நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி

தங்கம் ஒரு டவுன் டிரென்ட் சேனலில் இருப்பதாகத் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.  டவுன் டிரென்ட் சேனல் என்பது பொதுவான திசை இறங்குமுகமாகவே இருக்கும். இதை டவுன் டிரென்ட் லைன் மூலம் உறுதி செய்வோம்.   ஆனால், சேனல் என்று சொல்லும்போது கீழே இறங்கிக்கொண்டு இருக்கும் விலையானது, மேலே செல்லும்போது எங்கே தடுக்கப்படலாம் என்ற ஊகத்தையும் நமக்குக் கொடுக்கிறது.  அந்த வகையில், இதுவரை மேலே 29920 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.  அதன்பின் கீழே திரும்பி இறங்க ஆரம்பித்துள்ளது என்றும் சொல்லியிருந்தேன்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது, ‘தங்கத்தின் டவுன் டிரென்ட் சேனலின் மேல் எல்லை 29920-ஆகவும், கீழ் எல்லை 29000-ஆகவும் உள்ளது. இந்த நிலையில், மையப்புள்ளியானது 29500-ல் உள்ளது.  இந்தப் புள்ளி இப்போது முக்கிய ஆதரவாக உள்ளது. விலை, இதை உடைத்துக் கீழே இறங்கினால், பெரிய இறக்கம் வரலாம்.’

நாணயம் விகடன் வாசகர்கள் நாம் எழுதுவதைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்துச் செயல்படுவதன் மூலம் லாபம் பார்த்து வருகிறார்கள். கடந்த வாரமும் அத்தகைய வாய்ப்பைத் தங்கம் வழங்கியது.   சென்ற வாரம் திங்களன்றே நாம் கொடுத்திருந்த முக்கிய ஆதரவான 29500-யை உடைத்து 29364 வரை இறங்கியது. அடுத்தடுத்த நாள்களில் குறிப்பாக, புதன் மற்றும் வியாழனன்று கணிசமான அளவுக்கு இறங்கி 29211 என்ற எல்லையையும் தொட்டது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்இனி என்ன நடக்கலாம்? தங்கம் முக்கிய ஆதரவான 29500-யை உடைத்து இறங்கினால் வலிமையாக இறங்கும் என்றோம். அப்படியே இறங்கி 29169 வரை இறங்கியது.  அதாவது, தற்போது டவுன் டிரென்ட் சேனலின் கீழ்ப் பகுதியை நோக்கி வந்துவிட்டது.  இந்தப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாக மாறலாம்.  கீழே 29000-லிருந்து 29200 என்ற பகுதி முக்கியமான ஒரு ஆதரவாக இருந்து வருகிறது. இங்கிருந்து ஒரு புல்பேக் ரேலி வரலாம். அப்போது முன்பு ஆதரவாக இருந்த 29500 என்ற எல்லை தடைநிலை யாக மாறலாம். 

கீழே 29000 என்ற எல்லை உடைக்கப்பட்டால், புதிய இறக்கம் வலுவானதாக இருக்கலாம்.  அது அடுத்த ஆதரவு எல்லைகளான 28850 மற்றும் 29640-ஐ நோக்கி நகர்த்தலாம்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி மினி 

வெள்ளியும் தொடர்ந்து ஒரு டவுன் டிரென்ட் சேனலில்தான் உள்ளது.  இந்த சென்ற வாரம் சேனலின் மேல் எல்லையை இடித்துவிட்டு கீழ்நோக்கித் திரும்பி இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம்.

சென்ற வாரம் சொன்னது... ‘ 39500 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது.   இந்த ஆதரவு எல்லை உடைக்கப் பட்டு இறங்கினால் வலிமையான இறக்கம் வரலாம். அது அடுத்த ஆதரவான 39000-ஐ நோக்கி நகரலாம்.’   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் அதுவும் நடந்தேறியது. வெள்ளி, கடந்த வாரம் திங்களன்று கொஞ்சம் தாக்குப் பிடித்து நின்றது.  ஆனால், செவ்வாயன்று, இறக்கம் ஆரம்பித்தது.  அடுத்து புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று தொடர்ந்து இறங்கியது.  நாம் கொடுத்திருந்த 39000 என்ற புள்ளியையும் தொட்டது.   
 
இனி என்ன நடக்கலாம்? கடந்த வாரம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவந்த வெள்ளி, தற்போது இறக்கத்தின் முக்கியமான பகுதிக்கு வந்துள்ளது. அதாவது, 39000 என்ற புள்ளியை உடைத்துள்ள நிலையில் 38750 என்ற எல்லை முக்கிய ஆதரவாக இருக்கலாம்.  இங்கிருந்து மேலே ஏற ஆரம்பிக்கலாம். இந்த ஆதரவு எல்லை உடைக்கப்பட்டால், வெள்ளி பெரிய அளவில் இறங்கலாம்.  அப்போது அடுத்த முக்கிய இலக்கு 37350. அதன்பின் 1000 புள்ளிகள் வரை இறங்கி 36350-ஐகூடத்  தொடலாம்.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது... ‘கச்சா எண்ணெய், பிக் பிக்சர் என்றால், கச்சா எண்ணெய் கீழே 3230 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 3430 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது. இருந்தாலும், உடனடி ஆதரவாகச் சொல்வதாக இருந்தால், 3290 என்பது ஒரு பிவட் புள்ளியாகச் செயல்படலாம். இதை உடைத்தால் இறக்கம் வரலாம். உடைக்காதவரை மெள்ள மெள்ள மேலே ஏறிச் செல்லலாம்.’

சென்ற வாரம் நாம் தந்த  தடை நிலையான 3430 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல் சிரமப்பட்டது.  கீழே 3360 என்ற எல்லை ஆதரவு எடுத்து செவ்வாய், புதன், வியாழன் என்று மூன்று நாள்களும் 3430 என்ற எல்லையைத் தாண்ட சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், வெள்ளியன்று காளைகள் வெற்றி கரமாக அந்த 3430 என்ற தடையை உடைத்து, விலையை ஏற்ற ஆரம்பித்துள்ளன.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? காளைகள் 3430 என்ற எல்லையை வெற்றிகரமாக உடைத்து ஏறினாலும், மேலே 3500 என்ற எல்லை மிக மிக வலிமையான தடைநிலை ஆகும்.  இதை மட்டும் அவை உடைத்துவிட்டால், அதன்பின் பெரிய ஏற்றம்தான். இலக்குகளாக 3540, 3585, 3625 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். தற்போதைய ஆதரவு 3360 ஆகும். இந்த ஆதரவு உடைக்கப் பட்டால், ஏற்றம் முடிவுக்கு வந்து புதிய இறக்கத்துக்குத் தயாராகலாம்.