரு லாப அளவை நிறுவனங்கள் கடைப்பிடிக்கவில்லை எனில், பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்து,  ஜி.எஸ்.டி-யின் மூலம் கிடைக்கும் லாபம்  விற்பனையாளர்களுக்குச் சென்றுவிடும். முறையற்ற லாப அளவைத் தடுக்க தனி நிலைக் குழுவை ஒன்றை ஜி.எஸ்.டி கவுன்சில் அமைத்து உள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி-யால் ஏற்படும் விலைக் குறைப்பு அல்லது உள்ளீட்டு வரி வரவின் லாபங்களை நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ் தர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரவில்லை என எழுத்துபூர்வமானக் குற்றச்சாட்டு வந்தால், இரு  மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?முதலில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் கணக்குவழக்குகள் சரிபார்க்கப்படும். விலை குறைக்கப்படவில்லை என்றால், விலையைக் குறைத்து அதற்குரியப் பணத்தை வாடிக்கை யாளர்களுக்குக் கொடுக்க இந்த நிலைக்குழு பரிந்துரைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாகப் பணம் கொடுத்து, பிறகு குறைக்கப்பட்ட அந்த வித்தியாசத் தொகையை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். அடுத்தகட்டமாக,             ஜி.எஸ்.டி பதிவு ரத்து செய்யப்படும். மேலும், தொழில் செய்யவே தகுதியற்றவர்கள் எனத் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

முறையற்ற லாப அளவு தடுப்பு நிலைக் குழுவில் மத்திய, மாநில வரி அதிகாரிகள் இருப்பார்கள். நிறுவனங்களின்மீதான குற்றச்சாட்டு  குறித்து, முதலில் மாநில அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். பிறகு நிலைக் குழுவுக்குச் சென்று முடிவுகள் எடுக்கப்படும்.”

``நான் ஜி.எஸ்.டி பதிவு வைத்துள்ளேன். வங்கிக் கணக்குத் தொடங்க இது தேவைப்படுமா?’’


ராஜ மாணிக்கம், கோவை

``நீங்கள் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க,  ஜி.எஸ்.டி எண் தேவையில்லை. வங்கிக் கணக்கு ஆரம்பிக்க, கே.ஒய்.சி விதிமுறைகளின்படி அதற்குரிய விலாசம், பெயர் ஆகியவற்றுக்கான ஆதாரங்களைக் கொடுத்து வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாம். ஆனால், தற்போது வங்கி அதிகாரிகள் அனைத்து வியாபாரக் கணக்கு களுக்கும் பான் எண் கேட்கும் முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

மேலும், நீங்கள் ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் பதிவு செய்ய பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அனைத்தையும் ஆன்லைனில் ஜி.எஸ்.டி வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வலைதளத்தில் மட்டுமே பதிவு, வரித் தாக்கல், ரீஃபண்ட் என அனைத்துமே செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்ய பெயர், நிரந்தரக் கணக்கு எண், இ-மெயில், மொபைல் எண் ஆகியவற்றை `பகுதி ஏ’ எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.     ஜி.எஸ்.டி வலைதளத்தில் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுக்கப்படும். பிறகு, `பகுதி பி’ விண்ணப்பத்தை உரிய படிவத்தில், உரிய ஆவணங்களுடன் புகைப்படம், வியாபார அமைப்புக்கான சான்றிதழ் என இதர ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை டிஜிட்டல் கையெழுத்து மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, மூன்று நாள் களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். அதிகாரி களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், மூன்று நாள்களுக்குள் கேட்கப்படும். அதற்கான பதிலை ஏழு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பதில் விளக்கம் சரிபார்க்கப்பட்டு, ஏழு நாள்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். ஏழு நாள்களுக்குள் பதில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.” 

- தொகுப்பு: சோ.கார்த்திகேயன் 

ஜி.எஸ்.டி... - அதிகவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?