
ஞா.சுதாகர்
“ஏதேனும் ஓர் ஆளுமைதான் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களைச் சுற்றி நடக்கும் ஏதேனும் ஒரு சிறு சம்பவத்தில் இருந்துகூட உங்களுக்கான இன்ஸ்பிரேஷனைப் பெறலாம். கூகுள் நிறுவனத்துக்கு, கூகுள் இமேஜஸ் வசதியை உருவாக்க வேண்டும் என எப்போது தோன்றியது தெரியுமா?

எரிக் ஸ்மிட், நிர்வாக தலைவர், கூகுள்
2000-ல் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் அணிந்துவந்த பச்சைநிற உடை உலகளவில் வேகமாகப் பிரபலமடைந்தது. உடனே பலரும் கூகுளில் அந்த உடையைத் தேடினர். அப்போது கூகுளில் படங்களுக்கு என தனி வசதி கிடையாது. இந்த சம்பவத்துக்குப்பிறகு ‘கூகுளில் படங்களுக்கென ஏன் தனி சர்ச் வசதியைக் கொண்டுவரக்கூடாது’ என யோசித்தோம். 2001-ல் கூகுள் இமேஜ் வசதி பிறந்தது. ஜெனிஃபர் லோபஸ் அணிந்துவந்த உடைதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றால் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டிய அவசியமே இல்லை.”