நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?

சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?

சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?

ம்மவர்கள் சேமிப்பில் கில்லாடிகள். ஆனால், முதலீட்டில் சொதப்பல் மன்னர்களாக இருக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தில் சுமார் 50% அளவுக்குச் சேமிக்கும் நம்மவர்கள், அதனைச் சரியாக முதலீடு செய்வதில்லை. சேமிப்பு வேறு, முதலீடு வேறு; இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொண்டால்தான் சேமிப்பு என்பதிலிருந்து முதலீடு என்கிற அடுத்த நிலைக்கு நம்மால் உயர முடியும்.   

சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?

சேமிப்பு என்பது நம் பணத்தை உண்டியலில் போட்டு வைப்பதற்கு ஒப்பாகும். உதாரணமாக, வங்கி ஆர்.டி., அஞ்சலக ஆர்.டி. போன்றவையெல்லாம் சேமிப்புத் திட்டங்களே. இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 6.5 முதல் 7.5% வரை வங்கிகளுக்கேற்ப வட்டி கிடைக்க வாய்ப்புண்டு. இந்தத் திட்டங்களில் நாம் போடும் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், இவற்றின் மூலம் கிடைக்கும்  வட்டியினால் நம் பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்குமே ஒழிய, பெரிய லாபம் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. சரி, முதலீடு என்றால் என்ன..?   

சேமிப்பு VS முதலீடு என்ன வித்தியாசம்?

பணவீக்க விகிதத்தைத் தாண்டி எது அதிக வருமானம் / லாபம் தருகிறதோ, அதுவே முதலீடு. பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தரும் திட்டங்களில் ரிஸ்க் இருக்கிறது. நீண்ட காலத்தில் அந்த ரிஸ்க்கைத் தாண்டி அதிக வருமானம் பெறுவதே  ஒரு முதலீட்டாளரின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

முதலீடு என்றுவரும்போது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை அடங்கும். இவை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தரவல்லவை.

நம் அவசரத் தேவைக்கான தொகையை மட்டும் வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்து விட்டு, மீதமுள்ள பணத்தை முதலீடு செய்தால் மட்டுமே  பணவீக்க விகிதத்தைவிட நல்ல லாபத்தை நம்மால் பெற முடியும்.

-சேனா சரவணன்