மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி?

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதி செய்யும் பொருளுக்கான விலை என்பது பொருளின் உற்பத்தி முதல் அதை விற்பனை செய்யும் வரையிலான செலவினங்கள் மற்றும் லாபம் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். பொருளின் உற்பத்தி விலை மற்றும் லாபம் என்பது நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், பொருள்களை விற்பனை செய்யும் வரை அதற்காக ஆகும் செலவினங்களைப் பற்றி தெரிந்துகொண்டால்தான் சரியான விலையை நம்மால் நிர்ணயிக்க முடியும்.  

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி?

அதற்கு இன்கோ டேர்ம்ஸ் (IncoTerms-International commercial terms), அதாவது சர்வதேச சரக்கு வணிக விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் லோக்கல் ட்ரான்ஸ்போர்ட்டும், ஷிப்மென்டும் அடங்கும். இவற்றை எளிதில் புரிந்துகொள்வதற்காக நாம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அந்த நான்கு பிரிவுகளில் மொத்தம் 11 வகைகளில் சரக்கு வணிகப் போக்குவரத்தைச் செயல்படுத்தலாம்.

E- EXWORK : இதில் இறக்குமதி யாளர் நம்முடைய இடத்துக்கே வந்து பொருளை ஏஜென்ட் மூலம் எடுத்துக்கொள்வார். ஆனால், வந்து செல்வதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டிவரும். 

F - FCA, FAS, FOB இந்த மூன்று வகைகளும் carriage unpaid வகையில் செயல்படுத்தப்படும். அதாவது, துறைமுகம் வரை பொருளைக் கொண்டுவந்து தந்துவிட வேண்டும். இதில் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் (Frieght) செலுத்த வேண்டியதில்லை.

C- CFR - cost and frieght, CIF- cost, insurance and frieght, CPT- carriage paid to,  CIP -Cost, insurance paid to - இந்த நான்கு வகைகளும் carriage paid வகையில் செயல்படுத்தப்படும். இந்த வகைகளில்கப்பல் போக்குவரத்துக் கட்டணம் பணம் செலுத்த வேண்டும்.

அதுபோக, இன்ஷூரன்ஸுக்கான கட்டணமும் கட்ட வேண்டியிருந்தால் அதையும் கட்ட வேண்டியிருக்கும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி?D - இறக்குமதியாளரின் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது. இதில் மூன்று வகை உள்ளன. 1. Delivary at terminal: துறைமுகத்தில் சேர்ப்பது, 2. delivary at place: இறக்குமதியாளரின் இடத்தில் சேர்ப்பது. 3. DTP - delivery duty paid - இறக்குமதியாளரிடம் பொருளைச் சேர்ப்பதோடு, அவர் செலுத்த வேண்டிய வரியையும் செலுத்துவது.

இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை மூன்று வழிமுறைகள். அவை FOB, CNF மற்றும் CIF. இந்த சரக்குப் போக்குவரத்து முறைகளின்படி நாம் செய்யும் செலவினங்களைக் கணக்கிட்டு அவற்றை, பொருளின் விலையை நிர்ணயம் செய்யும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

சர்வதேச அளவிலான சரக்கு வணிகத்தில் என்னென்ன கட்டணங்கள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

1. பொருளை நம் இடத்திலிருந்து துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லத் தேவையான போக்குவரத்துச் செலவு, 2. சி.ஹெச்.ஏ (Customs House Agent) பணிகளுக்கான கட்டணங்கள், 3. துறைமுகத்தில் ஹேண்ட்லிங் கட்டணங்கள்,    4. பொருள்களை கன்டெய்னரில் ஏற்றுவதற்கான கட்டணங்கள் 5. டாக்குமென்டேஷன் கட்டணங்கள், 6. சர்ட்டிஃபிகேட் கட்டணங்கள் ஆகிய அனைத்தும் நாம் அனுப்பும் பொருளின் விலையில் சேர்க்கப்பட வேண்டும்.

சி.ஹெச்.ஏ பணிகள் குறித்தும், டாக்குமென் டேஷன் குறித்தும் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். என்னென்ன சர்ட்டிஃபிகேட் தேவை என்பதை முன்னரே கூறியிருக்கிறேன். இப்போது விலை நிர்ணயம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதை மூன்று வகைகளில் ஏற்றுமதியாளர்கள் செய்து வருகிறார்கள். ஃபிக்ஸட் இன் வேல்யூ (Fixed in Value), மாறக்கூடிய விலை (Variable Cost) மற்றும் ஃபிக்ஸட் இன் பர்சன்டேஜ்
(Fixed in Percentage).

ஃபிக்ஸட் இன் வேல்யூ (Fixed in Value)

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசிக்கு ரூ.120 லாபம் போதும் என்று முடிவு செய்து ரூ.1,120-க்கு விற்பதுதான் ஃபிக்ஸட் இன் வேல்யூ விலை நிர்ணய முறையாகும். இந்த முறையில் செலவுகள் குறித்து பெரிதாகக் கவனம் செலுத்தமாட்டார்கள். இவ்வளவுக்கு இவ்வளவு லாபம் வந்தால் போதும் என்ற கணக்குத்தான்.

மாறக்கூடிய விலை (Variable Cost)

இந்த வகை விலை நிர்ணய முறையில்தான் மேற்சொன்ன கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். பொருளின் ஆதார விலையும் சேர்த்து, பேக்கிங் பை, பேக்கிங் கட்டணம், சி.ஹெச்.ஏ கட்டணம், இன்ஷூரன்ஸ் கட்டணம் மற்றும் லாபம் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் இறுதியில் கிடைக்கும் தொகைதான் அந்தப் பொருளுக்கான விலையாக நிர்ணயிக்கப்படும். 

ஃபிக்ஸட் இன் பர்சன்டேஜ் (Fixed in  Percentage)


ரூ.1,000 மதிப்புள்ள அரிசிக்கு 12%  லாபம் என்று வைத்து ரூ.1,120-க்கு விற்பதுதான் ஃபிக்ஸட் இன் பர்சன்டேஜ் விலை நிர்ணய முறையாகும்.

உங்களுக்கு இறக்குமதியாளரிடமிருந்து  ஆர்டர் கிடைத்தபின், சி.ஹெச்.ஏ ஏஜென்டை அணுகி, என்னென்ன கட்டணங்கள், செலவுகள் என்பதை அறிந்து, பின்னரே பெர்ஃபார்மா     இன்வாய்ஸ் (Performa Invoice) தயார் செய்ய வேண்டும். அதன் பிறகே பிற ஏற்றுமதி வேலைகளைச் செய்ய முடியும்.   
           
(ஜெயிப்போம்)