நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கத்தின் விலைப்போக்கு பற்றி நாம் சென்ற வாரம் சொன்னதுபோலவே நடந்தது. தங்கம், திங்களன்றே நாம் குறிப்பிட்டிருந்த முக்கிய ஆதரவு நிலையான 29,750-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தது. அந்த இறக்கம் மிகவும் வலிமையாக இருந்தது. எனவே, கீழே இறங்கி, நாம் கொடுத்திருந்த அடுத்த முக்கிய ஆதரவான 29,500-க்கு அருகாமையில் வந்து, 29,550-ல் முடிந்தது.  செவ்வாயன்று, இந்த இறக்கத்திலிருந்து மீண்டும் மேலே ஏற ஆரம்பித்தது.    

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கத்தின் விலையேறினாலும், அது ஒரு வலுவான ஏற்றமாக இல்லாமல் ஒரு ஸ்பின்னிங் டாப்பாக முடிந்தது. அடுத்து புதனன்றும் ஏற்றம் தொடர்ந்தது. செவ்வாயன்று காணப்பட்டது போலவே அந்த ஏற்றம், ஒரு பலவீனமான ஏற்றமாக இருந்தது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்புதனன்று ஒரு சிறிய ஏற்றத்துக்குப்பின்,  மீண்டும் ஒரு ஸ்பின்னிங் டாப் அமைப்பில் முடிந்தது. ஆனால், அடுத்து நாளான வியாழனன்று, இந்த இரண்டு நாள்களின் பலவீனமான ஏற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும்வகையில் ஒரு கேப் டவுனில் தொடங்கி இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் கீழே 29,450 வரை சென்றது. ஆனாலும், காளைகள் தங்கள் ஆதரவு எல்லையைத் தக்கவைக்க முயற்சியை எடுத்தன.ஆகவே, நமது ஆதரவு எல்லையான 29,500 பாதுகாக்கப்பட்டது. வியாழனன்று 29,584 என்ற எல்லையில் முடிந்துள்ளது. வெள்ளியன்று, காளைகள் தங்கள் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டு சற்று மேலே ஏறவும் செய்தன. ஆனால், கரடிகள் ஏற்றத்தை வலுவாகத் தடுப்பதில் முனைப்பாக இருந்தன.இனி என்ன நடக்கலாம்?

தற்போது, காளைகள் 29,500 என்ற எல்லையைத் தக்கவைத்துள்ளன. ஆனால், 29450 என்ற புள்ளிவரை சற்றே இறங்கி ஏறியதால்,  இனி நாம் 29,450 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துக்கொள்ளலாம்.இந்த ஆதரவு உடைக்கப்பட்டால், தங்கம் கடுமையான வீழ்ச்சிக்குத் தயாராகலாம். அதாவது, 29,450 உடைக்கப்பட்டால், அது பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.  இனி, அடுத்தடுத்த முக்கிய ஆதரவு எல்லைகள் 29,240 மற்றும் 28,850 ஆகும். மேலே, முன்பு ஆதரவாக இருந்த 29,750 என்ற எல்லை, இப்போது உடனடித் தடைநிலையாக மாறிவருகிறது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

எனவே, இப்போது காளைகளுக்கும், கரடி களுக்கும் இடையே வலுவான சண்டை நடந்து வருகிறது.  கீழே 29,450 என்பது காளைகள் எல்லை, மேலே 29,750 என்பது கரடிகள் தற்காப்பு எல்லை. மேலே 29,750 உடைக்கப்பட்டால்,  மேலே அடுத்த முக்கிய எல்லைகள் 30,090 மற்றும் 30,400 ஆகும்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

வெள்ளியின் நகர்வு நாம் தந்த எல்லைகளைச் சரியாக உடைத்து, அதாவது 40,500-யை உடைத்து 39,552 வரை இறங்கியது. டிரேடர்கள் இதைப் பயன்படுத்தி, விற்று வாங்கி லாபத்தை எடுத்திருக்க லாம். வெள்ளியின் நகர்வு, தங்கத்தைப் போலவே, திங்களன்று வலிமையான இறக்கத்தைக் கொண்டு இருந்தது. 

செவ்வாய் மற்றும் புதனன்று கொஞ்சம் ஏறி, ஸ்பின்னிங் டாப்புகளாகவே முடிந்துள்ளது.  ஆனால், வியாழனன்று அந்தச் சிறிய ஏற்றம் முடிவுக்கு வந்தது. பின்பு வெள்ளியன்று திரிசங்கு சொர்க்கத்துக்குப் போனது. இனி என்ன நடக்கலாம்? 
தற்போது 39,500 என்பது மிக மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப் பட்டால், 38,800 என்ற எல்லை வரை இறங்கி, அங்கு ஓர் ஆதரவை எடுக்கலாம். அதையும் உடைத்தால் பெரும் வீழ்ச்சி அடையலாம். மேலே 40,500 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப் பட்டிருக்கிறது. இதைத் தாண்டி உயர்ந்தால், காளைகள் வலுவான நிலைக்குத் தள்ளப்படும்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், தற்போது முக்கியக் கட்டத்தில் இருக்கிறது.  சென்றவாரம் சொன்னது... “தற்போது 3250 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்படுகிறது. அதை உடைத்து ஏறினால், வலிமையாக ஏறி 3290 மற்றும் 3360 என்ற எல்லைகளைத் தொடலாம். பின்பு ஏறுமுகமாக மாறலாம்.’’  

கச்சா எண்ணெய், முக்கிய நீண்ட காலத் தடை நிலையான 3250 உடைத்து ஏறியது. மேலே        3310-யைத் தொட்டுள்ளது. இனி 3250 என்ற எல்லையை உடைக்காதவரை இது, மிக வலிமையான ஏற்றத்தை மேற்கொள்ளலாம். இதன் அடுத்தடுத்த எல்லைகள் 3360, 3520 ஆகும். கீழே 3250 உடைக்கப்பட்டால் பேட்டர்ன் தோற்று, இறக்கம் கடுமையானதாக இருக்கும்.