நடப்பு
Published:Updated:

பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?

பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?

எஸ்.ஸ்ரீதரன், Wealthladder.co.in

பொதுவாக, முதலீடு என்று வரும்போது முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளை நாடுவார்கள்.  

பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?

எந்த முதலீடாக இருந்தாலும், அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணமே முதலீட்டாளர்களிடம் இருக்கும்.  முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என நினைப்பவர்கள் அதற்கான உத்திகளின்படி தங்கள் முதலீட்டை அமைத்துக்கொள்வது அவசியம். 

நம் முதலீட்டை ஏதாவது ஒன்றில் மட்டும் போட்டு வைக்காமல், பங்குச் சந்தை, பங்குச் சந்தை  சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் எனப் பிரித்து அஸெட் அலோகேஷன் முறையின்படி முதலீடு செய்வதன் மூலம் நஷ்டத்தை ஓரளவுக்குக் குறைக்க முடியும். 5, 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு அஸெட் அலோகேஷன் அடிப்படையில் முதலீடு செய்யும்போது,  மற்ற முறைகளைவிட அதிக அளவு வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

அஸெட் அலோகேஷன் முறையில் எந்தெந்த முதலீட்டில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைப் பார்ப்போம். 

பங்குச் சந்தை 

‘Equity’ என்பது ஆங்கிலத்தில் ஆறெழுத்து கொண்ட சிறு வார்த்தைதான். ஆனால், இதில் முதலீடு செய்வதற்கு ரிஸ்க் எடுக்கும் தைரியம் ஒருவருக்கு நிறையவே இருக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருமானம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருப்பதால், இதை ஒரு நீண்ட கால முதலீடாகவே கருதவேண்டும்.

ஒருவரின் முதலீட்டுக் காலம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே பங்குச் சந்தையில் நேரடி யாகவோ அல்லது பங்குச் சந்தை சார்ந்த  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலமாகவோ முதலீடு செய்யலாம்.

கடன் சந்தை

கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் எனில்,  பிரதானமாக அரசுப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள், கருவூல ரசீதுகள் போன்றவற்றில் முதலீடு செய்து, அதன்மூலம் வரும் வட்டி வருமானத்தை முதலீட்டாளர்கள் பெறுவதாகும்.   இவற்றில் பலரும் நேரடியாகவும் முதலீடு செய்ய முடியாது. எனவே, கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் முதலீடு செய்யலாம். 

பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?


 
பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, கடன் சந்தை சார்ந்த  ஃபண்டுகளில் ரிஸ்க் சிறிது குறைவு என்றாலும், குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்குப் பணம் திரும்பத் தேவைப்படுவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இதில் முதலீடு செய்யும் முடிவை எடுக்கலாம்.

தங்கம்

நம்மவர்கள் எப்போதுமே தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். தங்கத்தில் முதலீடு செய்தால், அதன்மூலம் வரும் வருமானம், பணவீக்கத்தைச் சரிசெய்யும் நிலையில் இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்பு கடந்த காலம் வரை சரியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கம் தந்த வருமானம்கூட சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், தங்கம் என ஏதாவது ஒன்றில் நம்மிடம் இருக்கும் பணத்தை அத்தனையும் முதலீடு செய்வதைவிட அஸெட் அலோகேஷன் மூலம் முதலீடு செய்யலாம். எப்படி?

இதன்படி, முதலீடு செய்வதற்குமுன், அந்த முதலீட்டின் கால அவகாசம் என்ன, எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியும், எந்த இலக்கை அடைய முதலீடு செய்யப் போகிறோம் என்பதை  அறிந்து அதற்கேற்ற ஏற்ற முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.    

பங்குச் சந்தை Vs அஸெட் அலோகேஷன் - அதிக வருமானத்துக்கு எது பெஸ்ட்?

உதாரணமாக, குறைந்தபட்சம் மூன்று வருட காலத்துக்கு  முதலீடு செய்யும்போது, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத்  தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. ஏனெனில், பங்குச் சந்தை  சார்ந்த முதலீடு, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக் கேற்ப முதலீட்டின் வருமானம் இருக்கும். மேலும், சந்தை இறக்கத்தில் இருந்தால், முதலீடு செய்த பணத்தின் மதிப்பு குறையவும் நேரிடலாம். அதேபோல், 7 மற்றும் 10 வருட காலத்துக்கு அஸெட் அலோகேஷன் அடிப்படையில் முதலீடு செய்யும்போது மிகப் பெரிய பலனை அடைய முடியும்.

 கடந்த 2000-ம் ஆண்டில் மணி மற்றும் வெங்கட் என்ற இரண்டு முதலீட்டாளர்கள்        ரூ. 100 முதலீடு செய்ததாக வைத்துக்கொள்வோம். இதில் மணி என்பவர் 2000-ம் ஆண்டில்  பங்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டில்          ரூ.100 முதலீடு செய்துவிட்டு, அந்த முதலீட்டை அப்படியே 17 ஆண்டுகள் விட்டுவிட்டு, 2017-ம் ஆண்டில் அந்த முதலீட்டைத் திரும்ப எடுத்தால், அதன் மதிப்புத் தோராயமாக ரூ.615-ஆக இருக்கும். இந்த முதலீடு சந்தையின் சுழற்சிக்கேற்ப மேல் மற்றும் கீழ்நோக்கி செல்வதை எதிர்ப்பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். 
 
2007-ம் ஆண்டு வரை பங்குச் சந்தை நன்றாக இருந்ததால், முதலீடு செய்த 100 ரூபாய் ரூ.381-ஆக மாறியது. இதுவே 2008-ம் ஆண்டில் பங்குச் சந்தை சரிவைக் கண்டபோது இது ரூ.180-ஆகக்  குறைந்தது.

ஆனால், வெங்கட் அஸெட் அலோகேஷன் அடிப்படையில் 100 ரூபாயைப் பிரித்து முதலீடு செய்தார். அவர் 60 ரூபாயைப் பங்குச் சந்தை  சார்ந்த முதலீடாகவும், 30 ரூபாயைக் கடன் சார்ந்த முதலீடாகவும், 10 ரூபாயைத் தங்கம்  சார்ந்த முதலீடாகவும் செய்தார்.

இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை, இந்த முதலீட்டை மறுபரிசீலனை செய்து, ஒவ்வொரு வருடமும் அட்டவணையில் சொல்லி யிருக்கிற அஸெட் அலோகேஷன்படி முதலீடு செய்தார்.

இப்படி செய்ததால், வெங்கட்டின் முதலீடு இன்றைய தேதியில் ரூ.754-ஆக உள்ளது. ரூ.100 முதலீடு தந்த வருமானத்தில் இவ்வளவு வித்தியாசம் எனில், ரூ.1 லட்சம் செய்திருந்தால், எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.

எனவே, அஸெட் அலோகேஷன் முறையைப் பின்பற்றினால் நீண்ட கால அடிப்படையில் நஷ்டத்தைத் தவிர்ப்பதுடன், அதிக லாபமும் கிடைக்கும். எனவே, அஸெட் அலோகேஷன் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளும் முயற்சியை இன்றே தொடங்குங்கள்.