நடப்பு
Published:Updated:

பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?

பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?

ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

நான் எனது பழைய நகைகளை விற்று ஒரு வீடு வாங்கலாம் என்று நினைக்கிறேன்.  இப்படி விற்கும்போது ஜி.எஸ்.டி செலுத்த வேண்டுமா ?

ஆர்.சரோஜா, கோவை   

பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?

“நீங்கள் பழைய நகைகளை விற்கும் போது ஜி.எஸ்.டி செலுத்தத் தேவை யில்லை. வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திலோ அல்லது லாபம் ஈட்டும் நோக்கத்திலோ செய்யப்படும் செயல்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே     ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். நீங்கள் உங்களின் பழைய நகைகளை விற்பது இந்த நோக்கத்துக்கல்ல என்பதால் இதற்கு   ஜி.எஸ்.டி எதுவும் செலுத்தத் தேவையில்லை.”

நான் பிரபலமான கார் கம்பெனிக்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்தி விற்றுவருகிறேன். தற்போது, ஆகஸ்ட் மாதம் சப்ளை செய்த பொருள்களின் விலையைக் குறைக்குமாறு நிர்பந்தப்படுத்துகிறார்கள். இதற்காக நான் சில பொருள்களின் விலையைக் குறைத்துள்ளேன். இவ்வாறு விலையைக் குறைக்கும்போது அதற்குரிய டெபிட் நோட்டோ, கிரெடிட் நோட்டோ நானோ, அவர்களோ தரும் பட்சத்தில் இதற்கு ஏதும் கால அவகாசம் உள்ளதா, வேறு ஏதும் ஜி.எஸ்.டி முறையில் செய்ய வேண்டுமா? 

சிங்காரவேலன், திருநின்றவூர்


“நீங்கள் சப்ளை செய்த பொருள்களுக்கான டெபிட் நோட் அவர்கள் கொடுக்கும்பட்சத்திலோ, கிரெடிட் நோட் நீங்கள் கொடுக்கும்பட்சத்திலோ நீங்கள் விலையை மாற்றி அமைத்ததிலிருந்து 30 நாள்களுக்குள் சப்ளிமென்டரி இன்வாய்ஸைக் (Supplementary Invoice) கொடுக்க வேண்டும். இந்த விலைக்குறைப்பினால் நீங்கள் கட்ட வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகை குறையும். இந்தத் தொகைக் குறைப்பை நீங்கள் கிரெடிட் நோட் பெற்ற பிறகுதான் உள்ளீட்டு வரிக் குறைப்புக்கேற்ற வகையில் சரிசெய்துகொள்ள முடியும். ஆகவே, நீங்கள் சப்ளை செய்த கார் கம்பெனியும் அதற்குரிய ஆவணங்களை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுங்கள்.’’ 

பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?எங்கள் நிறுவனத்தின் கணக்காளர் உள்ளீட்டு வரியை (Input tax credit) இரண்டுமுறை எடுத்துவிட்டார். இதன் விளைவுகள் என்ன?

அல்போன்ஸ், தூத்துக்குடி


“உள்ளீட்டு வரியை ஒருமுறை மட்டும்தான் எடுக்கவேண்டும். இப்படி எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரி, உங்களுடைய வெளியீட்டு வரி பொறுப்பாக (Liability) மாறிவிடும். இரண்டாவது முறையாக தவறாக எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரி, செலுத்தவேண்டிய வெளியீட்டு வரியாக மாறிவிடும். இது, ஜி.எஸ்.டி-யின் போர்ட்டலில் கண்டுபிடிக்கப்பட்டாலும், உங்களின் வெளியீட்டு வரி கிரெடிட்டாக மாறிவிடும்.” 

நாங்கள் இன்ஜினீயரிங் பொருள்களுக்கான உபகரணங்களை ஜாப் ஒர்க் முறையில் செய்து வருகிறோம். எங்களின் தொழில் ஏற்படும் வேஸ்ட் மற்றும் ஸ்கிராப்புக்கு வரி எவ்வாறு செலுத்த வேண்டும்?

முத்துக்குமாரசாமி, மதுரை


“உங்களுடைய ஜாப் ஒர்க் தொழிலில் பெறப்படும் வேஸ்ட் மற்றும் ஸ்கிராப்புக்கு வரியைச் செலுத்தி, உங்களுடைய தொழில் ஸ்தலத்திலிருந்து எடுத்துச்செல்லலாம். நீங்கள் பதிவு செய்யப்படாத வரிதாரராக இருந்தால், உங்களுக்கு சப்ளை செய்திருப்பவர் அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும்.” 

எங்கள் நிறுவனம் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதால், நாங்கள் உற்பத்தியாளராகப் பதிவு செய்துள்ளோம். தற்போது அதே நிறுவனத்தின் பெயரில் வர்த்தகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இதற்காக தனியாகப் பதிவு செய்ய வேண்டுமா?

பரந்தாமன், பாண்டிச்சேரி


“உங்களுடைய அதே பான் எண்ணில் அந்த வியாபாரம் செய்யப்படுமானால் தனியாக அதற்கு ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்யவேண்டிய தில்லை. உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டையும் தனித்தனியாகச் செய்யலாம்.”

நான் ஜி. எஸ். டி ஆர் 3B படிவம் தாக்கல் செய்யும்போது தொகையைத் தவறுதலாகத் தாக்கல் செய்துவிட்டேன். இப்போது என்னால் அதனை மாற்றம் செய்ய முடியவில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஹனிபா, ஆம்பூர்


“நீங்கள் ஜி.எஸ்.டி ஆர் 1 மற்றும் 2-வில் தேவை யான மாற்றங்களைச் செய்து தாக்கல் செய்தால் போதுமானது.”  

பழைய நகைகளை விற்று வீடு வாங்கினால் ஜி.எஸ்.டி உண்டா?