நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கமும் பங்குச் சந்தையும் எதிரெதிர்  திசையில் நகரும் என்பது சென்ற வாரமும்  நிரூபணமாகியுள்ளது, சிறு மாற்றத்துடன்.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் நாம் சொன்னது...

“கீழே 29450 என்பது காளைகள் எல்லை; மேலே 29750 என்பது கரடிகள் தற்காப்பு எல்லை. மேலே 29750 உடைக்கப்பட்டால், அடுத்த முக்கிய எல்லைகள் 30090 மற்றும் 30400 ஆகும்.”

தங்கம், தனது மேல் எல்லையான 29750 -ஐ உடைத்தது. அதன்பின் வலிமையாக ஏறி திங்களன்று 30150 என்ற உச்சத்தையும், அடுத்த நாள் 30195 என்ற உச்சத்தையும் தொட்டது.  பின், படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. பங்குச் சந்தை,  சென்ற வாரம் திங்கள் முதல் அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து இறங்க ஆரம்பித்தது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


 
ஆனால், திங்களன்று வலிமையான ஏற்றம் கண்ட தங்கம், செவ்வாயன்று இன்னும் ஏற முயன்று, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இடத்தில்தான்,  பங்குச் சந்தைக்கு எதிரான நகர்விலிருந்து மாறி, பங்குச் சந்தை இறங்கும் அதே திசையில் நகர ஆரம்பித்தது.

எனவே, நாம் ஒப்பீட்டு நகர்வை நாம் எப்போதுமே அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது.  அதாவது, தனிப்பட்ட முறையில் எந்த அஸெட் கிளாஸ் எந்தத் திசையில் நகர்கிறது என்பதை ஃபண்டமென்டலாகவோ அல்லது டெக்னிக்கலாகவோ பார்க்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்?

தங்கம் தற்போது 29450 முதல் 29500 என்ற முக்கிய எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. தங்கம் 29450 என்ற எல்லையை உடைத்து இறங்க ஆரம்பித்தால், ஆடம் மற்றும் ஈவ் என்ற உருவமைப்பைத் தோற்றுவிக்கலாம். அப்படி நிகழ்வதினால் வலிமையானதொரு இறக்கம் வரலாம். இந்த இறக்கம் 600 - 800 புள்ளிகள் வரை இறங்கலாம்.    

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தற்போதைய உடனடித் தடைநிலை 29950 ஆகும். இதை உடைத்து ஏறினால், வலிமையான ஏற்றம் தொடரலாம்.

வெள்ளி (மினி)

வெள்ளியின் விலைப்போக்கு குறித்து நாம் சென்ற வாரம் சொன்னது...

“தற்போது 39500 என்பது மிக மிக முக்கிய ஆதரவாக உள்ளது.  இந்த எல்லை உடைக்கப் பட்டால், 38800 என்ற எல்லை வரை இறங்கி அங்கு ஒரு ஆதரவை எடுக்கலாம். அதையும் உடைத்தால், பெரும் வீழ்ச்சியடையலாம்.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

மேலே 40500 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதைத் தாண்டி ஏறினால், காளைகள் வலுவான நிலைக்குத் தள்ளப்படும்.”

வெள்ளியானது கடந்த வார முடிவில் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தது. தங்கம் எப்படி சென்ற வாரம் ஏறியதோ, அதைப்போன்றே வெள்ளியும் ஏறியது. நாம் தந்திருந்த முக்கிய ஆதரவு 39500 என்ற எல்லை வலிமையாகக் காளைகளால் காக்கப்பட்டது. இந்த எல்லையிலிருந்து மேலே வலிமையாக ஏற ஆரம்பித்தது.

திங்களன்று ஏறிய இந்த வலிமையான ஏற்றம்,  நாம் முன்பு கொடுத்த வலிமையான தடைநிலையை நோக்கி நகர்ந்தது. அதாவது, 40500 என்ற எல்லையை நோக்கி நகர்ந்தது. திங்களன்று 40444 வரையும், செவ்வாயன்று 40500 வரையும் தாண்ட முயன்று, அதில் தோல்வியுற்று இறங்க ஆரம்பித்தது. மீண்டும் எங்கிருந்து எழ ஆரம்பித்ததோ, அங்கேயே முடிந்துள்ளது.

இந்த நிலையில், இனி என்ன நடக்கலாம்?

மீண்டும் வரலாறு திரும்பும் என்றே டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்கிறது. அந்த வகையில், வெள்ளியிலும் வரலாறு திரும்பியுள்ளது.

எனவே, ஆதரவு 39500 என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. உடைத்தால் வலிமையான இறக்கம் வரலாம். மேலே 40500 என்பது தடைநிலை.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் பற்றி நாம் சென்ற வாரம் சொன்னது...

“இனி 3250 என்ற எல்லையை உடைக்காதவரை இது மிக வலிமையான ஏற்றத்தை மேற்கொள்ளலாம். இதன் அடுத்தடுத்த எல்லைகள் 3360, 3520 ஆகும். கீழே 3250 உடைக்கப்பட்டால்,  இறக்கம் கடுமையானதாக இருக்கும்.” 
 
கச்சா எண்ணெய் 3250 என்ற ஆதரவை எடுத்து ஏற ஆரம்பித்தது.  மேலே 3310-யை உடைத்தவுடன் வலிமையான ஏற்றம் நிகழ்ந்துள்ளது. இது 3490 வரையும் சென்றது.

இனி 3380 என்பது வலிமையான ஆதரவு நிலை ஆகும். இந்த எல்லை உடைக்கப்படாத வரை ஏற்றம் தொடரலாம். 

மேலே 3520 மற்றும் 3580 என்பது தடைநிலையாகும்.