
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி
சென்ற வாரம் ஆன்லைனில் சொன்னது... “தற்போது 29,100 என்ற எல்லைக்கு அருகாமையில் முடிந்துள்ள நிலையில், இந்த எல்லையே ஒரு பிவட் (pivot) புள்ளியாகச் செயல்படலாம். மேலே தொடர்ந்து ஏறும்போது 29,250 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்படலாம். அந்த நகர்வு மேலும் வலுப்பெற்று, 29,550 என்கிற அடுத்த தடை நிலையை நோக்கி மெள்ள மெள்ள நகர ஆரம்பிக்கலாம். இந்தத் தடையை உடைத்து மேலே ஏறினால், அடுத்த முக்கியத் தடைநிலை 29,750 ஆகும்.”

கடந்த வாரத்தில் நாம் சொன்னதுபோலவே, தங்கம் மளமளவென்று ஏறியது. இனி என்ன நடக்கலாம்?
தங்கம் ஏறிய வேகத்தில், தற்போது 29,750 என்ற அடுத்த தடைநிலையையும் உடைத்து ஏற முயற்சி செய்து வருகிறது. இந்த ஏற்றம் மேலே 29,950 என்ற எல்லையில் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப் படலாம். இந்த எல்லையையும் உடைத்து ஏறினால், மிக மிக வலிமையான அடுத்த கட்ட ஏற்றத்துக்குத் தயாராகலாம். இந்த ஏற்றம் அடுத்த 30,150, 30,420 போன்ற எல்லைகளைத் தொடலாம். அடுத்து ஏறும்போது 30,680 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்படலாம். கீழே 29,600 என்பது உடனடி ஆதரவாக உள்ளது. இது உடைக்கப்பட்டுக் கீழே இறங்கினால், 29,420, 29,180 மற்றும் 28,900 என்ற எல்லைகளை அடையலாம்.

வெள்ளி மினி
சென்ற வாரம் சொன்னது... “காளை, கரடிச் சண்டையில் தற்போது மேலே 40,000 என்ற எல்லையிலும், கீழே 39,200 என்ற எல்லையிலும் தடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த வாரம் வெள்ளி மேலே 40,000 என்ற எல்லையை உடைக்கும்போது புதிய ஏற்றம் நிகழலாம்.”
வெள்ளி விஷயத்தில் நாம் சொன்னது நிகழ்ந்தது. சென்ற வாரம் திங்கள் அன்று 40,000 புள்ளிகள் உடைக்கப்பட்டு ஏற ஆரம்பித்தது. அது செவ்வாய் அன்றும் தொடர்ந்து 40,950 வரை தொடர்ந்தது. அதன்பின் இரண்டு நாள்கள் இறக்கம் நிகழ்ந்து, மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், இனி என்ன நடக்கலாம்?

தற்போதைய ஏற்றம், அதன் முந்தைய உச்சமான 40,950 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படலாம். இதை உடைத்தால் மிகப் பெரிய பிரேக்அவுட் நிகழலாம். இந்த ஏற்றம் அடுத்தடுத்து 41,300, 41,900 மற்றும் 42,500 வரைகூட செல்லலாம். கீழே 40,250 என்பது மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இந்த ஆதரவு உடைக்கப்பட்டால், பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு 39,400 நோக்கி நகரலாம்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், அது ஒரு டவுன் டிரென்ட் சேனலில் உள்ளதாகச் சொல்லலாம். இதற்குக் கீழ் எல்லை 2,930 ஆகும். இதை உடைக்கப்படாத வரை, எல்லா இறங்கங்களிலும், இந்த எல்லைக்கு அருகாமையில் வாங்கி விற்கலாம். தற்போது மேல் எல்லை என்பது 3,065 என்ற எல்லையில் உள்ளது. எனவே, 3,065-யைத் தாண்டாத வரை 3,065-க்கு அருகாமையில் விற்று வாங்கும் முறையைக் கையாளலாம். மேலே 3,065-ஐ உடைத்து ஏறும்போது மிகப் பெரிய ஏற்றம் வரலாம். கீழே 2,930 உடைத்தால் மிகப் பெரிய வீழ்ச்சி வரலாம்.

மென்தா ஆயில்
மென்தா ஆயில் இன்னும் ஒரு தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. நடுவே ஒரு ரீடிரேஸ்மென்ட் நிகழ்ந்தது. இந்த ரீடிரேஸ்மென்ட் 29.08.17 அன்று முடிவுக்கு வந்து அடுத்த கட்ட ஏற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த ஏற்றத்தின் அடுத்த தடை நிலை 1,225 ஆகும். இதை உடைத்து ஏறினால் பெரிய ஏற்றம் நிகழலாம். கீழே 1,170 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

காட்டன்
கடந்த இரண்டு வார இறக்கத்துக்குப்பின் ஒரு புல்பேக் ரேலி நிகழ்ந்தது. கீழே 18,190-ல் இருந்து ஏறிய புல்பேக் ரேலி, தற்போது 18,800 என்ற எல்லையில் வலிமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, 18,800-யைத் தாண்டி ஏறினால், அந்த இறக்கம் முடிவுக்கு வந்து புதிய ஏற்றத்துக்குத் தயாராகலாம். 18,800-க்கும் 18,400-க்கும் இடையே தற்போது சுழல்கிறது.