நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

‘‘அடுத்த 12 மாதங்களில் ரூ.10 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். டி.எஸ்.பி பிளாக்ராக் நிறுவனம் நடத்தும் டி.எஸ்.பி பிளாக்ராக் டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட், டி.எஸ்.பி பிளாக்ராக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், டி.எஸ்.பி பிளாக்ராக் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ஆகிய மூன்று ஃபண்டுகளை இதற்கென நான் தேர்வு செய்திருக்கிறேன். இந்த ஃபண்டுகள் என் முதலீட்டு நோக்கத்தை நிறைவேற்றுமா?   

ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

என் முதலீட்டு நோக்கம் என்னவெனில், நீண்ட காலத்தில் (20 ஆண்டுகள்) என் குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதாகும். இந்தப் பணம் வேறு எதற்கும் எனக்குத் தேவையில்லை.

இது தவிர, மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்தை டி.எஸ்.பி பிளாக்ராக் மைக்ரோ ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஒரே நிறுவனம் நடத்தும் பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரிதானா, வெவ்வேறு நிறுவனங்கள் நடத்தும் ஃபண்டுகளில் நான் முதலீடு செய்ய வேண்டுமா?

@ விஸ்வா


‘‘உங்களுடைய முதல் கேள்வி, ஒரே ஃபண்ட் நிறுவனம் நடத்தும் திட்டங்களில் மொத்த முதலீட்டையும் வைத்துக் கொள்ளலாமா என்பதுதான். கிட்டத்தட்ட அனைத்து ஃபண்ட் நிறுவனங்களும் ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்துப் பங்கு, கடன் மற்றும் தங்கம் சார்ந்த முதலீட்டு வாய்ப்புக்களை வழங்குகின்றன. ஆகவே, ஒரே ஃபண்ட் நிறுவனத்தில் வைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை.

ஆனால், ஃபண்ட் நிறுவனங்களுக்கும் சில ரிஸ்க்குகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம் எடுக்கும் முடிவுகள் தவறாகச் செல்வது, சி.ஐ.ஓ (CIO – Chief Investment Officer) அல்லது நல்ல ஃபண்ட் மேனேஜர்கள் விலகிச் செல்வது, ஃபண்ட் நிறுவனங்கள் விற்கப்படுவது போன்றவை ஆகும். இதுபோன்ற ரிஸ்க்குகளால் சில ஆண்டுகளுக்கு  ஃபண்டுகளின் செயல்பாடு சற்று சுமாராக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, முதலீடுகளை இரண்டு அல்லது மூன்று ஃபண்ட் நிறுவனங் களில் வைத்துக்கொள்வது சிறந்தது.

ஒரே இடத்தில் உங்கள் போர்ட் ஃபோலியோ அனைத்தையும் பார்ப்பது இன்றைய தினத்தில் பெரிய விஷய மல்ல. பெரும்பாலான வெல்த் மேனேஜ் மென்ட் நிறுவனங்கள் இந்த வசதியை இன்று முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கின்றன.          

ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

இப்போது உங்களின் முதலீட்டைப் பற்றிப் பார்ப்போம். உங்களுடைய முதலீட்டுக் காலம் 20 ஆண்டுகள் என்பதால், நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கலாம். ஆகவே, ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டைச் செய்துகொள்ளுங்கள். 

ரிஸ்க் அதிகமாக எடுக்க வேண்டாம் என்று நினைத்தால், மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள். அதிக ரிஸ்க் மற்றும் மீடியம் ரிஸ்க் என இரு ஆப்ஷன்களை உங்களுக்குத் தருகிறேன். அதிக ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாரெனில், ஸ்மால் அண்ட் மிட் கேப் வகையைச் சார்ந்த ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்டில் எஸ்.டி.பி முறையில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்யுங்கள்.  நீங்கள் மீடியம் ரிஸ்க்கினை மட்டுமே எடுக்க விரும்பினால், மல்டிகேப் வகையைச் சார்ந்த டி.எஸ்.பி.பி.ஆர்  ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில்         எஸ்.டி.பி முறையில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்யுங்கள்.

 நீங்கள் அக்ரெஸிவ் முதலீட்டாளராக இருந்தால், டி.எஸ்.பி மைக்ரோகேப் ஃபண்டுக்குப் பதிலாக, உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டை எல் அண்ட் டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் அல்லது ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். மாடரேட் முதலீட்டாளராக இருந்தால், அதே ஃபண்டில் தொடருங்கள்.’’

‘‘நான் எஸ்.பி.ஐ ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் தலா ரூ.1,000 முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டைத் தொடரலாமா? அடுத்த 25, 30 வருடங்களுக்கு இந்த முதலீட்டைத் தொடர வேண்டும் என்று ஆசை. மேலும், 1,000 ரூபாயை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். நான் ரிஸ்க் எடுக்கவும் தயார். நல்ல ஃபண்டுகளைச் சொல்ல முடியுமா?”

 @ சோமு


‘‘பிர்லா ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் தொடர்ந்து நன்றாகச் செயலாற்றி வருகிறது. ஆகவே, அந்த எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து வாருங்கள். ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. அதைவிட ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் இன்னும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் குறைவு. ஆகவே, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் செல்லும் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டில் மேலும் ரூ.1,000 சேர்த்து, மாதத்துக்கு ரூ.2,000 முதலீடு செய்துகொள்ளுங்கள்.’’

‘‘எனக்கு இப்போது 56 வயது. 2020-ல் நான் ஓய்வு பெறுவேன். தற்போது என்னிடம் ரூ.10 லட்சம் உள்ளது. நான் ஓய்வு பெறுகிற வரை எனக்கு இந்தப் பணம் வேண்டாம். இந்தப் பணத்தை முதலீடு செய்வதற்கேற்ற இரண்டு, மூன்று ஃபண்டுகளைச் சொல்லுங்கள்.’’

@ எஸ்.குப்புசாமி


‘‘இன்னும் சில வருடங்களில் நீங்கள் ஓய்வு பெற உள்ளீர்கள். மேலும், அந்தப் பணம் உங்களுக்கு அப்போது தேவைப்படும் என்று கூறியுள்ளீர்கள். ஆகவே, அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்களைத் தந்துள்ளேன். உங்களின் ரிஸ்க் எடுக்கும்   திறனுக்கேற்ப இந்த இரு ஆப்ஷனில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

ஆப்ஷன் 1 மிக மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட தாகும்; ஆப்ஷன் 2 குறைவான ரிஸ்க் கொண்டதாகும்.

ஆப்ஷன் 2-ல் ஃப்ராங்க்ளின் இந்தியா லோ டுரேஷன் ஃபண்டில் ஒருமுறை முதலீடாக ரூ.10 லட்சத்தை முதலீடு செய்யுங்கள். இது பங்குச் சந்தையில் எந்த முதலீடும் செய்வதில்லை.

ஆப்ஷன் 2-ல் ஹெச்.டி. எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் எஸ்.டி.பி முறையில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்யுங்கள். இது பங்குச் சந்தையில் 30% - 35% வரை முதலீடு செய்யப்படுகிறது.’’

‘‘நான் என்னுடைய மகளின் திருமணத்துக்காக ரூ.4 லட்சம் வைத்துள்ளேன். இன்னும் ஓரிரு வருடம் கழித்து எடுக்கும்படியாக முதலீடு செய்ய ஒரு மியூச்சுவல் ஃபண்டைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.”

மு.சுப்பையா, தூத்துக்குடி


‘‘நீங்கள் வைத்திருக்கும் ரூ.4 லட்சத்தை ஃப்ராங்ளின் இந்தியா லோ டுரேஷன் ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளுங்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு தேவைப்படும் போது முழுதாகவோ அல்லது பகுதியாகவோ பணத்தை எந்தவித வெளியேற்றுக் கட்டணமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.’’   

ஃபண்ட் கார்னர் - ஒரே நிறுவனத்தின் பல்வேறு ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?