நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

மென்தா ஆயில்

பொதுவாக, மென்தா ஆயில் வலிமையாக நகரும். மேலே நகர ஆரம்பித்தால் நல்ல ஏற்றத்தையும், கீழே திரும்ப ஆரம்பித்தால் அதற்கு இணையாக இறங்கவும் வாய்ப்பிருக்கும். ஆனால், இதில் இப்போது இதில் என்ன நடக்கிறது?    

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

10.08.17 அன்று குறைந்தபட்ச புள்ளியாக       1094-ஐ தொட்டபிறகு, மேல்நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. இந்த ஏற்றம் தொடர்ந்து 18.08.17 அன்று அதிகபட்சமாக 1228 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் ஆகஸ்ட் முடிந்து, இந்த செப்டம்பர் 15-ம் தேதி வரை, இந்த  இரண்டு புள்ளிகளுக்கு இடையே மட்டும் சுற்றி வருகிறது. இதை டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், ‘இன்சைட் டிரேடிங்’ என்று சொல்வோம். இதுவே ஒரு நாளுக்குள்ளாக நடந்தால், ‘இன்சைட் டே’ என்போம். இது, கடந்த ஒரு மாதமாக நடந்து வருவதால், இதை ‘இன்சைட் மன்த்’ எனலாம். 

இதில் சிறப்பு என்னவென்றால், மென்தா ஆயில் அதன் உச்சத்தைத் தாண்டவில்லை என்றாலும்கூட, நாள்பட, இதன் நகர்வு ஒரு ஹயர்பாட்டத்தை ஏற்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதை விளக்கமாகப் பார்த்தால், 18.08.17 அன்று ஒரு உச்சத்தைத் தொட்டபிறகு இறங்கி, 29.08.17 அன்று குறைந்தபட்சப் புள்ளியாக 1142 என்ற புள்ளியைத் தொட்டு ஏற ஆரம்பித்தது. இதன் முந்தைய பாட்டம் என்பது 1094 ஆகும்.  இப்படி ஹயர் பாட்டத்தைத் தோற்றுவித்து ஏற ஆரம்பித்த இந்த மென்தா ஆயில், ஏற்றத்தின் முடிவில் அதன் முந்தைய உச்சமான 1228-ஐ  தாண்ட முடியவில்லை.   ஆனால், அதற்கு அருகாமையில் 1.9.17 அன்று 1212 என்ற புள்ளியைத் தொட்டது.  அதன்பின் இறங்கும்போது 6.9.17 அன்று 1167 என்ற புள்ளியைத் தொட்டு ஏற ஆரம்பித்தது. ஆக அடுத்த பாட்டமும் முந்தைய பாட்டமான       1142-க்கு மேலாக முடிந்துள்ளது. அதன்பின் ஏற ஆரம்பிக்கும்போது 8.9.17  அன்று உச்சமாக      1218-ஐ தொட்டு இறங்கியது. இதைப் பார்க்கும் போது நமக்கு ஒரு முக்கோண வடிவ தோற்றம் உருவாவதைப் பார்க்கமுடிகிறது. அதாவது, தொடர்ந்து ஹயர் பாட்டத்தைத் தோற்றுவித்த மென்தா ஆயில், மேலே பழைய உச்சமான     1228-ஐ தாண்டாமல், அதற்கு அருகில் மட்டுமே சென்று இறங்கியது. எனவே, இதை ஒரு ஏறுமுகமான முக்கோணம் என்று அழைப்பார்கள்.    

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இந்த நிலையில், 1228 என்ற இந்த எல்லை வலுவான தடைநிலையாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டு ஏறினால், மிக வலுவாக ஏறி புதிய உச்சங்ளைத் தோற்றுவிக்கலாம். அடுத்த முக்கிய எல்லைகள்  1265, 1290 மற்றும் 1330 ஆகும். 
மாறாக, கீழே முக்கிய ஆதரவு  1160-ல் உள்ளது.  இந்த எல்லை உடைக்கப்பட்டால், இந்த முக்கோணத்தில் கீழ் எல்லையான 1094 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.   

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

காட்டன் பற்றி சென்ற வாரம் சொன்னது... “காட்டன் 18800- ஐ உடைத்து வலிமையாக ஏறி, 19460 என்ற உச்சத்தைத் தொட்டது. பின்பு இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் 19010 என்ற ஆதரவை உருவாக்கியுள்ளது. மேலே 19330 என்பது தடைநிலையாக உள்ளது.”

சென்ற வாரம் நாம் சொன்னதை போலவே, மேலே 19330 என்பது வலிமையான தடை நிலையாகவே மாறியுள்ளது. திங்களன்று ஒரு கேப்டவுனில் துவங்கியது. அதன்பின் வலிமையான இறக்கத்தைச் சந்தித்தது. இந்த இறக்கம் அந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மிகப் பெரிய இறக்கத்துக்கு வழிவகுத்தது. 

இந்த நேரத்தில் ஒரு கேப்டவுனை எப்படி சமாளிப்பது என்றும் பார்கலாம். பொதுவாக,  முந்தைய நாளைவிட  மிகக் குறைவான புள்ளியை நோக்கி இந்த நாள் துவங்கினால் அதை கேப்டவுன் என்கிறோம்.  அதைக் கையாளும்போது   அவசரப் படக்கூடாது. முதல் அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் பொறுத்திருந்து, அது உருவாக்கும் உச்சத்தைத் தடைநிலையாகவும்,  அந்த நேரத்தில் குறைந்தபட்ச விலையை ஆதரவாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன்பின் விலை எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தத் திசையில் நம் வியாபாரத்தைத் துவங்கவேண்டும்.  

இந்த கேப் டவுன் முறையில்தான் காட்டன் கடந்த திங்களன்று இறங்கி வியாபாரம் ஆனது.  அதோடு மட்டும் அல்லாமல், செவ்வாய், புதன் என்று அடுத்தடுத்த நாள்களும் கேப் டவுனில் துவங்கி, இறங்கியே வியாபாரம் ஆனது. 

இந்த பெரும் வீழ்ச்சிக்குப்பிறகு, வியாழன் அன்று 18300 என்ற எல்லையை ஆதரவாக எடுத்தது. இந்த ஆதரவை எடுத்து மேலே திரும்பிய நிலையில், 18650 என்பது தற்போதைய தடைநிலையாக உள்ளது. 

இந்தத் தடையை உடைத்து ஏறினால் ஓரளவுக்கு ஒரு புல்பேக் ரேலி வரலாம். அடுத்த எல்லைகள் 18910 மற்றும் 19300 ஆகும். 

கீழே 18300 என்ற ஆதரவை உடைத்தால் பெரும் வீழ்ச்சி வரலாம்.