மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

பிசினஸ் என்பது எப்போதுமே சவால்கள் நிறைந்ததுதான். ஏற்றுமதி தொழிலும் அப்படித்தான். அவற்றில் பல விஷயங்களை நான் உங்களுக்குக் கடந்த வாரங்களில் விரிவாகக் கூறி வந்திருக்கிறேன்.அவற்றைச் சுருக்கமாக விளக்கும் ஃப்ளோ சார்ட் ஒன்றை இங்கே கொடுத்துள்ளேன். இதன்மூலம் ஷிப்மென்டுக்கு முன்பும், ஷிப்மென்டுக்குப் பிறகும் ஏற்றுமதித் தொழிலில் செய்ய வேண்டிய விஷயங்களை 15 ஸ்டெப்களில் நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.    

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்!

ஷிப்மென்டுக்கு முன்

1. முதலில் என்ன பொருளை ஏற்றுமதி செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டு இறக்குமதியாளரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

2. இறக்குமதியாளரிடம் தெளிவாக பிசினஸ் பற்றிப் பேச வேண்டும். இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய சில முக்கியமான கேள்விகளை முன்பே கூறியிருக்கிறேன். அவற்றை விளக்கமாகப் பேசிய பிறகு பர்ச்சேஸ் ஆர்டரை உறுதி செய்ய வேண்டும். 

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்!3.  அடுத்து, இறக்குமதியாளரிடம் பேமென்ட் முறைகள் பற்றிப் பேச வேண்டும். எல்சி, அட்வான்ஸ் இரண்டில் ஒன்றுக்கு ஓகே சொல்ல வேண்டும். அடுத்து பொருள் கொள்முதலுக்குத் தயாராகிவிடலாம். 

4. எல்சி, அட்வான்ஸ் இரண்டுக்கும் ஒப்புக்கொள்ளவில்லை எனில், பிற பேமென்ட் முறைகளுக்கு இசிஜிசி-யிடம் பிரீமியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இசிஜிசி-யும் சரிவரவில்லை எனில், வேறு இறக்குமதியாளரை அணுகவும். (பேமென்ட் முறைகள், இசிஜிசி பற்றியெல்லாம் விரிவாக ஏற்கெனவே சொல்லியுள்ளேன்)

5. அடுத்து, பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இறக்குமதியாளர் கேட்கும் தரத்திலும், லாபகரமானதாக இருக்கும் வகையிலும் கொள்முதல் செய்ய வேண்டும்.

6. பொருளைக் கொள்முதல் செய்தபிறகு, தேவையான ஆவணங்களையும், தேவையான சான்றிதழ்களையும் தயார் செய்ய வேண்டும்.  

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்!
நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்!

7. ஆவணங்களை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட் வசம் கொடுத்துவிட்டால் மற்ற ஏற்பாடுகளை அவர் செய்வார்.

8. பின்னர், பொருள்களைப் பேக்கிங் செய்து, உங்களுடைய இடத்திலிருந்து துறைமுகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டு்ம்.

9. துறைமுகத்தில் பொருள்கள் கன்டெய்னரில் ஏற்றப்பட்டு, அது கப்பலில் ஏற்றப்படும்.

10. கப்பல் நம்முடைய துறைமுகத்திலிருந்து இறக்குமதியாளரின் துறைமுகத்துக்குச் செல்லும்.

ஷிப்மென்ட்டுக்குப் பின்

11. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டிடமிருந்து எக்ஸ்போர்ட்டர் காப்பி, பில் ஆஃப் லோடிங் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, அதில் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

12. பின்னர், அந்த ஆவணங்களை நகல் எடுத்துக்கொண்டு, ஒரிஜினல் ஆவணங்களை வங்கியில் கொடுக்க வேண்டும்.

13. நகல் எடுத்த ஆவணங்களைத் தொழில் வளர்ச்சிக்காகவும் சட்ட நடைமுறைகளுக்காகவும் அலுவலகத்தில் நிர்வகிப்பது அவசியம். 

14. அந்த ஆவணங்களை வைத்து ஜி.எஸ்.டி வரிக் கணக்கை, ஆன்லைன் மூலமாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

15. வங்கியில் சமர்ப்பித்த ஆவணங்களானது, இறக்குமதி யாளரின் வங்கிக்குச் சென்று, அதை அவர் பெற்றுக்கொண்டு சரக்கை எடுத்தபிறகு, பணம் உங்கள் கணக்குக்கு வரும். ஆவணங்களையும், வருமானத்தையும் வைத்து நம் தொழிலின் நிதிநிலையை  நிர்வகிக்க வேண்டும்.

எந்தப் பொருளை ஏற்றுமதி செய்தாலும், இறக்குமதியாளர் யாராக இருப்பினும் மேற்கண்ட 15 ஸ்டெப்களின் அடிப்படையில்தான் செய்ய வேண்டும். அடுத்த இதழில் ஏற்றுமதி தொழிலில் ஜி.எஸ்.டி வரி நடைமுறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

(ஜெயிப்போம்)