நடப்பு
தொடர்கள்
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

கலெக்டர்களுக்கு டார்கெட் விதித்த நாயுடு!   

BIZ பாக்ஸ்

ந்திராவில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அழைத்து, சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தினார் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்தக் கூட்டத்தில், ‘இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் வளர்ச்சி 5.6% என்கிற நிலையில் இருக்கும்போது, ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள்  சராசரியாக ஆண்டொன்றுக்கு 11.72% வளர்ச்சி பெற்றுள்ளன’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்துவரும் காலாண்டுகளில் சராசரியாக 15% வளர்ச்சி காண வேண்டும் என கலெக்டர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

BIZ பாக்ஸ்

லட்சுமி பெயரில் ஆன்லைன் கரன்சி!

லக அளவில் வர்த்தகமாகும் பிட்காயினைப்போல, லட்சுமி என்கிற பெயரில் உள்நாட்டு ஆன்லைன் கரன்சியை வெளியிட நம் ரிசர்வ் வங்கி யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. நிஜத்தில் இது நடக்குமா என்பது இனிவரும் காலத்தில்தான் தெரியும். இந்த நிலையில், பிட்காயின் ஆன்லைன் கரன்சியானது, வரும் நவம்பரில் மீண்டும் பிரிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ஒருமுறை பிரிக்கப்பட்ட பிட்காயின், இப்போது மூன்றாவது முறை பிரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

BIZ பாக்ஸ்

அர்விந்த் சுப்பிரமணியனுக்குப் பதவி நீட்டிப்பு கிடைக்குமா?

பி
ரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியனின்  பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அவரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்கிற பேச்சு டெல்லி நிதித் துறை வட்டாரங்களில் கிளம்பியிருக்கிறது. என்றாலும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது நிதியமைச்சர் அருண் ஜெட்லிதான் என்கிறார்கள். வெளிநாட்டில் பொருளாதாரப் பேராசிரியர்களாக இருந்த ரகுராம் ராஜனும், அர்விந்த் பனகாரியாவும் மீண்டும் வெளிநாட்டுக்கே திரும்பிவிட்டார்கள். இந்த நிலையில், அர்விந்த் சுப்பிரமணியனின் பதவிக் காலமாவது நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பங்களாதேஷை நோக்கி ஓடும் கம்பெனிகள்!

சிய பசிபிக் பிராந்திய நாடுகளில் தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்ந்துகொண்டே போவதால், பல கம்பெனிகள் மிகக் குறைந்த அளவில் சம்பளம் உள்ள பங்களாதேஷைத் தேடி ஓடத் தொடங்கியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவில் தான் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது. இங்கு மாதந்தோறும் 3,600 டாலர் வரை தரப்படுகிறது. சிங்கப்பூரில் மாதமொன்றுக்கு 1,800 டாலர் தரப்படுகிறது. இந்த நிலையில், சீனாவில் தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்திருப்பதால், பங்களாதேஷை நோக்கி பல நாட்டு கம்பெனிகள் ஓடுகின்றன. பங்களாதேஷில் மாதமொன்றுக்கு 111 டாலர் தந்தால் போதும் என்பதால், ஜப்பான் உள்பட பல்வேறு நாட்டு கம்பெனிகள் அங்கு படையெடுத்து வருகின்றன.

BIZ பாக்ஸ்

மிகக் குறைவாக உயர்ந்த அட்வான்ஸ் டாக்ஸ்!

ட்வான்ஸ் டாக்ஸ் என்பது நிறுவனங்கள் முன்கூட்டியே கட்டும் வரியாகும். இது அதிகமாக இருக்கும்பட்சத்தில், நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு நிறைய லாபம் ஈட்டியிருக்கின்றன என்று அர்த்தம். ஆனால், இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) நிறுவனங்கள் முன்கூட்டியே கட்டிய வரியானது 2% மட்டுமே அதிகரித்துள்ளது. நம் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் ரூ.29,600 கோடி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டின. ஆனால், இந்த இரண்டாம் காலாண்டில் ரூ.30,200 கோடி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலாண்டைவிட  எஸ்.பி.ஐ. ரூ.10 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா       ரூ.120-யும், சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியா ரூ.10 கோடியும் குறைத்து அட்வான்ஸ் வரி கட்டியுள்ளன.

BIZ பாக்ஸ்

அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடு!

வெ
ளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு, கடந்த ஆகஸ்ட்டில் 5.4 மடங்கு அதிகரித்து, 5.4 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகளில் இதுவே அதிகமான தொகையாகும். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானின் சாஃப்ட்பேங்க் வங்கி முதலீடு செய்த 2.5 பில்லியன் டாலரும், டி.எல்.எஃப் நிறுவனத்தில் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்த 1.9 பில்லியன் டாலரும் இதில் அடங்கும். அதே சமயம், கிட்டத்தட்ட 25 திட்டங்களிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறவும் செய்துள்ளன. இவற்றின் மதிப்பு 1.9 பில்லியன் டாலர் ஆகும்.

BIZ பாக்ஸ்

கறுப்புப் பணம் பற்றி வெள்ளைப் புத்தகம்!

பெ
ங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் பேராசிரியர்  ஆர்.வைத்தியநாதன், கறுப்புப் பணம் உருவாவது பற்றி கடந்த பல ஆண்டுகளாகவே பேசியும், எழுதியும் வருகிறார். வெளிநாடுகளில் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை நம் நாட்டுக்கு எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றி நம் மத்திய அரசாங்கத்துக்கு விளக்கமான திட்டத்தைத் தந்துள்ளார். இவர் இப்போது ‘பிளாக் மணி அண்ட் டாக்ஸ் ஹெவன்ஸ்’ (Black Money and Tax Havens) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். வருகிற அக்டோபர் 6-ம் தேதி,  இந்தப் புத்தகத்தை சென்னையில் வெளியிடுகிறார் ஆர்.வைத்தியநாதன்.

BIZ பாக்ஸ்

80,000 - ஜி.எஸ்.டி கணக்குத் தாக்கலின் கடைசி நாளில், ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில்  1 மணி நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை.