நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

மென்தா ஆயில்

மென்தா ஆயில் நகர்வு முந்தைய வாரம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியிருந்தேன்.  அதுவும்,  பல படிகள் மேலே போய் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வாரம் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் வரும்.  அதற்கெல்லாம் இன்னும் பல படிகள் மேலே போய் மென்தா ஆயில், வரலாற்றுச் சிறப்புமிக்க லாபத்தைச் சென்ற வாரம் கொடுத்தது. அதேசமயம், எல்லா ஏற்றத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசியாக யார் வாங்குகிறார்களோ அவர்கள் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது என்பதையும் காட்டியுள்ளது. சென்ற வாரம் டிரேடர்களுக்குப் பல படிப்பினைகளை மென்தா ஆயில் விலை நகர்வு கொடுத்துள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில் பற்றிச் சென்ற வாரம் சொன்னது. “மென்தா ஆயிலின் இந்த நகர்வு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகர்வு. மிகப்பெரிய ஏற்றத்துக்குப் பிறகு ஒரு ரிடிரேஸ்மென்ட்  வரலாம்.   அதற்கு முன்பு கடைசியாக ஒரு முறை காளைகள் விலையை 1570 வரைகூட எடுத்துச் செல்லலாம்.”

மென்தா ஆயில் என்பது, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஏறக்குறைய பழக்கமான, உபயோகத்தில் இருக்கக்கூடிய ஒரு மூலிகை வகை. அதாவது புதினா. இது   மருத்துவம், அழகு தரும் பொருள்கள், ஆரோக்கியம் தரும் பொருள்கள் தயாரிப்பில் பிரதானமாக உபயோகப்படுத்தப்படுகிறது. உலக அளவில் மென்தா ஆயில் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், சுமார் 48,000 டன்.  இதில் சுமார் 80% அளவுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, 30,000 டன் முதல் 40,000 டன் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.  அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. உலகச் சந்தையில் அவ்வப்போது மென்தா ஆயிலுக்கு அதிகத் தேவை ஏற்பட்டு விலை மாறிக்கொண்டே இருக்கும். இருந்தாலும், இப்போது ஏறிய ஏற்றம் என்பது மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரியது.

சென்ற வாரம் எழுதியபோது, ‘மென்தா ஆயில் விலை 1570 வரை சென்று பின் இறங்கலாம்’ என்று எழுதி இருந்தேன். ஆனால், விலை 1570-ஐ தொட்டதோடு, அதையும் தாண்டி ஏற ஆரம்பித்தது. வியாழனன்று 1716-ல் முடிந்தது.அடுத்து வெள்ளிக்கிழமைதான் ஆன்டி க்ளைமாக்ஸ்.  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

எம்.சி.எக்ஸ் எக்ஸ்சேஞ்சில் ஒரு லாட் என்பது 360 கிலோவைக் கொண்டது. அதற்கு சுமார் 12% மார்ஜின் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது சுமார் ரூ.71,000. வெள்ளியன்று மார்ஜின் தொகையை 20 சதவிகிதமாகக் கூட்டியது. ஏற்கெனவே,  வாங்கி வைத்திருப்பவர்கள் கூடுதலாக சுமார் ரூ.60,000 கட்டவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானார்கள்.  எனவே, வெள்ளியன்று ஒரு கேப் அப்பில், அதாவது, 1767 என்ற விலையில் தொடங்கிய மென்தா ஆயில், ஒரு நிமிடத்திற்குள்ளாகவே 1647 என்ற விலைக்குச் சரிந்து, வாங்குவதற்கு ஆளில்லாமல் லோயர் சர்கியூட் ஆனது.

இனி என்ன செய்யலாம்..? இப்படி லோயர் சர்கியூட் ஆன பிறகு, அது மேலும் மேலும் இறங்க வாய்ப்புள்ளது. எந்த அளவுக்கு அதிக ஸ்பெக்குலேட்டிவ் வாங்குதல் உள்ளதோ, அது  தீரும்வரை இறக்கம் தொடரலாம். கீழே 1570 என்பது அடுத்தகட்ட முக்கிய ஆதரவு நிலையாகும்.  இங்கு வந்து மீளலாம் அல்லது  அதையும் உடைத்து இறங்கினால் 1530, 1470 என்ற எல்லைகளை நோக்கி இறங்கலாம்.

காட்டன்

காட்டன் பற்றிச் சென்ற வாரம் சொன்னது... “தற்போது 18180 என்ற கேப் டவுன் புள்ளி முக்கிய ஆதரவாகச் செயல்படுகிறது. இங்கிருந்து படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது.  இப்போது 18470 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.”  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டனைப் பொறுத்தமட்டில், சென்ற வாரம் மிகவும் அடக்கி வாசிக்கப்பட்ட வாரமாகவே பார்க்கிறோம். ஒரு பெரிய இறக்கத்திற்குப் பிறகு, காளைகள் காட்டன் விலையை ஏற்றுவதற்கு ஒரு முயற்சியைத் திங்களன்று எடுத்தன. மேலே 18420 வரை எடுத்துச் சென்றன. ஆனால், அதற்குமேல் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, கீழே இறங்கி 18200 வரை இறங்கி, 18250-ல் முடிந்தது. அடுத்த நான்கு நாள்களும் நாம் ஏற்கெனவே கொடுத்திருந்த ஆதரவு நிலையான 18180-ஐ தாண்டி கீழே போகவில்லை, மேலே 18470-ஐ தாண்டி மேலே ஏறவுமில்லை. இது ஒரு பக்கவாட்டு நகர்வு வாரமாக முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? இன்னமும் நாம் ஏற்கெனவே கொடுத்த ஆதரவு 18180-ம், தடைநிலையான 18470-ம் நீடிக்கிறது. இந்த இரண்டு எல்லைகளில், மேல் எல்லை உடைக்கப்பட்டால் காளைகள் கை ஓங்கும்; கீழ் எல்லை உடைக்கப்பட்டால் கரடிகள் கை ஓங்கும்.