நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

பல நிறுவனங்களின் ஃபண்ட் திட்டங்களை ஆராய்ந்தபோது, ஐந்து ஆண்டுகளைவிட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அதிக வருமானம் தந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், நாம் முதலீடு செய்துள்ள ஃபண்ட் திட்டங்களில் உள்ள எல்லா யூனிட்களையும் 5 அல்லது 10 ஆண்டு களுக்குத் தொடர்ந்து வைத்திருப்பதை விட, மூன்று ஆண்டுகளில் விற்றுவிட்டு வெளியேறலாமா?

 கே.ஹரிநாதன்   

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?

‘‘இந்தக் கேள்வியை பல விழிப்பு உணர்வுக் கூட்டங்களிலும், மியூச்சுவல் ஃபண்ட் வகுப்புகளிலும் பல முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள்.  நீங்கள் சொல்லும் விஷயம்  உண்மையாக இருந்தால், நாம் எல்லோருமே எளிதாகப் பணக்காரர் ஆகிவிடலாம். நீங்கள் பார்க்கும் டேட்டாவைச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம்.

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?



இரண்டு, மூன்று ஆண்டுகளின் வருமானம், ஐந்து ஆண்டுகளின் வருமானத்தைவிட எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பது  உண்மையல்ல. வலது பக்கத்தில் மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். 

இந்தப் பட்டியலில் உள்ள முதல் ஃபண்ட் ஒரு மிட்கேப் ஃபண்டாகும். இரண்டாவது ஃபண்ட், ஒரு மல்டி கேப் ஃபண்டாகும். மூன்றாவது ஃபண்ட், ஒரு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ஆகும்.

கடந்த செப்டம்பர் 02, 2016 (1 ஆண்டு முன்பு) அன்று இந்த மூன்று ஃபண்டுகளில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், அவருக்கு மேற்குறிப்பிட்ட மூன்று ஃபண்டுகளிலும் முறையே 27.8%, 22.0% மற்றும் 7.6% வருமானம் கிடைத்திருக்கும். அதாவது, மேற்கண்ட மூன்று ஃபண்டுகளிலும் செய்த முதலீடான தலா ரூ.1 லட்சம், தற்போது முறையே 1,27,800, 1,22,000 மற்றும் 1,07,600-ஆக இருக்கும்.

அதேபோல், செப்டம்பர் 02, 2012-ல் (5 வருடம் முன்பு) ஒருவர் முதலீடு செய்திருந்தால், அவருக்குக் கூட்டு வட்டி அடிப்படையில் வருடத்துக்கு  முறையே 32.0%, 20.9%, 8.7% கிடைத்திருக்கும்.  அதாவது, ஐந்து வருடங்களுக்குமுன் மேற்கண்ட மூன்று ஃபண்டுகளிலும் முதலீடு செய்த தலா ரூ.1 லட்சம் தற்போது ரூ.4,00,746, ரூ.2,58,304 மற்றும் ரூ. 1,51,757-ஆக இருக்கும்.     

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?

நீங்கள் பார்க்கும் இந்த வருமானங்கள், இதே தேதியில் 1, 2, 3 அல்லது 5 வருடங்கள் முன்பு செய்த முதலீட்டின் வருமானங்கள் ஆகும். இந்த வருமானம் தினசரி மாறுபடும். நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது, உங்களின் வருமானங்கள் மாறுபடும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.’’

நான் எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரெகுலர்,        எஸ்.பி.ஐ மேக்னம் குளோபல் ஃபண்ட் ரெகுலர் (குரோத்) போன்ற ஃபண்டுகளில் தலா ரூ.1,000  முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டை 20 வருடங்களுக்குத் தொடரலாமா? மேலும் 1,000 ரூபாயை அடுத்த 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நான் ரிஸ்க் எடுக்கவும் தயார். நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரை செய்ய முடியுமா?

மரிய வசந்த்


“தாங்கள் முதலீடு செய்துவரும் இரண்டு  எஸ்.பி.ஐ ஃபண்டுகளுமே சற்று சுமாராகவே  செயல்பட்டு வருகின்றன. அவற்றில் செல்லும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுங்கள். மேலும், நீங்கள் ரூ.1,000 கூடுதலாக முதலீடு செய்ய முடியும் என்று கூறியுள்ளீர்கள். ஆக மொத்தம் ரூ.3,000-த்தைக் கீழ்வரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் நீண்ட கால முதலீட்டுக்குத் தயாராக இருப்பதால், அதிக ரிஸ்க் மற்றும் அதிக  வருமானம்  தரும் ஃபண்டுகளைப் பரிந்துரைத்துள்ளேன். 

எல் அண்ட் டி எமர்ஜிங் பிஸினஸஸ் ஃபண்ட் – ரூ.1,500, ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட் – ரூ 1,500.’’ 

ஃபண்ட் கார்னர் - ஃபண்ட்திட்டங்கள்... 5ஆண்டுகளைவிட 2 ஆண்டுகளில் அதிக வருமானம் கிடைக்குமா?