நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம் பற்றி சென்ற வாரம் நாம் சொன்னது...  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

“தற்போது 30500 என்கிற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.  இந்த எல்லை என்பது நவம்பர் 2016-ன் உச்சம் என்றே சொல்லலாம்.    இந்த எல்லையைத் தாண்டுவது கடினம். கீழே 30000 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இது உடைக்கப்பட்டால் 29520 என்ற கீழ் எல்லையைத் தொடலாம்.”

சொன்னதுபோலவே, தங்கம் 30500 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டது.  பின்பு கீழ்நோக்கித் திரும்பியது. கடந்த திங்களன்று  வலிமையான இறக்கத்தைக் கண்டது.  அதன்பின், செவ்வாய் முதல் வெள்ளி வரை ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளாகவே சுழன்று வந்துள்ளது.    இந்தப் பக்கவாட்டு நகர்வானது அடுத்தக் கட்டத்தில் ஒரு வலிமையான நகர்வுக்குக் காத்திருப்பதுபோல் உள்ளது. இந்தக் குறுகிய நகர்வின் மேல் எல்லை என்பது 30100 ஆகும். கீழே இப்போது 29750 என்ற எல்லையில் ஆதரவு எடுத்து வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்இனி என்ன நடக்கலாம்? பொதுவாக, தங்கமும், பங்குச் சந்தையும் எதிரெதிராக நகரும் என்பது ஒரு கருத்து. அதுவும் பல முறை நிகழ்ந்துள்ளதை நாமும் பார்த்து வருகிறோம். கடந்த சில வாரங்களை எடுத்துப் பார்த்தால், ஒரு சில கால கட்டத்தில் தங்கம் மற்றும் பங்குச் சந்தை இரண்டுமே வலிமையாக மேலே ஏறியதைப் பார்த்தோம்.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

பொதுவாக, தங்கத்தின் விலையேற்றம் என்பது பல்வேறு காரணிகளால் ஆளப்படும். அவை, டாலர் இண்டெக்ஸ், அமெரிக்கப் பொருளாதார புள்ளிவிவரங்கள், உலக அரசியல் நிலவரம் ஆகும்.  சென்ற வாரங்களில் வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல் என்பது உலகச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, பங்குச் சந்தையில் இருந்து பணம், தங்கத்தை நோக்கி நகர்ந்தது.  இதனால் தங்கத்தின் விலை சற்றே வலிமை பெற்றது.   அதன்பின் அமெரிக்க அரசும், தென்கொரிய அரசும், அந்த நிலைமையைச் சமாளிக்கத் தங்களைத் தயார்படுத்தி உள்ளதாக வந்த செய்தி, மீண்டும் பங்குச் சந்தையை வலிமையாக மாற்றியது. ஆகவே, தங்கம் சற்றே இறங்குமுகமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தங்கம் ஒரு குறுகிய வட்டத்திலிருந்து வருகிறது. இதன் முக்கிய ஆதரவான 29750 என்ற எல்லை உடைக்கப்பட்டால், அது மெள்ள மெள்ள கீழ்நோக்கி இறங்க ஆரம்பிக்கலாம். இதற்கடுத்த  முக்கிய எல்லை 29500 ஆகும்.  இது முந்தைய ரவுண்டிங் பாட்டத்தின் உருவமைப்பின் விளிம்பு பகுதி ஆகும். அது முன்பு ஒரு தடைநிலையாக இருந்தது.   அதுவே தற்போது வலிமையான ஆதரவு நிலையாக மாறலாம்.   அது உடைக்கப்பட்டால் அது பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். 

அடுத்தடுத்த முக்கிய ஆதரவு எல்லைகள் 29050 மற்றும் 29650 ஆகும். மேலே 30100 என்ற தடை நிலை உடைக்கப்பட்டு ஏறினாலும், மீண்டும் உச்சமான 30500-ல் மிக வலிமையாக தடுக்கப்படலாம்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

சென்ற வாரம் சொன்னது... “தற்போது 41900 என்பது சற்றே வலிமையான தடுப்புநிலையாகும்   இது ஏப்ரல் 2017-ன் உச்சமாகும். இதை உடைத்தால் இன்னும் அடுத்தகட்ட உச்சமான 43250-யை  நோக்கி நகரலாம்.  கீழே 41140 என்பது மிக முக்கிய ஆதரவு எல்லையாக உள்ளது.  இதை உடைத்தால் இந்த ஏற்றம் முடிவுக்கு வரலாம்.”

சென்ற வார நகர்வும் அதையொட்டியே இருந்தது.  மேலேயிருந்த வலிமையான தடைநிலை உடைக்கப்படவில்லை. அந்த உச்சமான 41900 என்ற எல்லை அப்போதும், இப்போதும் ஒரு வலிமையான தடைநிலையாகவே உள்ளது.  இந்தநிலையில், வெள்ளி கொஞ்சம் கொஞ்சமாக வலிமை குறைந்து இறங்க ஆரம்பித்துள்ளது.   இந்த இறக்கத்தின் அடுத்தகட்ட ஆதரவுநிலை என்பது 40500 புள்ளியில் உள்ளது.  இந்த எல்லை உடைக்கப்பட்டு இறங்க ஆரம்பித்தால், இறக்கம் வலிமையாக இருக்கலாம். அடுத்தடுத்த கீழ் எல்லைகள் 40240 மற்றும் 39700 ஆகும்.  அதன்பின் இறங்குமுகமாக மாறலாம்.      

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய்  ஏற்றம் இறக்கம் என்று இரண்டுவிதமான நகர்வுகளைக் கொண்டு இருந்தது.  ஆனால், கடந்த வாரம் ஒரு பக்கமே நகரக்கூடிய வலுவான ஏற்றமாக இருந்தது. 

திங்களன்று காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிகழ்ந்தது.  திங்களன்று, கீழே இறக்க முயன்ற கரடிகள் 3011 வரை இறக்கின. ஆனால், காளைகள் அதை தடுத்து நிறுத்தி, மேலே எடுத்து சென்றன.  இந்த ஏற்றம் 3095 வரை சென்றாலும், முடியும்போது அது 3073-ல் முடிந்தது. இந்த முடிவால் ஒரு ‘ஸ்பின்னிங் டாப்’ என்று சொல்லக்கூடிய கேன்டில் வகையில் முடிந்தது. இதை, இறக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த செயலாகப் பார்க்கலாம். அதற்கடுத்து வலிமையாக ஏற ஆரம்பித்து, செவ்வாய், புதன், வியாழன் என்று பலமாக ஏற்றம் கண்டது. ஆனால், வெள்ளியன்று தொடர்ந்து ஏற முடியாமல் திணறியது.  

தற்போது 3250 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படுகிறது. அதை உடைத்து ஏறினால் வலிமையாக ஏறி 3290 மற்றும் 3360 என்கிற எல்லைகளைத் தொடலாம். பின் ஏறுமுகமாக மாறலாம். கீழே 3140 என்ற எல்லை முக்கிய ஆதரவு ஆகும்.  இது உடைக்கப்பட்டால், இறங்குமுகமாக மாறலாம்.