நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம் மினி

தீபாவளியைப் பங்குச் சந்தை சார்ந்தவர்கள்,  ஒரு திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.  தீபாவளியில், வடநாட்டவர்கள் தங்கள் வியாபார கணக்கைத் துவங்குவார்கள். அதனால்தான், தீபாவளியன்று விடுமுறையாக இருந்தாலும், ஒரு மணி நேரம்  வியாபாரம் நடத்தப்படுகிறது. இப்போது கமாடிட்டி வியாபாரமும் அப்படியே கொண்டு செல்லப்படுகிறது. வியாழனன்று விடுமுறை நாளாக இருந்தாலும், மாலை ஒரு மணிநேரம் கமாடிட்டி வியாபாரமும் நடந்தது.   

சென்ற வாரம், கமாட்டி வியாபாரம் மூன்று நாட்கள் மட்டுமே முழுஅளவில் நடந்தது.  

சென்ற வாரம் சொன்னது, ‘ தங்கம் ஒரு குறுகிய எல்லைக்குள் இருப்பதால் 29840 என்ற தடையைத் தாண்டி ஏறினால், மேலே 29920 மற்றும் 30180 என்ற எல்லைகளை அடையலாம். கீழே 29640 என்ற ஆதரவை உடைத்து இறங்கினால், 29258 என்ற முந்தையஆதரவு நிலையை நோக்கி நகரலாம்.  இதை உடைத்தால் பெரிய வீழ்ச்சி வரலாம்.’ 

கமாடிட்டி டிரேடிங்!



சென்ற வாரம், தங்கம் பெரிய ஏற்றமும் இல்லாமல், பெரிய இறக்கமும் இல்லாமல் முடிந்துள்ளது. ஆனால், ஒரு பிக் பிக்சராக பார்க்கும்போது, தங்கம் ஒரு டவுன் டிரென்ட் சேனலில் இருக்கிறது. மேலே 29920 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.   திங்களன்று 29809-ல் ஆரம்பித்து, பின் அதிகபட்சமாக 29896-ஐ இடித்துவிட்டு கீழே இறங்கி, டோஜி உருவமைப்பைத் தோற்றுவித்தது. இந்த அமைப்பு, ஏற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகக் காட்டுகிறது.  செவ்வாயன்று கடும் இறக்கம் நிகழ்ந்து, குறைந்தபட்ச புள்ளியாக 29550 என்ற எல்லையைத் தொட்டது.  அடுத்து புதனன்று பெரிய மாற்றம் இல்லாமல் ஒரு ஸ்பின்னிங் டாப்பாக முடிந்துள்ளது. 

இனி என்ன நடக்கலாம்? தங்கத்தின் டவுன்டிரென்ட் சேனலின் மேல் எல்லை 29920ஆகவும், கீழ் எல்லை 29000ஆகவும் உள்ளது.  இந்த நிலையில், மையப்புள்ளியானது 29500-ல் உள்ளது. இந்தப் புள்ளி இப்போது முக்கிய ஆதரவாக உள்ளது. இதை உடைத்துக் கீழே இறங்கினால், பெரிய இறக்கம் வரலாம். 

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி மினி

திங்கள்கிழமையன்று, வெள்ளி பலமாக ஏற முயற்சி செய்தது. அதிகபட்சமாக 40650 வரை ஏறியது.  பின் அதை தக்கவைக்கமுடியாமல், கீழே இறங்கி 40364-ல் முடிந்துள்ளது. கேன்டில் அமைப்பில் சொல்வதாக இருந்தால், அது ஒரு ஷூட்டிங் ஸ்டாராக முடிந்துள்ளது. இந்த ஷூட்டிங் ஸ்டார் சொல்வது என்னவென்றால், காளைகள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து விட்டன; இறங்க ஆரம்பித்தால், சந்தை, கரடி கைக்கு மாறும் என்பதைத்தான். அடுத்தநாள் சந்தை, கரடி கைக்கு மாறியது.  செவ்வாயன்று 40310-ல் ஆரம்பித்த வெள்ளியின் விலை, படிப்படியாக இறங்கி 39750-க்கு இறங்கியது. புதனன்று நடந்த வியாபாரத்தில், 39612 வரை இறங்கியது.  வியாழனன்று டோக்கன் வியாபாரம் என்பதால் பெரிய மாற்றம் இல்லை.    

கமாடிட்டி டிரேடிங்!

இனி, தற்போதைய வலிமையான இறக்கத்துக்குப் பிறகு புல்பேக் ரேலி வரலாம். இந்நிலையில் 39500 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. இது  உடைக்கப்பட்டு இறங்கினால், வலிமையான இறக்கம் வரலாம். அது, அடுத்த ஆதரவான 39000-ஐ நோக்கி நகரலாம். பின் பெரிய வீழ்ச்சி வரலாம். மேலே 40200 என்பது மிக முக்கியத் தடைநிலையாக உள்ளது. இதைத் தாண்டாதவரை மீண்டும்  இறங்கலாம்.  

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய் மினி

கச்சா எண்ணெய், அக்டோபர் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது நாம் நவம்பர் கான்ட்ராக்ட்டுக்கு மாறிவிட்டோம். உலகச் சந்தையில், ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முயற்சி செய்கிறது.
இதற்கு ரஷ்யாவும் ஆதரவு. எனவே, கச்சா எண்ணெய்  ஏறலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

ஆனால், அவ்வப்போது வரும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு அதை உடைத்துவிடும்.இனி டெக்னிக்கலாக பார்க்கலாம்.  பிக் பிக்சர் என்றால், கச்சா எண்ணெய் கீழே 3230 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 3430 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது. இருந்தாலும், உடனடி ஆதரவாகச் சொல்வதாக இருந்தால் 3290 ஒரு பிவட் புள்ளியாகச் செயல்படலாம். இதை உடைத்தால் இறக்கம் வரலாம்.   

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

மென்தா ஆயில் பற்றி சென்ற வாரம் சொன்னது. “1128ஐ தாண்டி ஏறிய பிறகு,  1264 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு மீண்டும் கீழே உள்ள எல்லையான 1228-ஐ நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மென்தா ஆயிலின் 1228 என்ற முந்தைய தடைநிலை, இனி ஆதரவு எல்லையாக மாறலாம். மேலே 1248 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. எந்த எல்லை உடைக்கிறதோ அந்தத் திசையில் வியாபாரம் செய்யலாம்.”

மென்தா ஆயில், முந்தைய வாரம் 1228 என்ற வலிமையான தடைநிலையை உடைத்து ஏறியது.   அதன் பின், தற்போது 1228 ஆதரவாகவே மாறிவிட்டது. டெக்னிக்கல் அனாலிசிஸ் படிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.  அதாவது, விலையானது, ஒரு தடைநிலையைத் தாண்டி ஏற ஆரம்பித்த பிறகு, அந்தத் தடைநிலையே, அதன்பின் ஆதரவாக மாற வாய்ப்புண்டு.  இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் பார்க்கும் போதுதான், மென்தாயில் 1228 என்ற தடையைத் தாண்டி ஏற ஆரம்பித்த பிறகு, அந்தத் தடைநிலையே ஆதரவாக மாற வாய்ப்புள்ளது என்று கூறினேன்.  அதுதான் இப்போது நடந்து வருகிறது. மென்தா ஆயில் சென்ற திங்களன்று, முந்தைய வாரத்தின் ஏற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறங்கியது. இந்த இறக்கமானது, கீழே நாம் முன்பு குறிப்பிட்டு இருந்த 1228 என்ற ஆதரவு எல்லையை நோக்கி நகர்ந்தது.

ஆனால், 1235 - 1240 என்ற எல்லையிலேயே ஆதரவு எடுத்து மேலே திரும்பியது. இந்த ஏற்றமானது மென்தா ஆயிலை 1252 என்ற உச்சத்தைத் தொட வைத்தது. அடுத்து செவ்வாயன்றும் ஏற்றம் தொடர்ந்தது. இந்த ஏற்றம் 1267 என்ற புள்ளிவரை சென்று, அதற்கு மேலே போக முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, இப்போது 1267 - 1270 என்ற எல்லை தடைநிலையாக மாறியுள்ளது. அடுத்த நாளும் விலையானது, 1270 வரை நகர்ந்து சென்று, பின் சற்றே இறங்குமுகமாக மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் 1270 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப் படுகிறது.  கீழே 1228 என்ற எல்லை வலிமையான ஆதரவாக மாறியுள்ளது. இந்த எல்லைகளை வைத்தே இனி வியாபாரம் செய்யவேண்டும்.  

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

காட்டன், முந்தைய வாரங்களில் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்தது எனப் பார்த்தோம்.  அதன் பின் ஒரு பலமான ஏற்றத்தையும் பார்த்தோம். ஆனால், ஏற்றத்துக்குப் பிறகு, தடைநிலையான 19420 என்ற எல்லையை கேப் அப் முறையில் தாண்டி ஏறி, அதை தக்கவைக்க முடியாமல் பலமாக இறங்கியது.  அதாவது 18700 என்ற எல்லையிலிருந்து மேலே ஏறி தடைநிலையான 19420-ஐ தாண்டி, இன்னும் மேலே ஏறி 19600 வரை ஏறி, பிறகு இறங்கியது.   முந்தைய வாரம், இந்த இறக்கத்தின் விளைவாக 19600-லிருந்து விழுந்த காட்டன் விலை 18970-ல் முடிந்தது.

கடந்த வாரம், இந்த இறக்கத்தின் தொடர்ச்சியாக வலிமையாக இறங்க ஆரம்பித்தது. திங்களன்று நன்கு இறங்கி 18680-ல் முடிந்தது. அதாவது, நாம் இதுவரை சொல்லி வந்த 18700 என்ற ஆதரவு எல்லைக்கு வந்துவிட்டது. வேகமான ஏற்றம் என்பது, வேகமான இறக்கத்தில் முடியலாம் என்று சொல்வதை இது நிரூபித்துள்ளது. அடுத்து வந்த நாள்களில் காட்டன் விலையானது 18700 என்ற எல்லையை மையப்புள்ளியாக வைத்து, சற்றே (100 புள்ளிகள்) மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் நல்ல இறக்கத்துக்குப் பிறகு, 18550 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.  மேலே 18850 என்ற எல்லையைத் தடைநிலையாக கொண்டுள்ளது. தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் ஒரு வலுவான நகர்வு உண்டு. உஷாராக இருங்கள். பலனை அனுபவியுங்கள்.  ஆனால், தொடர்ந்து கொடுத்து வரும் வியாபார விதிமுறைகளில் ஒன்றான, கண்ணில் பார்த்த லாபம் கணக்கில் வரவேண்டும் என்பதை மறக்கக்கூடாது.