நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம் இன்னும் டவுன்டிரெண்ட் சேனலில்தான் இருந்துவருகிறது. தற்போது இந்த சேனலின் அடிப்பகுதியில் உள்ளது. இந்த டிரெண்ட் சேனல் தொடர்ந்து இறங்கிவருவதால், சேனலின் மேல் எல்லையும் படிப்படியாக இறங்கிவரும். அந்த வகையில், சேனலின் மேலே உள்ள தடுப்பு எல்லை தற்போது 29675-ஆக உள்ளது. முன்பு இது 29950-ஆக இருந்தது. டவுன்டிரெண்ட் சேனலையொட்டி விலை தொடர்ந்து இறங்கும்போது, இது எங்கு ஓர் ஆதரவைப் பெறுகிறது என்பதை உன்னிப்பாகப் பார்க்கவேண்டும். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் நாம் சொன்னது... “தங்கம் முக்கிய ஆதரவான 29500-யை உடைத்து இறங்கினால் வலிமையாக இறங்கும். அப்படியே இறங்கி 29169 வரைகூட இறங்கியது. அதாவது, தற்போது டவுன்டிரெண்ட் சேனலின் கீழ்ப் பகுதியை நோக்கி வந்துவிட்டது. இந்தப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாக மாறலாம்.  கீழே 29000-லிருந்து 29200 என்ற பகுதி முக்கியமான தொரு ஆதரவாக இருந்து வருகிறது.   இங்கிருந்து ஒரு புல்பேக் ரேலி வரலாம். அப்போது முன்பு ஆதரவாக இருந்த 29500 என்ற எல்லை தடைநிலையாக மாறலாம்.”

சென்ற வாரம் நாம் சொன்னதுபோலவே தங்கம் விலை இருந்தது. அதாவது, சென்றவாரம் திங்களன்று 29200 என்ற எல்லையை ஆதரவாக எடுக்க முயன்று, மேலே 29434 வரை ஏறியது.  அடுத்து செவ்வாயன்று அந்த ஏற்றத்தைத் தக்கவைக்க முடியாமல், இறங்கி முதல்கட்ட ஆதரவான 29200-யை உடைத்து இறங்கியது.  புதனன்று 29117 என்ற எல்லைவரை இறங்கி, சற்றே ஏறுவதற்கு முயற்சி செய்தது. மீண்டும் மேலே 29400-ல் தடுக்கப்பட்டுள்ளது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? நாம் தங்கத்தின் நகர்வைத் தெளிவாகக் கவனித்து வருகிறோம்.  தற்போது 29100 என்பது வலிமையான ஆதரவாகவும், மேலே 29500 என்பது வலிமையான தடைநிலையாகவும் மாறியுள்ளது. 29500 என்ற எல்லை ஆதரவு எல்லையை உடைத்து இறங்கினால், அதுவே தடைநிலையாக மாறலாம் என்று ஏற்கெனவே நாம் கூறியிருந்தோம். அதுதான் தற்போது நிகழ்ந்துவருகிறது. தற்போது 29225 என்பது மையப்புள்ளியாகவும், இதற்கு மேலே நகர்ந்தால் 150 - 200 புள்ளிகளும், கீழே நகர்ந்தால் 150 - 200 புள்ளிகளும் நகரும்வண்ணம் உள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

வெள்ளியானது தங்கத்தைபோல், டவுன்டிரெண்டில் இருந்தாலும்,  தங்கத்தை முந்திக்கொண்டு,  மேலே நகரவாயப்புள்ளது. சென்ற வாரம் சொன்னது...

‘‘கடந்த வாரம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தவந்த வெள்ளி, தற்போது இறக்கத்தின் முக்கியமான பகுதிக்கு வந்துள்ளது.  அதாவது, 39000 என்ற புள்ளியை உடைத்துள்ள நிலையில் 38750 என்ற எல்லை, முக்கிய ஆதரவாக இருக்கலாம். இங்கிருந்து மேல ஏற ஆரம்பிக்கலாம்.’’

வெள்ளியானது நாம் சென்ற வாரம் குறிப்பிட்டதுபோலவே, 39000 என்ற ஆதரவை உடைத்து, கீழே 38662 வரை இறங்கியது. பின்பு அங்கிருந்து வலிமையாக மேலே ஏற ஆரம்பித்தது.  இந்த ஏற்றம் 39936 வரை நீடித்தது. அதன்பின் ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது. 

இனி என்ன நடக்கலாம்? தற்போது ஏற ஆரம்பித்திருக்கும் வெள்ளியானது, 39000 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்க ஆரம்பித்துள்ளது. அதே நேரம், கீழே 38600 வரை இறங்கி ஏறியிருப்பதால், வாங்குவதற்கான நஷ்டத்தடையாக 38600-ஐ வைக்கலாம். அது உடைக்காதவரை இறங்கங்களை வாங்குவதற்கு வாய்ப்பாகப் பார்க்கலாம். மேலே 40000 என்பது மிக மிக வலிமையான தடைநிலை ஆகும். இதை உடைத்தால் அடுத்து 40650 வரை முதல்கட்டமாக நகரலாம். அதைத் தாண்டினால் மிகப் பெரிய ஏற்றங்கள் வரலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்

சென்ற வாரம் சொன்னது... ‘‘காளைகள் 3430 என்ற எல்லையை வெற்றிகரமாக உடைத்து ஏறினாலும், மேலே 3500 என்ற எல்லை மிக மிக வலிமையான தடை நிலை ஆகும்.  இதை மட்டும் அவர்கள் உடைத்துவிட்டால், அதன்பின் பெரிய ஏற்றம்தான். இலக்குகளாக 3540, 3585, 3625 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம்.’’

சென்ற வாரம், 3500 என்ற தடை நிலையை உடைத்து வலிமையாக ஏறியது, நாம் கொடுத்த எல்லைகளான 3540 தொட்டது. பின்பு ஏறி 3570 என்ற புள்ளியைத் தொட்டபின், கொஞ்சம் இறங்கியது. இந்த இறக்கம் 3483 வரை தொடர்ந்தது.  அதன்பின் மீண்டும் ஏறும் முயற்சியில் உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் ஆதரவு எல்லை படிப்படியாக உயர்ந்து வருகிறது.  தற்போது 3480 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்கிவருகிறது. 

இந்த எல்லைக்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வாங்கி விற்கலாம்.  மேலே 3580 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. அது உடைக்கப்பட்டால், வலிமையான ஏற்றங்கள் வரலாம்.

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க: http://bit.ly/2iqtlTC