நடப்பு
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

கேன்சர் நோயாளிகளுக்கென சிறப்பு பாலிசி

ஸ்
டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனம், கேன்சர் நோயாளிகளுக்கென மருத்துவக் காப்பீட்டு பாலிசி ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்ட்’ எனப்படும் இந்த பாலிசியில் ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என இரு வகைகளில் கவரேஜ் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிலிருந்து 65 வயது வரை உள்ள, கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட (ஸ்டேஜ் 1, 2) நோயாளிகள் இந்த மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியம் ரூ.12,250 முதல் ரூ.35,100 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன்சர் நோயாளிகளுக்கென அறிமுகப்படுத்தப்படும் முதல் இன்ஷூரன்ஸ் திட்டம் இதுவாகும்! 

BIZ பாக்ஸ்

பாஸ்போர்ட் இண்டெக்ஸ்: 75-வது இடத்தில் இந்தியா!

றக்குறைய எல்லா இண்டெக்ஸ்களிலும் நம் இந்திய நாடு கடைசி இடங்களைப் பிடிப்பது இப்போது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. உலக அளவில் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது நுழைய முடியும் என்பதை வைத்து ஒரு இண்டெக்ஸ் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த இண்டெக்ஸ் ரிப்போர்ட்படி, இந்தியாவுக்கு 75-வது இடம் கிடைத்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 27 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 27 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு உடனடி விசா வழங்கப்படும். உலக அளவில் இது மிகவும் குறைவாகும்!

BIZ பாக்ஸ்

அஞ்சலக வங்கிக்குப் புதிய அதிகாரி

ந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் சி.இ.ஓ-வாக வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்த சுரேஷ் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுக்க 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகக் கிளைகள் உள்ளன.இந்தக் கிளைகள் மூலம் வங்கிச் சேவையை, கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறது மத்திய அரசாங்கம். இந்த வேலையைத் தீவிரமாகச் செய்வதற்காக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவரை அரசுக்குச் சொந்தமான அஞ்சலக வங்கிக்கு நியமித்துள்ளது!

விமானத் துறை பூங்கா!

ஸ்ரீபெ
ரும்புதூர் தாலுகா வல்லம்-வடக்கல் பகுதியில் விமானத் துறைக்குத் தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் பூங்கா மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீடாகும் என எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.1000 கோடி. இதன் மூலம் 35,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

முடிவுக்கு வருகிறதா ஆர்.காம்?

ஆர்
.காம் நிறுவனம் தனது வயர்லெஸ் பிசினஸின் பெரும்பகுதியை, அடுத்த சில வாரங்களில் நிறுத்தப் போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக, வரும் செப்டம்பர் மாத முடிவில் இது நடக்கும் என அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் அதன் ஊழியர்களிடையே பேசும்போது சொல்லியிருக்கிறார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாகத் தரும் சேவையே ஆர்.காமின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவினால் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழக்க வேண்டியிருக்குமாம்! ஆர்.காம் நிறுவனத்தை ஏர்செல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆர்.காம் நிறுவனம் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிப்பது குறிப்பிடத்தக்கது!

இறக்கத்தில் மிளகு ஏற்றுமதி!

ந்தியாவில் உற்பத்தியாகும் கறுப்பு மிளகு உலகப் புகழ் பெற்றது. முன்பு கறுப்பு மிளகை எக்கச்சக்கமாக ஏற்றுமதி செய்துவந்தது நமது நாடு. தற்போது, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நமது மிளகு ஏற்றுமதி குறைந்துள்ளது. 2016-17-ல் 17,500 டன் மிளகை ஏற்றுமதி செய்தது நம் நாடு. இந்த ஆண்டு வெறும் 15,000  டன் மட்டுமே மிளகு ஏற்றுமதியாகும் நிலை உருவாகியிருக்கிறது. வியட்நாம் மிளகு, ஒரு டன் 4,000 டாலருக்கும், பிரேசில் மிளகு 3,500 டாலருக்கும் விற்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் உற்பத்தியாகும் கறுப்பு மிளகின் விலை ஒரு டன்னுக்கு 7,000 டாலர் அளவுக்கு விற்கப்படுவதே ஏற்றுமதி குறைவதற்குக் காரணம். 

BIZ பாக்ஸ்

க்ளீன் சிக்கா!

க மகிழ்ச்சியில் இருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த விஷால் சிக்கா. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆட்டோமேஷன் நிறுவனமான பனயா நிறுவனத்தை 2015-ல் 200 மில்லியன் டாலர் தந்து வாங்கினார் விஷால் சிக்கா. இந்த நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விஷால் மீது புகார் எழுப்பினார் இன்ஃபோசிஸ் ஸ்தாபகர் நாராயண மூர்த்தி. இது குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியையும் அமைத்தனர். இந்த கமிட்டியின் அறிக்கையில் ‘பனயா நிறுவனத்தை வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை’ எனச் சொல்லப்பட்டுள்ளது. 

சவுதி அரேபியா 500 பில்லியன் டாலர் செலவில் புதிய மெகா நகரத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. செங்கடலையொட்டி அமைக்கப்படும் இந்த நகரத்துக்கு நியோம் என்று பெயர்.

பொது சேமநல நிதி என்று சொல்லப்படும் ஜெனரல் பிராவிடண்ட் ஃபண்டில் உள்ள பணத்துக்குத் தரப்படும் வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜி.பி.எஃப் திட்டத்துக்குத் தற்போது 7.8% வட்டி அளிக்கப்பட்டு வருகிறது!