நடப்பு
Published:Updated:

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
News
தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?

ந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, 331 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தை பி.எஸ்.இ, என்.எஸ்.இ ஆகிய இரண்டு வர்த்தக எக்ஸ்சேஞ்சுகளிலும் தடை செய்வதாக கடந்த வாரத்தில் அறிவித்தது. செபி அறிவித்த பட்டியலில் சிறிய நிறுவனங்கள் பல இருந்தாலும், சில பெரிய நிறுவனங்கள் இருந்ததும் ஆச்சர்யம்தான். குறிப்பாக,       ஜே குமார் இன்ஃப்ரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரிஸ், பர்சவ்நாத் டெவலப்பர் போன்றவை கடந்த வாரம் வரை சந்தையில் பலராலும் வாங்கி, விற்கப்பட்டவை.  

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?

இந்த நிலையில், இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணரும் கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவருமான ரெஜி தாமஸிடம் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.

“331 போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் நடப்பதாகச் சந்தேகிப்பதாக மத்திய  நிறுவன விவகாரத் துறை  அமைச்சகம் கூறியதைத் தொடர்ந்து, சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அவற்றின் பங்கு வர்த்தகத்துக்குத் தடை விதித்துள்ளது.

செபி தடை செய்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை,  இந்தத் தடை குறித்து மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், தாங்கள் போலி நிறுவனங்கள் அல்ல என்றும், முறையான பிசினஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன. ஜே குமார் இன்ஃப்ரா, பர்சவ்நாத் டெவலப்பர்ஸ் மற்றும் கவித் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவை செபியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியுள்ளன. என்றாலும்,  செபி தடை விதித்துள்ள நிறுவனங்களின் பட்டியலில் பெரும்பாலானவை ஷெல் கம்பெனிகள் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது மிகப் பெரிய பிரச்னை இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கு அல்ல, இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள, பங்கு வைத்துள்ள முதலீட்டாளர்களுக்குதான். பல லட்சம் முதலீட்டாளர்கள், தடை செய்யப் பட்டுள்ள இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களின் மொத்தப் பணமும் மாட்டிக் கொண்டுவிட்டது. இந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி. 

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகள்... - வங்கிய பங்குகளை என்ன செய்வது?



ஏற்கெனவே நன்கு செயல்பட்டுவரும்,   லாபம் ஈட்டும் வலுவான அடிப்படைகளைக்  கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும்பட்சத்தில் நீங்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் கேட்கப்படும் ஆவணங்களை, அந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் உரிய அமைப்பிடம் சமர்ப்பித்து, தடையிலிருந்து வெளிவந்துவிடும் என்று நம்பலாம்.

தடை செய்யப்பட்ட ஷெல் கம்பெனிகளில் ஜே குமார் இன்ஃப்ரா, பிரகாஷ் இண்டஸ்ட்ரிஸ், பர்சவ்நாத் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.1,000 முதல் ரூ.2,000 கோடிக்கும் மேல் உள்ளது. மேலும், இரண்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கிறது.

செபி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையில் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் என்பது ஒரு சிறு காரணிதான். இந்த ஒரு விஷயத்தை  மட்டும் அடிப்படையாக வைத்து,  இந்தப் பங்குகளை வைத்துக்கொள்வதா அல்லது விற்பதா என முடிவெடுக்கக் கூடாது.

இந்த நிறுவனங்களின் நிர்வாகம், பிசினஸ் மாடல், வருவாய் மற்றும் லாபம் போன்ற அடிப்படையில்தான் இந்த நிறுவனங்களின் பங்குகளில்   முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று தீர்மானிக்கலாம். இன்னும் சில நாள்களில் நடக்கும் தணிக்கைக்குப் பிறகே இந்தக் கம்பெனிகளின் அடிப்படைகள் பற்றி தெரியவரும். அதன்பிறகே இந்த நிறுவனங்களின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியவரும்.

நீங்கள் முதலீடு செய்திருக்கும் இந்த நிறுவனங்கள் கடந்த காலத்தில் கணிசமான  லாபம் ஈட்டாமல் இருந்திருந்தாலோ அல்லது அதன் பிசினஸ் செயல்பாடுகள் முதலீடு செய்யும் அளவுக்குத் தேவையான தரத்தில் இல்லாமல் இருந்தாலோ (பார்க்க bseindia.com, nseindia.com) அந்தப் பங்கிலிருந்து வெளியேறிவிடுவது நல்லது.

செபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த 331 நிறுவனங்களின் பங்குகள் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே, டிரேட் டூ டிரேட் வகையின் கீழ் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும். அதாவது, மாதத்தின் முதல் திங்கள்கிழமை மட்டுமே வர்த்தகமாகும். எனவே, இந்தப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் அந்த நிறுவனங்கள் தொடர்பாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். ஒரு சில நல்ல நிறுவனங்களின் பங்குகளைத் தவிர, மற்ற நிறுவனங்களின் பங்குகளிலிருந்து நிரந்தரமாக வெளியேறிவிடுவதே நல்லது’’ என்று முடித்தார்.

இத்தகைய பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது!

- ஜெ.சரவணன்