நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் வகை எது?

உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் வகை எது?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் வகை எது?

உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் வகை எது?

மியூச்சுவல் ஃபண்டுகளை அமைப்பின் அடிப்படையில் குளோஸ்டு எண்டட், ஓப்பன் எண்டட், இன்டர்வல் ஃபண்ட் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். குளோஸ்டு எண்டட் வகை ஃபண்டுகளில் புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது (என்.எஃப்.ஓ) மட்டுமே முதலீடு செய்ய முடியும். மேலும், இதில் செய்த முதலீட்டை ஃபண்டின் முதிர்வுக் காலத்துக்குப் பிறகே எடுக்க முடியும். இந்த முதிர்வுக் காலம் ஓராண்டு தொடங்கி பத்தாண்டு காலம் வரை செல்லும்.   

உங்களுக்கு ஏற்ற ஃபண்ட் வகை எது?

குளோஸ்டு எண்டட் ஃபண்டுகள் அனைத்தும் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன. உங்களின் ஃபண்ட் முதலீடு, டீமேட் கணக்கில் இருக்கும்போது, பங்குச் சந்தையில் விற்று பணமாக்கிக்கொள்ள முடியும். முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து குறுகிய கால, நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டிவரும்.

வருமான வரிச் சேமிப்பு அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட், மூன்றாண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்டது என்றாலும், அது குளோஸ்டு எண்டட் ஃபண்ட் கிடையாது. அதில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால், மூன்றாண்டு முதிர்வுக்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும்.

ஓப்பன் எண்டட் ஃபண்டில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; முதலீட்டைப் பணமாக்கிக்கொள்ள முடியும்.

இன்டர்வல் ஃபண்டானது குளோஸ்டு எண்டட் மற்றும் ஓப்பன் எண்டட் என இரண்டின் தன்மையையும் கொண்டது. இதில், இடையிடையே ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலீடு செய்ய மற்றும் யூனிட்களை விற்க அனுமதிக்கப்படுகிறது. இன்டர்வல் ஃபண்டுகளில் பெரும்பாலும் கடன் சார்ந்த திட்டங்களில்தான் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது.

முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் குளோஸ்டு எண்டட் ஃபண்டைத் தேர்வு செய்யலாம். சந்தை இறங்கி னாலும், இடையில் பணம் எடுக்க முடியாது என்பதால், புதிய முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட ஃபண்டிலிருந்து வெளியேறுவது தடுக்கப்படும். நீண்ட காலத்தில் (மூன்று ஆண்டுகள்) ரிஸ்க் பரவலாக்கப்படுவதால், குளோஸ்டு எண்டட் ஃபண்ட் திட்டங்கள் நல்ல வருமானம் தர வாய்ப்புண்டு.

உங்களுக்கேற்ற ஃபண்ட் வகைகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.

-சேனா சரவணன்