
அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவைதானா?
நம்மில் பலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தயங்குவதற்குக் காரணம், அதில் முதலீடு செய்யும்போது உள்ள ரிஸ்க்தான். மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களில், ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயத்துக்கு உட் பட்டது; முதலீடு செய்யும்முன் திட்டம் பற்றிய அனைத்து தகவல்களையும் கவனமாகப் படிக்கவும்’ என்று அறிவுறுத்தப்படுகிறது. இது முழுக்க உண்மையல்ல. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அனைத்துத் திட்டங்களும் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை அல்ல.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக் கொண்டால், இன்கம் ஃபண்டுகள், டெட் ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் என்பவை முக்கிய வகைகளாகும். இவற்றில், பேலன்ஸ்டு ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி மட்டுமே நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படு கின்றன. எனவே, இந்த ஃபண்டுகள் மட்டுமே சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை.
மற்ற ஃபண்டுகள், மார்க்கெட் அபாயத்துக்கு பெரிய அளவில் உட்படாதவை என்பதால், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட (ஓராண்டு வருமானம் சுமார் 6.50%) சற்று அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் இன்கம் மற்றும் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றின் மூலம் வரும் லாபத்துக்கு மூன்றாண்டுக்குப் பிறகு பணவீக்க விகித சரி கட்டலுக்குப்பின் 20% வரி கட்டினால் போதும்.
- சேனா சரவணன்