
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி
பங்குச் சந்தைக்கு மாற்றாக தங்கம் வலிமை சேர்த்து வருகிறது. “தங்கம் தற்போது 29,750 என்ற அடுத்த தடைநிலையையும் உடைத்து ஏற முயற்சி செய்துவருகிறது. இந்த ஏற்றம் மேலே 29,950 என்ற எல்லையில் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட லாம். இந்த எல்லையையும் உடைத்து ஏறினால், மிக மிக வலிமையான அடுத்த கட்ட ஏற்றத்துக்குத் தயாராகலாம். இந்த ஏற்றம் அடுத்து 30,150, 30,420 போன்ற எல்லைகளைத் தொடலாம்” எனச் சென்ற வாரம் சொன்னோம்.
நாம் சொன்னதுபோலவே, தங்கம் வலிமையாக ஏறியது. 29750- ஐ உடைத்து ஏறியது மட்டுமில்லா மல், நாம் கொடுத்த எல்லா மேல் எல்லைகளையும் தொட்டது. குறிப்பாக, வெள்ளியன்று 30,420 என்ற அடுத்த எல்லையையும் தொட்டது.

தற்போது 30500 என்பது உடனடித் தடை நிலையாக உள்ளது. இந்த தடைநிலை உடைக்கப் பட்டால், அடுத்து மிக வலிமையான ஏற்றத்துக்குத் தயாராகலாம். அடுத்த முக்கிய எல்லைகள் 30,825 ஆகும். இங்கு வலிமையாகத் தடுக்கப்படலாம். இந்த எல்லை என்பது நவம்பர் 2016-ன் உச்சம் என்று சொல்லலாம். இதைத் தாண்டும்போது தங்கம் புதிய வலிமை பெற்று 31,450 வரை செல்லலாம். இந்த எல்லையைத் தாண்டுவது கடினம். கீழே 30,000 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இது உடைக்கப்பட்டால், 29520 என்ற கீழ் எல்லையைத் தொடலாம்.

வெள்ளி மினி
சென்ற வாரம் நாம் சொன்னதாவது: ‘‘தற்போதைய ஏற்றம், அதன் முந்தைய உச்சமான 40,950 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படலாம். இதை உடைத்தால் மிகப் பெரிய பிரேக்அவுட் நிகழலாம். இந்த ஏற்றம் அடுத்தடுத்து 41,300, 41,900 மற்றும் 42,500 வரைகூட செல்லலாம்.”
நாம் சொன்னது போலவே, வெள்ளி, மேலே வலிமையாக ஏறி, திங்கள் அன்று பிரேக்அவுட் ஆனது. அடுத்த இரண்டு நாள்கள் சற்றே பக்கவாட்டில் இருந்தாலும், வெள்ளி அன்று மீண்டும் ஏறி, நாம் முன்பே கொடுத்த எல்லையின் அடுத்த எல்லையான 41,900-த்தைத் தொட்டது.
தற்போது 41,900 என்பது சற்றே வலிமையான தடுப்புநிலையாகும். இந்த எல்லையை உடைத்து ஏறும்போது, 42,300 மற்றும் 42,800 என்ற எல்லை களைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. இது ஏப்ரல் 2017-ன் உச்சமாகும்.

இதை உடைத்தால் இன்னும் அடுத்தகட்ட உச்சமான 43,250- ஐ நோக்கி நகரலாம். கீழே 41,140 என்பது மிக முக்கிய ஆதரவு எல்லையாக உள்ளது. இதை உடைத்தால் இந்த ஏற்றம் முடிவுக்கு வரலாம்.

கச்சா எண்ணெய் மினி
கடந்த வாரம், “கச்சா எண்ணெய் மேலே 3,065-ஐ உடைத்து ஏறும்போது மிகப் பெரிய ஏற்றம் வரலாம்” என்று சொன்னோம்.
அதைப் போலவே, சென்ற வாரம் 3,065-ஐ உடைத்தவுடன் வலிமையாக ஏற ஆரம்பித்து. அன்றே 3,143 வரை சென்றது. புதன் அன்று அதன் ஏற்றம் தொடர்ந்தது. அதன் உச்சமாக 3,173-ஐ தொட்டு, பின்பு அதன் தடைநிலையாக மாறியது. கடந்த வியாழன் அன்று தொடர்ந்து ஏற முடியவில்லை என்பதைக் காட்டும் வகையில் ஒரு டோஜி தோன்றியது. வெள்ளி அன்று டோஜியின் கீழ் எல்லையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
இனி அதன் உச்சமான 3,173-யைத் தொட்ட பிறகு, தொடர்ந்து ஏற முடியாமல், கீழே இறங்கி, டோஜியின் கீழ் எல்லையான 3,115 என்ற எல்லையை நோக்கி நகர்ந்துள்ளது. கீழே 3,115-ஐ உடைத்து இறங்கினால், இறக்கம் வலிமையானதாக இருக்கும். கீழ் எல்லைகளான 3,085, 3,030 மற்றும் 3,000-யைத் தொடலாம்.

மென்தா ஆயில்
மென்தா ஆயில் தற்போது ஏற்றத்தில் உள்ளது. இந்த ஏற்றத்தின் அடுத்த தடைநிலை 1,225 ஆகும். இது உடைத்து ஏறினால் பெரிய ஏற்றம் நிகழலாம். கீழே 1,170 என்பது உடனடி ஆதரவு ஆகும். மென்தா ஆயில் இரண்டு எல்லைகளுக்கு இடையே சுற்றி வருவது கவனிக்கத்தக்கது.

காட்டன்
“காட்டன் தொடர் இறக்கத்தில் உள்ளது. ஒருவேளை 18,800-யைத் தாண்டி ஏறினால், இறக்கம் முடிவுக்கு வந்து புதிய ஏற்றத்துக்குத் தயாராகலாம்’’ என காட்டன் பற்றி சென்ற வாரம் சொன்னோம்.
காட்டன் 18,800-ஐ உடைத்து வலிமையாக ஏறி, 19,460 என்ற உச்சத்தைத் தொட்டது. பின்பு இதன் விலை இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் 19,010 என்ற ஆதரவை உருவாக்கி உள்ளது. மேலே 19,330 என்பது தடைநிலையாக உள்ளது.