நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்!

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

பொதுவாக, பங்குச் சந்தையில் வைத்திருக்கும் கணக்குத் தனியாகவும்,  கமாடிட்டி சந்தையில் வைத்திருக்கும் கணக்குத் தனியாகவும் கையாளப்படுகின்றன. காரணம், பங்குச் சந்தைக்குத் தனியாக செபி என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது.  கமாடிட்டி சந்தைக்கு ஃபார்வர்ட் மார்க்கெட் கமிஷன் என்ற ஒழுங்கு முறை ஆணையம் இருந்தது. தற்போது, மத்திய அரசின் ஆணைப்படி,  கமாடிட்டி சந்தை வர்த்தகமும், செபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.  இதனால், எல்லா பங்குச் சந்தை மற்றும் காமாடிட்டி சந்தை புரோக்கர்களும், செபி என்ற ஓர் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தச் செயல்பாட்டுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்களுக்கு  ஏதுவாக நடவடிக்கைகளை செபி எடுக்க ஆரம்பித்துள்ளது.  

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்!

அதில் ஒன்றாக, தற்போது பங்குச் சந்தை புரோக்கர்கள், கமாடிட்டி சந்தையில் வணிகம் செய்யவும், காமாடிட்டி புரோக்கர்கள் பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் டீமேட் கணக்கு வைத்திருக்கும் நமக்கு என்ன லாபம்?

இதற்கு முன்பு, நாம் பங்குச் சந்தையில் கணக்கைத் தொடங்கும்போது, ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கியிருப்போம்.  இந்த டீமேட் கணக்கில் நாம் வாங்கும் பங்குகளை வைத்திருப்போம். அதேபோல், கமாடிட்டி சந்தை யில் வர்த்தகம்  செய்ய வேண்டுமானால், அதற்குத் தனியாக ஒரு டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டும். தற்போதைய விதிமுறை மாற்றத்தால், இனி தனியாக டீமேட் கணக்குத் தேவையில்லை.

நாம் பங்குச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு தனியாக மார்ஜின் பணம் வைத்திருக்கவேண்டும்; அதேபோல், கமாடிட்டி சந்தைக்கும் தனியாக மார்ஜின் பணம் வைத்திருக்கவேண்டும். ஒரு கணக்கில் பணம் வைத்திருக்கிறோம், மற்றதில் பணம் இல்லையென்றால், பணம் இல்லாத செக்மென்டில் வியாபாரம் செய்ய முடியாது. ஆனால், தற்போது வந்துள்ள மாற்றம் காரணமாக, நமது  பங்குச் சந்தை வியாபாரக் கணக்கில் பணம் இருந்தால், அதை வைத்து கமாடிட்டி சந்தையிலும் வியாபாரம் செய்ய முடியும். அதேபோல், கமாடிட்டி கணக்கில் இருக்கும் மார்ஜின் பணத்தை வைத்துப் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.