நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!

எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!

எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!

நாணயம் விகடன் நடத்தும்  ஃப்யூச்சர்ஸ் அண்ட்  ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில், பெங்களூரு, மதுரை, திருச்சி, சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு எனப் பல ஊர்களிலிருந்து வாசகர்கள் கலந்துகொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினார்.  

எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!

முதல் நாள், எஃப் அண்ட் ஓ-வின் அடிப்படை விஷயங்கள், அதன் வகைகள் பற்றி விளக்கினார். இரண்டாம் நாள், இதனைப் பயன்படுத்தி பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை, கரன்சி சந்தை போன்றவற்றில் எப்படி லாபம் ஈட்டுவது என உதாரணங்களுடன் விளக்கினார்.

“குறைந்த மார்ஜின் தொகையில் அதிக லாபம் பார்க்கக்கூடிய, பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்” எனக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் சொல்லிச் சென்றனர்.  

எஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்!

“பொதுவாகவே, பல டெக்னிக்கலான விஷயங்களைப் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும். ஆனால், எவ்வளவு கடினமான விஷயத்தையும் மிகவும் எளிமையான உதாரணங்களுடன் அருள்ராஜன் விளக்கிச் சொன்னது, எங்களுக்குச் சுலபமாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது” என எஃப் அண்ட் ஓ டிரேடிங்குக்குப் புதிதாக வந்திருக்கும் முதலீட்டாளர்கள் சிலர் பாராட்டிச் சென்றார்.  

- சி.சரவணன்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி