நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ பாஸ்கரன்.

என் வயது 39. எனக்கு ஏழு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் மாத சம்பளம் ரூ.80,000. பின்வரும் ஃபண்டுகளில் மாதந்தோறும் ரூ.12,000 முதலீடு செய்துவருகிறேன்.  

ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.3,000, கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி - ரூ.3,000, கோடக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் - ரூ.3,000.

அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் எனக்கு வேண்டும். எனது இலக்கினை எட்ட உதவ முடியுமா?  

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?

‘‘நீங்கள் மாதத்துக்கு ரூ.35,000 முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால்,  இன்னும் 12 வருடங்களில் உங்களுக்கு ரூ.1 கோடி கார்ப்பஸ் கிடைக்கும். தற்போது மாதந்தோறும் ரூ.12,000 முதலீடு செய்து வருகிறீர்கள். இத்துடன் கூடுதலாக ரூ.23,000 சேர்த்து கீழ்கண்டவாறு உங்களின் முதலீட்டை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?



மல்ட்டி கேப்  வகையைச் சேர்ந்த கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் 11,000 ரூபாயும், பிரின்சிபல் குரோத் ஃபண்டில் 11,000 ரூபாயும், மிட்கேப் வகையைச் சேர்ந்த மிரே எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் 13,000 ரூபாயும் முதலீடு செய்யுங்கள்.

@ எஸ்.பாலசுப்பிரமணியன்.

எனக்கு 47 வயதாகிறது. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். பின்வரும் ஃபண்ட் திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். தற்போது மாதந்தோறும் எஸ்.ஐ.பி. முறையில் ரூ.14,000 முதலீடு செய்கிறேன். இதை ரூ.20,0000-ஆகவும் உயர்த்த முடியும். நான் முதலீடு செய்துவரும் ஃபண்ட் விவரங்கள்...

   ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் குரோத் ஃபண்ட் - ரூ.4,000, ஃப்ராங்க்ளின் ஹை குரோத் கம்பெனீஸ் - ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்ட் - ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் - ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் - ரூ.2,000, ரிலையன்ஸ் ஃபார்மா ஃபண்ட் - ரூ.2,000.

  இந்த ஃபண்டுகளில் நான் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா? 

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?

‘‘நீங்கள் முதலீடு செய்துவரும் ஃபண்டுகளில், சில மிக அதிகமான அளவு நிர்வகிக்கும் தொகையைக் கொண்டுள்ளன. (பார்க்க மேலே உள்ள அட்டவணை) முதல் மூன்று ஃபண்டுகளும் ரூ.10,000 கோடிக்கும் மேலான தொகையை நிர்வகித்து வருகின்றன. இதுபோன்ற அதிகமான தொகையை நிர்வகிக்கும் ஃபண்டுகளில் ஏதேனும் முதலீட்டு முடிவுகள் தவறாக எடுக்கப்பட்டு விட்டால், அதைச் சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆகவே, பெரிய சொத்துக்களை நிர்வாகம் செய்யும் ஃபண்டுகளில் முதலீட்டை சற்று யோசித்து மேற்கொள்ள வேண்டும். 

எவ்வளவு காலம் வரை உங்களால் முதலீடு செய்ய முடியும் அல்லது எப்போது பணம் தேவைப்படும் என்பதைப் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. உங்களின் 58-வது வயது வரை உங்களால் முதலீடு செய்ய முடியும் என எடுத்துக் கொண்டுள்ளேன். அதன் அடிப்படையில் உங்களின் முதலீட்டை பின்வருமாறு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.

மல்ட்டி கேப் வகையைச் சேர்ந்த பிரின்சிபல் குரோத் ஃபண்டில் மாதம் ரூ.10,000.

மிட் கேப் வகையைச் சேர்ந்த எல் அண்ட் டி மிட் கேப் ஃபண்டில் மாதம் ரூ.10,000.’’  

ஃபண்ட் கார்னர் - 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி... மாதம் எவ்வளவு முதலீடு?