நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!

ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் நான்  எஸ்.பி.ஐ மேக்னம் மிட் கேப் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் ரூ.1,000 முதலீடு செய்துவருகிறேன். கூடுதலாக ரூ.1,000 அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நான் எந்த ஃபண்டில் முதலீடு செய்தால் சரியாக இருக்கும்?     
   
பிரசாந்த், மெயில் மூலமாக 

ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!

“எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட் தற்போது, அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டைவிடவும் சுமாராகச் செயல்பட்டு வருகிறது. ஆகவே,  நீங்கள் செய்துவரும் இந்த முதலீட்டை  நிறுத்திவிடுங்கள். கூடுதலாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யமுடியும் என்று கூறியுள்ளீர்கள். எனவே, மொத்தம் 2,000 ரூபாயை பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்ட் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.”
       
என் மகளுக்கு இரண்டு வயது ஆகிறது. அவளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். என்னிடம் இப்போது மூன்று லட்சம் ரூபாய் உள்ளது. அதனை என் மகளின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்ய, நல்ல திட்டங்களைப் பரிந்துரை செய்யவும். 20-25 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடர விரும்புகிறேன்.

ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!


   
ஸ்ரீகண்ணன், மெயில் மூலமாக


“உங்களின் குழந்தையின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்ய விருப்பப்படுகிறீர்கள். மேலும், 20  முதல் 25 ஆண்டுகளுக்கு முதலீட்டை வெளியே எடுக்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளீர்கள். எனவே, அதிக வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

நீங்கள் வைத்திருக்கும் ரூ.3 லட்சத்தை மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்டில் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்களின் காத்திருப்பு காலத்துக்கு  நல்ல வருமானம் கிடைக்கும்.”
        
என் வயது 30. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மாதம் ரூ.20 ஆயிரத்தை 5 மற்றும் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். ரிஸ்க் எடுக்கவும் தயார். தற்போது பி.பி.எஃப்-ல் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்து வருகிறேன். இதுவரை ரூ.1.4 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி புரோ குரோத் யூலிப் திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன். இதற்கு மூன்று ஆண்டுகள் லாக்-இன் பிரீயட் ஆகும்.கோடக் மஹேந்திரா இன்ஷூரன்ஸில் மாதமொன்றுக்கு ரூ.2,035 பிரிமீயமாகக் கட்டி வருகிறன். இவற்றிலிருந்து எனக்கு என்ன நன்மை கிடைத்தது என்பது பற்றி நான் இதுவரை கணக்குப் போட்டுப் பார்க்கவில்லை. அடுத்த 12 முதல் 15 ஆண்டுகளில் எனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கிற மாதிரி என் முதலீட்டினை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன். எனக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைச் சொல்லுங்கள்.

சொக்கநாதன், மெயில் மூலமாக


 ‘‘உங்களுக்கு இப்போது முப்பது வயதே ஆகிறது. ஆகவே, பி.பி.எஃப்-ல் மிகக் குறைந்த  தொகையை முதலீடு செய்துகொள்ளுங்கள்.    பி.பி.எஃப்-லும் உங்களுக்கு 15 வருட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வளவு காலம் அதில் காத்திருப்பதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் டாக்ஸ் சேவிங்ஸ் (இ.எல்.எஸ்.எஸ்) ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பி.பி.எஃப்-ல் முதலீடு செய்யும் ரூ.1 லட்சத்தை, வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது மாதாமாதம் 8,500 ரூபாயாகவோ (எஸ்.ஐ.பி முறையில்) டாக்ஸ் சேவிங்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்கள். 10 ஆண்டுகளுக்குமேல் முதலீடு செய்கையில், டாக்ஸ் சேவிங்ஸ் திட்டங்கள், பி.பி.எஃப்-ஐவிட அதிக வருமானத்தைத் தரும்.

யூலிப் திட்டங்களில் இதுவரை முதலீடு செய்ததுபோதும். மேற்கொண்டு புதிதாக யூலிப் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐந்து மற்றும் இருபது வருடங்களுக்காக எவ்வளவு முதலீடு செய்ய விருப்பப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் பிரித்துக் கூறவில்லை. இரண்டு காலகட்டங்களுக்கும் தலா ரூ.10,000 முதலீடு செய்ய விருப்பப்படுகிறீர்கள் என எடுத்துக் கொண்டுள்ளேன். அந்த அடிப்படையில் உங்கள் முதலீட்டைக் பின்வருமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

பிரின்சிப்பல் குரோத் ஃபண்டில், ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயும், ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயும் முதலீடு செய்யவும்.” 

ஃபண்ட் கார்னர் - மகளின் எதிர்காலத்துக்கு ஏற்ற நீண்ட கால முதலீட்டுத் திட்டம்!