நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் (மினி)

சென்ற வாரமானது தங்கத்தில் வியாபாரம் செய்ய அத்தனை உகந்ததாக இல்லை. வாரத்தின் முதலில் நல்ல ஏற்றத்தைக் கொடுத்தபிறகு, தங்கத்தின் விலை நகர்வானது மிகக் குறுகிய எல்லைக்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

பொதுவாக, தங்கத்தின் விலை மாற்றமானது  உலகக் காரணிகளால் ஏற்படும். குறிப்பாக, உலகப் பங்குச் சந்தைகள் இறங்க ஆரம்பித்தால்,  அதில் முதலீடு செய்தவர்களெல்லாம் அதிலிருந்து வெளியேறி, பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்யக்கூடிய இடமாகத் தங்கத்தைப் பார்ப்பார்கள். அதனால்தான், பங்குச் சந்தை ஏறினால், தங்கம் இறங்கும் என்றும், பங்குச் சந்தை இறங்கினால் தங்கம் ஏறும் என்றும் கூறுவர்.

ஆனால், தற்போது தங்கம் மற்றும் பங்குச் சந்தைகள் ஒரே நேரத்தில் ஏறுவதையும், ஒரே நேரத்தில் இறங்குவதையும் காணமுடிகிறது. மேலும், டாலர் இண்டெக்ஸ் ஏற்றத்தாழ்வுக்கேற் பவும் தங்கம் நகரும். கடைசியாக, டிமாண்ட் அண்டு சப்ளை என்பதுதான் விலையை நிர்ணயிக்குமென்பது அடிப்படைச் சித்தாந்தம். இவையெல்லாம் விலையில் வெளிப்படும் என்பதால், நாம் வியாபாரம் செய்ய டெக்னிக்கல் அனாலிசிஸ் என்ற முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். அது, நீங்கள் வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்கடந்த வாரத்தில் நாம் சொன்னது போலவே, புதிய ஏற்றம் வந்தது. சென்ற வாரம் திங்களன்று, வெள்ளிக்கிழமையின் தொடர்ச்சியாக வலிமையாக ஏறியது.  அதாவது, 29540-ல் தொடங்கி மெள்ள மெள்ள ஏறி, 29670-ல் முடிவடைந்தது. அடுத்து செவ்வாயன்று தொடர்ந்து ஏறி, அதிகபட்சமாக 29798 என்ற புள்ளியைத் தொட்டு, பின்பு 29768-ல் முடிவடைந்தது. அதன்பிறகு மூன்று நாள்களாக 29640 என்ற கீழ் எல்லையை ஆதரவாகக் கொண்டும், மேலே 29840 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டும் இயங்கி வருகிறது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் ஒரு குறுகிய எல்லைக்குள் இருப்பதால், 29840 என்ற தடையைத் தாண்டி ஏறினால், மேலே 29920 மற்றும் 30180 என்ற எல்லைகளை அடையலாம். கீழே 29640 என்ற ஆதரவை உடைத்து இறங்கினால், 29258 என்ற முந்தைய ஆதரவு நிலையை நோக்கி நகரலாம். இதை உடைத்தால் பெரிய வீழ்ச்சி வரலாம்.

வெள்ளி (மினி)


சென்ற வாரம் சொன்னது...

“தற்போதைய ஆதரவு எல்லையான 39026 என்ற எல்லை உடைக்கப்படுமா என்று பார்க்க வேண்டும். அப்படி உடைக்கப்பட்டால், 28650 என்ற எல்லையை அடையலாம். அதன்பின் பெரிய அளவில் இறங்கி 800 - 1000 புள்ளிகளை இழக்கலாம். மேலே 39400 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. இந்தத் தடையை உடைத்து ஏறினால், ஒரு புல்பேக் ரேலி வரலாம், இதன் அடுத்த எல்லை 40100 ஆகும்.”   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


புல்பேக் ரேலியும் வந்தது. மேலே 39400 என்ற தடையைத் திங்களன்று உடைத்து ஏறியது. திங்களன்று 40025 வரை சென்றது. அடுத்து செவ்வாயன்று வலுவான ஒரு ஏற்றத்தைக் கண்டது. இந்த ஏற்றம், 40485 என்ற எல்லையைத் தொட காரணமாக இருந்தது. அதன்பின் ஒரு குறுகிய எல்லைக்குள் நகர ஆரம்பித்துள்ளது. 

இனி என்ன நடக்கலாம்?


வெள்ளி தற்போது கீழே 40000 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடைத்து ஏறினால், 41200 மற்றும் 41700-யைத் தொடலாம்.  கீழே 39900 என்ற உடனடி ஆதரவு உடைக்கப்பட்டால், கணிசமாக இறங்கி 39600 மற்றும் 38900 என்ற எல்லைகளைத் தொடலாம்.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், தினசரி வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. அதேபோல், சென்ற வாரம் ஒரு நல்ல ஏற்றமுள்ள வாரமாகவும் இருந்தது.

கச்சா எண்ணெய் விலைப் போக்கு குறித்து நாம் சென்றவாரம் சொன்னது... 

“இனி, இந்த 3250 என்ற ஆதரவு எல்லை உடைக்கப்படாதவரை மீண்டும் மீண்டும் ஏறலாம். தற்போது 3350 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது.”  

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த இரண்டு எல்லைக்கிடையேதான் நகர்ந்தது.   கீழே 3250-ஐ உடைத்தால் வலுவாக இறங்கக்கூடிய சூழல் இருந்தாலும், சற்று இறங்கி தாக்குப் பிடித்து, பின் வலுவாக ஏற ஆரம்பித்தது. அந்த ஏற்றமானது மேலே 3350 என்ற எல்லை வரை நகர்ந்து, தயங்கி நிற்கிறது.

இனி என்ன நடக்கலாம்?

கச்சா எண்ணெய் ஒரு தலைகீழ் ஹெட் அண்டு ஹோல்டர் அமைப்பைத் தோற்று வித்துள்ளது. மேலே 3350 என்ற தடையைத் தாண்டி ஏறினால், 80 - 100 புள்ளிகள் ஏறலாம்.

கீழே உடனடி ஆதரவாக 3250 உள்ளது.  அடுத்து 3210 என்பது மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இதை உடைத்து இறங்கினால் பெரிய இறக்கம் வரலாம்.