நடப்பு
Published:Updated:

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?

வி.கோபாலகிருஷ்ணன், Askgopal.com

பி.பி.எஃப் என வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியமும், என்.எஸ்.சி என வழங்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரமும் நம் நாட்டு பெரும்பாலான முதலீட்டாளர் களிடையே எப்போதுமே ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்துவருகிறது.  

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, நீண்ட கால முதலீடுகளான இவற்றின் மூலம் முதலீட்டாளர்களுக்கு எப்போதுமே நியாயமான வட்டி வருமானம்  கிடைத்துவந்தது. இந்த முதலீடுகளுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. கூடுதலாக, இந்த முதலீடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உத்தரவாதம் இருப்பதால், பல முதலீட்டாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் தவறாது முதலீட்டை பெருக்கிக்கொண்டே வருகிறார்கள்.

மேலும், பி.பி.எஃப் மூலம் வரும் வட்டி வருமானத்துக்கு முழு வரிவிலக்கு கிடைக்கும்.  

என்.எஸ்.சி-யில் கிடைக்கும் வட்டியை மறு முதலீடு செய்வது மூலம் 80சி-யின் கீழ் வரிச் சலுகை பெறலாம். மேலே கூறப்பட்ட காரணங் களுக்காக முதலீட்டாளர்கள், அதிலும் குறிப்பாக நிறுவனங்களில் பணிபுரிவோர், வரிச் சலுகை பெற விரும்புவோர் ஆர்வத்துடன் அவற்றில்  முதலீடு செய்து பயன்பெற்று வந்தனர்.

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?



கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிவரும் குறைந்த வட்டி விகிதச் சூழல் காரணமாக இந்த முதலீடுகளில் வட்டி விகிதமானது குறைந்து வருகிறது. இப்போதைய சூழலில் அரசு நிர்ணயித் துள்ள 7.8% வட்டி விகிதமானது  கவர்ச்சிகரமான ஒன்றுதான். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசாங்கம், நிதி அமைச்சகத்தின் வாயிலாக இந்த முதலீடுகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட மாற்றங்களானது  உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, என்.ஆர்.ஐ என வழங்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு இந்த அறிவிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவிலிருக்கும் வரை, வரிச் சலுகை பெறுவதற்காகவோ அல்லது முதலீட்டுக் காரணங் களுக்காகவோ பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தொழில் மற்றும் வேலை காரணமாக வெளிநாடு சென்று விட்டால் அதாவது, என்.ஆர்.ஐ என்ற நிலையை அடைந்துவிட்டால், அந்த நாள் முதல் அவர்களது பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளும் தானாகவே முடிவுக்கு வந்து காலாவதியாகிவிடும் என்பதுதான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.

அந்த மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், அவர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற நிலை வந்தால் மூடப்பட்டுவிடுவது மட்டுமல்லாது, மேலும் அவர்கள் முழுமையாக அந்த கணக்குகளை மூடி பணத்தை வெளியே எடுக்கும் வரையில் அவர்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கின் வட்டி விகித அடிப்படையில் அதாவது, 4% என்ற அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும்.   

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்... என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த அறிவிப்புக்கு முன்புவரை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் புதிதாக பி.பி.எஃப், என்.எஸ்.சி கணக்குகளைத் துவங்க முடியாது என்ற நிலை இருந்தாலும், ஏற்கெனவே இந்தியாவில் இருக்கும்போது தொடங்கி செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளின் முதிர்வுக் காலம் வரை எல்லோருக்கும் இருக்கும் வட்டி விகித அடிப்படையில் அவர்களுக்கும் கிடைத்து வந்தது. இனிமேல், வெளிநாடு வாழ் அந்தஸ்து கிடைத்துவிட்டால், அந்த கணக்குகள் காலாவதி யாகிவிட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை மூடும் வரையில் அஞ்சலக வட்டி விகிதமே என்பது வழங்கப்படும் என்பது புதிய மாற்றம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளின் அபார வளர்ச்சி காரணமாக இந்தியர் பலர், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. பலர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று தங்கிவிட்டாலும், பலர் நமது நாட்டுக்குத்  திரும்பி வரும் போக்கும் இருக்கிறது. பின்னாளில் திரும்பி வருவோர் மீண்டும் புதிய பி.பி.எஃப் மற்றும்     என்.எஸ்.சி கணக்குகள் துவக்கவேண்டுமா அல்லது காலாவதியாகிவிட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற விவரத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், அவர்களின் குடியுரிமை குறித்த நிலை வருமானவரிச் சட்டம் (1961) கீழும் அல்லது ஃபெமா (1999) சட்டத்தின் அடிப்படையிலா என்பதையும் வரும் நாள்களில் அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் இந்தியாவில் இருப்பதோ அல்லது இல்லாததோ குடியுரிமையை நிலைநாட்டும் என்றாலும், ஃபெமா சட்டத்தின் கீழும் இது குறித்த நிலைப்பாடு அவசியம் தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில், என்.ஆர்.ஐ முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்?

இந்த அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி முதலீடுகளின் வட்டி வருமானம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்கு இதுநாள் வரை வந்த வருமானத்தில் இழப்பு அதிகமாகக் காணப்படும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங் களால் 4% வட்டி என்பது பணவீக்கத்தைக்கூட எட்டிப் பிடிக்க முடியாது என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அதிக லாபம் தரும் வேறு முதலீட்டு வழிகளில் முதலீடு செய்வதுதான் சரியானதாக இருக்கும்.

மேலும், அந்தந்த நாடுகளிலேயே இருக்கப் போகிறார்களா அல்லது இந்தியா திரும்பப் போகிறார்களா என்பதை தீர்மானித்தால் அவர்கள் முதலீட்டு முடிவு எடுக்க சுலபமாக இருக்கும்!