நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

கடந்த இதழில் தங்கத்தின் விலைப்போக்கு பற்றி நாம் சொன்னது... ‘28300 என்ற எல்லையைத் தங்கம் இன்னும் வலுவாகத் தக்கவைத்துக்கொண்டு உள்ளது. மேலும், ஒரு சுத்தியல் அமைப்பையும் தோற்றுவித்துள்ளது. இதனால் இந்த ஆதரவு சற்றே வலுப்பெற்றுள்ளதாகச் சொல்லலாம். அதாவது, 29750 என்பது தற்போதைய முக்கியத் தடைநிலையாக உள்ளது. அதை உறுதி செய்வது போல, போன வாரம் திங்களன்று ஒரு டோஜி தோன்றி ஏற்றத்தை வலிமையாகத் தடுத்துள்ளது’ எனச் சென்ற வாரம் சொன்னோம்.

கமாடிட்டி டிரேடிங்!



தங்கம் சென்ற வாரம், நாம் தந்துள்ள ஆதரவு விலையைத் தாண்டி மேலே ஏறியது. சென்ற திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் 28300 என்ற ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்தது. பின்னர் புதன் அன்று மிகப் பெரிய ஏற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த ஏற்றமானது, நாம் குறிப்பிட்டிருந்த 29750 என்ற தடைநிலையை உடைத்தது. அடுத்த வியாழன் அன்று தடையைத் தாண்டிய நிலையில், வலிமையான பிரேக்அவுட் நிகழ்வை நடத்திக் காட்டியது. மேலே உச்சமாக 29173-யைத் தொட்டது. அடுத்து வெள்ளிக்கிழமை கொஞ்சம் இளைப்பாற ஆரம்பித்தது.

நன்கு ஏறிய நிலையில், 29250 என்ற எல்லை உடனடி தடைநிலையாக உள்ளது. இதை உடைத்தால், இந்த நிலை இன்னும் தொடர வாய்ப்புள்ளது. கீழே 29000 என்பது உடனடி ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப் பட்டால், ஒரு ரிட்ரேஸ்மென்ட் நிகழலாம்.  

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

தங்கத்தைப் போன்றே, வெள்ளியும் ஒரு வலிமையைக் காட்டியுள்ளது. ‘மேலே 38700 என்ற தடைநிலை மிக வலுவாக உள்ளது. இது  உடைக்கப் பட்டால்தான், காளைகள் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைவார்கள்’ என்று கடந்த வாரம் சொன்னோம்.    

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளியின் ஏற்றத்தைக் காட்ட, காளைகள் ஆட்டத்தில் நுழைந்தார்கள். ஆதரவு விலையான 37300-யைத் தக்கவைத்ததோடு மட்டுமில்லாமல், மேலே 38700 என்ற தடையை உடைத்து ஏறி, வியாழன் அன்று 39534 என்ற உச்சத்தைத் தொட்டது. வெள்ளி அன்று கொஞ்சம் தடுமாற்றத்தைக் காட்டியது.

தற்போது 39600 என்பது உடனடித் தடை நிலையாக உள்ளது. முன்பு தடையாக இருந்த 38700 என்பது உடனடி ஆதரவாக மாறியுள்ளது.   

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை,  ‘கீழே 3100-யை உடைக்காதவரை ஏற்றம்தான். மேலே தடைநிலை 3250 ஆகும்’ என்று கடந்த வாரம் சொன்னோம்.

கச்சா எண்ணெய், தொடர்ந்து 3100-க்கும் 3250-க்கும் இடையே சுழன்றது. மேலே ஏறி 3228 வரை சென்றது. பின் ஒரு ஷூட்டிங் ஸ்டாரை உருவாக்கி மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது. தற்போதைய ஆதரவு எல்லையான 3100-யை உடைத்துக்கொண்டு இருக்கிறது. கரடிகள் அதில் வெற்றி பெற்றால், இறக்கம் கணிசமானதாக இருக்கும்.

கீழ்காணும் விலைகளில் முக்கியமான எல்லை 2980 ஆகும். அதுவும் உடைக்கப்பட்டால், பெரிய இறக்கத்துக்கு வழிவகுக்கலாம். மேலே 3250-யைத் தாண்டினால் காளைகள் ஆட்டத்துக்குள் வருவார்கள்.   

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

‘மென்தா ஆயில் வலிமையான ஏற்றத்தில் இருக்கிறது. என்றாலும், 1180-ல் ஒரு வலிமையான இடத்தில் தடுப்புக்கான முயற்சி நடந்து வருகிறது’ என்று கடந்த இதழில் சொல்லியிருந்தோம். நாம் சொன்னபடியே  அந்த நிலையைத் தாண்ட முடியாமல், மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் 1090 என்ற ஆதரவு எல்லையில் தடுக்கப்படுகிறது. அதையும் உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம்.  

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

கடந்த இதழில், ‘காட்டன் மேலே 18640 என்பதைத் தடைநிலையாகக்  கொண்டு இயங்கி வருகிறது’ என்று எழுதியிருந்தோம். சென்ற வாரம் அதை உடைத்து வலிமையாக ஏறி 19140 என்ற புள்ளியைத் தொட்டது.  கடந்த வியாழன் அன்று கரடிகளுக்கான கேன்டில் தோன்றி, எல்லா ஏற்றத்தையும் இழக்க வைத்தது. மேலும், கடந்த வாரத்தில் எங்கிருந்து ஏறியதோ, அந்த இடத்துக்கு மீண்டும் காட்டன் வந்துவிட்டது. தற்போது 18450 என்பது முக்கிய ஆதரவு நிலையாகும். மேலே 18700 என்பது முக்கியமான தடை நிலை ஆகும்.