நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

ஆப்பிளையும், ஃபேஸ்புக்கையும் வரவேற்கும் சீனா!

சீ
னாவின் அதிபராக மீண்டும் தேர்வாகி யிருக்கிறார் ஜி ஜின்பிங். வெளிநாடுகளைச் சேர்ந்த பெரும் நிறுவனங்கள் சீனாவுக்கு வர வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர் ஜி. இவர் மீண்டும் சீனாவின் அதிபராகத் தேர்வானதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டீம் குக் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிபர் மார்க் சக்கர்பர்க் ஆகியோர் அவரைச் சந்தித்து, சீனச் சந்தையில் தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் சுமார் 70 சதவிகித நிறுவனங்கள் கடந்த ஆண்டு,  சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைத் தங்கள் நிறுவனங்களில் தொடங்கியிருப்பதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

BIZ பாக்ஸ்

குறையும் இ.பி.எஃப் கணக்குகளின் எண்ணிக்கை! 

இ.
பி.எஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பொது சேமநலக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்குமுன் 4.64 கோடி இ.பி.எஃப் கணக்குகள் இருந்தன. ஆனால், அரசின் இந்த உத்தரவுக்குப்பின் இ.பி.எஃப் கணக்குகளின் எண்ணிக்கை 4.40 கோடியாகக் குறைந்துள்ளன. இதில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 7.68 சதவிகிதக் கணக்குகளும் தமிழகத்தின் வேலூரில் 5.19 சதவிகிதக் கணக்குகளும்  குறைந்துள்ளன. வேலையிழப்பு இதற்கொரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

BIZ பாக்ஸ்

நாடுகளை மிஞ்சும் மெகா நகரங்கள்!

லக அளவில் இருக்கும் சில மெகா நகரங்களின் பொருளாதாரம், சில நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின்   ஜி.டி.பி 1.6 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது, தென் கொரியாவின்  பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்பானது. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 1.5 ட்ரில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கிறது. இது, கனடாவின் ஜி.டி.பி-க்கு ஒப்பானது. லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், பாரீஸ், ஷாங்காய், மாஸ்கோ, ஒசாகா மற்றும் பெய்ஜிங் நகரங்களும் சில சிறிய நாடுகளின் ஜி.டி.பி-யைவிட அதிக வளர்ச்சி கண்டுவருகின்றன.

BIZ பாக்ஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ!

ன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக அசோக் வெமூரி தேர்வு செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்குமுன்பு இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்த விஷால் சிக்கா திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, இடைக்கால சி.இ.ஓ-வாக நந்தன் நிலகேனி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்று நடத்தும் பணியைச் செய்யத் தொடங்கினார். எனினும், புதிய சி.இ.ஓ-வைத் தேடும் பணி தொடர்ந்தது. புதிய சி.இ.ஓ-வைத் தேடும் கமிட்டி, கடந்த வாரத்தில் அசோக் வெமூரியை அணுகி, தனது எண்ணத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறது. அசோக் வெமூரி தற்போது ஜெராக்ஸ் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார். இதற்குமுன் அவர் ஐகேட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். 

BIZ பாக்ஸ்

பெயில் வேண்டுமா? ரூ.750 கோடி கட்டு

ப்பாவி மக்களுக்குச் சொந்தமான ரூ.45,000 கோடியை வசூலித்து ஏமாற்றியதற்காக சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் ஏற்கெனவே சிறையில் இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவுக்கு அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வீடு வாங்குவதற்காக பலரும் தந்த ரூ.2,000 கோடியைத் திரும்பத் தரமுடியாத நிலையில், சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தனக்கு பெயில் தரவேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்க, ரூ.750 கோடியை டிசம்பர் மாதம் முடிவதற்குள் டெபாசிட்டாகக் கட்டிவிட்டு, பெயிலுக்கு விண்ணப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வேறு வழியில்லாமல் திஹார் சிறையில் இருக்கிறார் சஞ்சய் சந்திரா!

வருகிறது பாரத் 22 இ.டி.எஃப்!

ருகிற 15-ம் தேதி முதல் பாரத் 22 இ.டி.எஃப்-ல் முதலீடு செய்யத் தொடங்கலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான 22 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதுதான் பாரத் 22 இ.டி.எஃப் முதலீடு.  ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., எஸ்.பி.ஐ., பி.பி.சி.எல்., கோல் இந்தியா, நால்கோ எனப் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் இந்த  இ.டி.எஃப் மூலம் முதலீடு செய்யப்படும்.

BIZ பாக்ஸ்

ன்லைன் கரன்சியான பிட்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு 6,900 டாலர்களை எட்டியது. இந்த ஓர் ஆண்டில் மட்டும் பிட்காயினின் விலை சுமார் 550 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. சீனா உள்பட பல்வேறு நாடுகள் பிட்காயின் வர்த்தகத்துக்கு அனுமதி தரவில்லை என்றாலும், இதன் விலை உயர்ந்துகொண்டே போவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.