நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!

ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!

நெல்லைக் கூட்டத்தில் முதலீட்டுப் பாடம்!

நாணயம் விகடன், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்ற பெயரில் முதலீட்டு நிகழ்ச்சியை திருநெல்வேலியில் நடத்தியது. முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!

முதலில் பேசிய சுவாமிநாதன், “முதலீடு செய்யும்போது நடப்பு வாழ்க்கைக்கான தேவைகள், எதிர்பாராத நிகழ்வுகளுக்கான தேவைகள், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணச் செலவு, சொந்தமாக வீடு வாங்குதல், ஓய்வுக்காலத் தேவை எனப் பிரித்துத் திட்டமிட வேண்டும்.  பணவீக்கத்தையும் கணக்கில்கொண்டு முதலீடு செய்வது அவசியம்.

இளம்வயதில் முதலீடு செய்யும்போது உங்களுடைய இலக்குகளையும், திட்டங்களையும் எளிதில் அடைய முடியும்” என்றார் அவர்.    

ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், “எந்த முதலீட்டிலும் இல்லாத சிறப்பு மியூச்சுவல் ஃபண்டில் இருக்கிறது. அதிக ரிஸ்க் எடுப்பவர் களுக்கு அதிக வருமானத்தையும், கொஞ்சம் ரிஸ்க் எடுப்பவர்களுக்குக் கொஞ்சம் லாபத்தையும் தரும் வகையில் இதில் திட்டங்கள் இருக்கின்றன. 

ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானத்தைப் பெறலாம்!

மியூச்சுவல் ஃபண்டில் ஒரே சமயத்தில் முதலீடு செய்வதா, மாதாமாதம் முதலீடு செய்வதா என்ற சந்தேகம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்துப்பார்க்கலாம் என்பவர்கள் ஒரே சமயத்தில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் குறைவாக எடுக்க நினைப்பவர்கள் மாதாந்திர முதலீடு செய்யும் வகையில் எஸ்.ஐ.பி முறையைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போதைய சூழல் சந்தைக்குச் சாதகமாக இருக்கிறது” என்றார்.

இறுதியாக வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

- ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: ஏ.சிதம்பரம்