நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?

நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?

நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?

“சார், இத்தனை ஃபண்ட் இருக்கு; இதில், ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி சார்?” எனக் கேட்டார் மகாதேவன். நியாயமான கேள்வி.  

நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?

பல ஆண்டுகளுக்குமுன், “பங்குச் சந்தை முதலீடு மிகக் குழப்பமானது. ஒன்றுமே புரியவில்லை. பல சமயங்களில், காரணமில்லாமல் அதன் அதீத ஏற்ற, இறக்கங்கள் அச்சப்படுத்துகின்றன. அதே சமயம், அதில் கிடைக்கும் வருவாயும், ஆதாயமும் நம்மை ஈர்க்கின்றன. என்ன செய்யலாம்?” எனக் குழம்பியோருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது மியூச்சுவல் ஃபண்ட்.

அப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ரொம்ப சுலபம்.  ஏனெனில், அன்றைய தேதியில் இருந்ததே யூ.டி.ஐ மட்டும்தான். பேசாமல் அதன் யூனிட்களில் முதலீடு செய்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கலாம். பங்குச் சந்தையைப்போல, பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்காது. அதேசமயம், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருவாயும் கொடுத்தது. ஆனால், அந்தத் திட்டம் சரியாக நிர்வாகம் செய்யப் படாததால் பின்னர் பெரும் பிரச்னைக்கு உள்ளானது தனிக் கதை.

ஆனால், 1990-களுக்குப்பின் கதையே வேறு. சென்னையைச் சேர்ந்த இந்திய நிறுவனமான பயோனீர் மற்றும் வெளிநாட்டு நிறுவனமான மார்கன் ஸ்டான்லியில் ஆரம்பித்து இன்று மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் பல்கிப் பெருகிவிட்டன. இன்றைய தேதியில் 42 ஃபண்ட் நிறுவனங்கள், 2,100-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சுமார் ரூ.20 லட்சம் கோடி நிதி திரட்டி நிர்வகித்து வருகின்றன. மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்கள், பல்வேறு விதவிதமான பெயர்களில், ஒரே மாதிரியான முதலீட்டுக் கலவையைக் கொண்ட பல திட்டங்களை ஒரே நேரத்தில் நடத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. பணம் திரட்ட வேண்டும் என்பதற்காக ரூம் போட்டு உட்கார்்ந்து யோசிக்கிறார்கள். உதாரணமாக, சில்ட்ரன்ஸ் சேவிங்க்ஸ் பிளான் என பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வைத்திருக் கின்றன. கேட்டால், குழந்தைகளின் எதிர்காலத் துக்குத் திட்டமிட என்று கதை சொல்வார்கள். அது என்ன குழந்தைகளுக்கு எனத் தனியாக ஒரு திட்டம்? முதலீட்டாளர்களைக் குறிப்பாக, குடும்பத் தலைவிகளை ஈர்ப்பதற்காக வைக்கப் படும் பெயர்கள் இவை.

நாகப்பன் பக்கங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் குறைக்க என்ன வழி?



அதேபோல, எம்.என்.சி, புளூசிப், டாப் 200 எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவற்றில் சில திட்டங்களின் போர்ட்ஃபோலியோவில் 75 சதவிகிதத்துக்கு மேல் ஒரே மாதிரியான பங்குகளையே வைத்திருக்கும். அப்புறம் எதற்கு இரண்டு திட்டங்கள்?

எல்லா முதலீடுகளுமே ஓரளவுக்கு நல்ல வளர்ச்சியைத் தர வேண்டும் என்பதுதானே நோக்கம். பொதுவாகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி இரண்டு வகையாக முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று, பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் நிறுவனங்களின் பங்குகளில்; இரண்டு, கடன் பத்திரங்களில். மூன்றாவதாக ஒரு முறையும் உண்டு: அது இவை இரண்டும் கலந்த முதலீட்டுத் திட்டம்.

பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் உட்பிரிவுகளாக, சிறு பங்குகள் – ஸ்மால் கேப், நடுத்தரப் பங்குகள் – மிட் கேப், பெரிய நிறுவனப் பங்குகள் – லார்ஜ் கேப், இவை எல்லாம் கலந்தவை – மல்டி கேப், ஒரே ஒரு துறை மட்டுமே சார்ந்தவை - செக்டோரல், பல துறை சார்ந்த பிரித்துப் போடும் டைவர்சிஃபைடு திட்டங்கள் என இருக்கலாம். இந்த மூன்றையும் மாற்றி மாற்றிப் போட்டு பல திட்டங்களாகப் பிரித்து முதலீட்டாளர்களையும் குழப்பி இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.
சுருக்கமாக, ஒவ்வொரு நிறுவனமும் சுமார் 15 அல்லது 20 முதலீட்டுத் திட்டங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய தேவையேயில்லை. அப்போதுகூட சுமார் 800-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்.

இந்தக் குழப்பத்தைக் குறைக்கவே செபி  இப்போது ஒரு முடிவெடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. இப்படிப் பல பெயர்களில் ஒரே மாதிரியான பல திட்டங்களை வைத்து முதலீட்டாளர்களைக் குழப்பாமல், இவற்றை ஒருங்கிணைக்க அறிவுறுத்துகிறது. இதன் மூலம் பல திட்டங்கள் ஒருங்கிணையலாம். குழப்பமும் குறையும்.

குழப்பம் மட்டுமல்ல காரணம். செபியின் இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம், திட்டம் நடத்த ஆகும் செலவுகளைக் குறைப்பதும், அதன் மூலமாக முதலீட்டாளர்களின் வருவாயை அதிகரிப்பதும் மிக முக்கிய நோக்கமாகும். அதாவது, ஒவ்வொரு திட்டத்தையும் தொடங்கு வதற்கு, நிர்வகிப்பதற்கு, சந்தைப்படுத்துவதற்கென, விற்பனை செய்வதற்கென, விளம்பரங்களுக்கென,  ஏஜென்ட்கள் கமிஷன், நிர்வாகியின் சம்பளம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படிச் செய்யப்படும் செலவுக்கான பணத்தை முதலீட்டில் இருந்துதான் எடுப்பார்கள். இதை ஆங்கிலத்தில் ‘எக்்ஸ்பென்ஸ் ரேஷியோ’ என்பார்கள். இப்படிச் செய்வதால் முதலீட்டாளருக்கு என்ன பாதிப்பு? 

உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்கிறார். அந்தத் திட்டம் ஓராண்டில் சுமார் 10% வருவாய் தருகிறது. அந்தத் திட்டத்துக்கான எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 2% என்கிறபட்சத்தில், முதலீட்டாளருக்குக் கிடைப்பது 10% அல்ல. அந்த 2% கழிக்கப்பட்டு, 8% மட்டுமே கையில் கிடைக்கும் அல்லது யூனிட் மதிப்பு கூடும். அதாவது, அவர் முதலீடு செய்த 10,000 ரூபாயின்மீது கிடைக்கும் வருவாயான 1,000 ரூபாயில் ரூ.200 செலவுகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, மீதம் ரூ.800 மட்டுமே யூனிட் மதிப்பில் கூடும்.

சில நூறு கோடிகளே நிர்வகிக்கும் மிகச் சிறிய திட்டங்களின் செலவு விகிதம் இதைவிடவும் அதிகமாக இருக்கும். அதேசமயம், மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் கோடிகளைத் திரட்டி நிர்வகிக்கும் திட்டங்களின் செலவுகளோ, மொத்த முதலீட்டின்மீதான சதவிகிதக் கணக்கில் பார்க்கையில், ஒப்பீட்டு அடிப்படையில் இதைவிடக் குறைவாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, நாம் பார்த்தது ஒரு வருடக் கணக்கை மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் இப்படிக் கழிக்கப்படும்போது முதலீட்டாளாரின் இழப்பு கணிசமாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் ரூ.1 லட்சத்தை ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார்.  அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பணத்தை வெளியில் எடுப்பதில்லை எனத் தீர்மானிக்கிறார். அந்தத் திட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 15% வருவாய் தரும்பட்சத்தில், 10 ஆண்டுகளில் அந்த முதலீடு ரூ.4,05,000-ஆகப் பெருகியிருக்கும். அந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான செலவு 1.50 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில், அதைக் கழித்தபின்னர் மீதம் ரூ.3,55,000 மட்டுமே இருக்கும். ரூ.50,000 குறைவாகக் கிடைக்கும்.

இரு வேறு திட்டங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் எக்ஸ்பென்ஸ் ரேஷியோவைக் கணிசமாகக் குறைத்து, செலவுகளைக் குறைத்து ஆதாயத்தை அதிகரிக்கவல்லது இந்த இணைப்புத் திட்டம்!