நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

அக்ரி கமாடிட்டியிலும் நன்றாகப் பணம் பண்ணலாம் என்று நமக்கு வழிகாட்டி உள்ளது மென்தாயில்.   சென்ற வாரம் ஒரு மகத்தான வாரமாகவே மாறியது.  அதிலும் அதனுடைய நகர்வு என்பது மிகவும் வலிமையாகக் காணப்பட்டது. 
மென்தாயில் பற்றி சென்ற வாரம் சொன்னது. “நாணயம் விகடன் காமாடிட்டி பகுதியைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இப்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கும்.   அதாவது, மென்தாயில் 1270 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்படுகிறது.  கீழே 1228 என்ற எல்லை வலிமையான ஆதரவாக மாறியுள்ளது. இந்த எல்லைகளை வைத்தே இனி வியாபாரம் செய்ய வேண்டும்.”

நாணயம் விகடன் வாசகர் களுக்கும் மென்தாயில் மகத்தான வாய்ப்பைக் காட்டியுள்ளது.   அதனால்தான் சென்ற வாரம், நான் அதையும் குறிப்பிட்டி ருந்தேன். தொடர்ந்து படித்து வரும்போது, நமக்கு எங்கு ஆதரவு எடுக்கிறது, எங்கு தடுக்கப்படுகிறது என்பது தொடர்ந்து புலப்படும்.  அதனால் வியாபார ரீதியான முடிவுகளைச் சரியாக எடுக்க முடியும்.

சென்ற வாரம் திங்களன்று 1252-ல் துவங்கி, படிப்படியாக இறங்கத் தொடங்கியது.  முடிவில் 1232.60 என்ற எல்லைவரை இறங்கி, முடியும்போது 1236ல் முடிந்தது. அடுத்து செவ்வாயன்று ஒரு கேப் அப்பில் தொடங்கி னாலும், பின்பு படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. அந்த இறக்கம் எங்கே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றால், நாம் சென்ற வாரம் சொன்ன ஆதரவு நிலை 1228-ல் ஆகும். 

கடந்த செவ்வாயன்று இறங்கி 1227.10 என்ற புள்ளியைத் தொட்டுவிட்டு, மீண்டும் வலிமையாக ஏற ஆரம்பித்தது.  அதன்பின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தினம் தினம் ஏற்றம்தான்.  அதுவும், புதனன்று ஏறி உச்சமாக 1261-யைத் தொட்டது.   

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

இனி அடுத்த தடைநிலை எதுவாக இருக்கும்? நாம் சென்ற வாரம் சொன்ன 1270 ஆகும்.  வியாழனன்று 1261லிருந்து மேல்நோக்கி நகர ஆரம்பித்த மென்தாயில், அதிகபட்சமாக 1276 என்ற எல்லையைத் தொட்டு, பின் 1273.90 என்ற புள்ளியில் முடிந்தது.  ஆக நாம் கொடுத்த தடைநிலையை வெற்றிகரமாக உடைத்துவிட்டது.  அதன்பின் வெள்ளி அன்று 1270 என்ற நாம் கொடுத்த தடைநிலையைச் சற்றே தொட்டுவிட்டு ராக்கெட்டைப் போல் வேகமாக ஏறியது.  அதிகபட்சமாக 1307-யைத்  தொட்டுவிட்டு, பின் 1301ல் முடிவடைந்துள்ளது. நாம் அவ்வப்போது பாடம் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும். அதாவது, தடைநிலையை உடைத்து ஏறினால் பலமான ஏற்றம் வரலாம் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்.
  
சரி, இனி என்ன நடக்கலாம்? 2013 ஏப்ரல் மாதத்திலிருந்து பார்க்கும்போது, கடந்த நான்கு வருடங்களின் புதிய உச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. அதேபோல், இது மாத வரைபடத்திலும் வலிமையான பிரேக் அவுட்டாகியுள்ளது. இனி, முன்பு தடை நிலையாக நாம் சொன்ன 1270 மிக முக்கிய ஆதரவாக மாற வாய்ப்புள்ளது. அடுத்து மேலே உடனடித் தடைநிலை 1335 மற்றும் 1385 ஆகும். அதையும் தாண்டினால் பெரிய ஏற்றங்கள் வரலாம்.  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

காட்டன் பற்றி சென்ற வாரம் சொன்னது: “காட்டன் நல்ல இறக்கத்துக்குப்பிறகு, 18550 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 18850 என்ற எல்லையைத்  தடைநிலையாக கொண்டுள்ளது. தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். 

எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் ஒரு வலுவான நகர்வு உண்டு. உஷாராக இருங்கள்; பலனை அனுபவியுங்கள்.   ஆனால், தொடர்ந்து கொடுத்து வரும் வியாபார விதிமுறைகளில் ஒன்றான, கண்ணில் பார்த்த லாபம் கணக்கில் வரவேண்டும் என்பதை மறக்கக்கூடாது.”

 சென்ற வாரம் காட்டனில் வியாபாரம் செய்த நாணயம் விகடன் வாசகர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். அதாவது, முக்கியத் தடைநிலையான 18850  பலமாக உடைக்கப்பட்டு ஏறி, 19230 என்ற எல்லையைத் தொட்டு மிகப் பெரிய லாபத்தை காட்டன் தந்தது. இந்த லாபம், சென்ற வாரம் திங்கள்கிழமையின் நகர்வில் மட்டுமே கிடைத்தது. அதன்பின் செவ்வாயன்று சற்றே இறங்க ஆரம்பித்து, 18900 என்ற எல்லை நோக்கி இறங்கியது. அதன்பின் குறுகிய எல்லைக்குள் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இனி என்ன செய்யலாம்? தற்போதும் நல்ல ஏற்றத்துக்குப் பிறகு ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது. இதனால் முக்கிய ஆதரவாக 18900 என்ற எல்லை உள்ளது. மேலே 19100 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.  இதில் எந்த எல்லையை உடைக்கிறதோ, அந்தத் திசையில் தொடர்ந்து வியாபாரம் செய்யலாம்.