நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி

தங்கத்தின் விலை நகர்வை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முந்தைய வாரம் சொல்லும்போதுகூட, “அது இன்னும் டவுன்டிரெண்ட் சேனலில்தான் இருந்து வருகிறது. டவுன்டிரெண்ட் சேனலையொட்டி விலை தொடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கும்போது, இது எங்கு ஒரு ஆதரவை எடுத்துத் திரும்பும் என்பதைத்தான் இப்போது உன்னிப்பாகப் பார்க்கவேண்டும்” என்று கூறியிருந்தேன். அது ஆதரவை எடுத்ததுடன் வலிமையாகவும் மேலே ஏறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது... “தங்கத்திற்கு தற்போது 29100 என்பது வலிமையான ஆதரவாகவும், மேலே 29500 என்பது வலிமையான தடைநிலையாகவும் மாறியுள்ளது. ஏற்கெனவே, நாம் 29500 என்ற ஆதரவு எல்லையை உடைத்து இறங்கினால், அதுவே தடைநிலையாக மாறலாம் என்று கூறியிருந்தோம். அதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறது. தற்போது 29225 என்பது மையப்புள்ளியாக இருப்பதுடன்,  இதற்கு மேலே நகர்ந்தால் 150 - 200 புள்ளிகள் வரை நகரலாம்.”

தங்கம் சென்ற வாரமும் இதைப்போலவே நகர்ந்தது. அதாவது, டவுன்டிரெண்டின் மேல் எல்லை மற்றும் கீழ் எல்லையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நாம் கொடுத்திருந்த மையப்புள்ளியான 29225 என்ற புள்ளியை உடைத்து வலிமையாக மேலே ஏற ஆரம்பித்தது.  சென்ற வாரம் திங்களன்று 29255 என்ற புள்ளியை உடைத்து ஏற ஆரம்பித்த பிறகு, சந்தை காளைகள் கைக்கு மாறியது. தொடர்ந்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று ஏறுமுகமாக மாறியது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்இனி என்ன நடக்கலாம்..? நாம் கொடுத்த டவுன்டிரெண்டில் மேல் எல்லையான 29500-ஐ உடைத்துத் தங்கம் வலுவாக ஏற ஆரம்பித்துள்ளது.  அதாவது, சந்தை காளைக்கு அடங்க ஆரம்பிக்கிறது. தற்போது 29800 என்பது உடனடித் தடைநிலை ஆகும். அதையும் தாண்டும்போது அடுத்த 29950, 30180 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம்.  கீழே 29500 என்ற முந்தைய தடைநிலை ஆதரவாக மாறலாம். ஆகவே, 29500 உடைக்கப் பட்டால், ஏற்றம் முடிவுக்கு வந்து இறக்கம் தொடரலாம்.

வெள்ளி மினி

வெள்ளியும், தங்கமும் பொதுவாக ஒரே மாதிரியாக நகரும் என்பது ஒரு அனுபவக் கணிப்பு.   அவை தற்போது மெள்ளமெள்ள மாறி வருவதும், நடைமுறை இயல்பு.  தங்கம், சென்ற வாரம் டவுன் டிரெண்டில் சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது, வெள்ளி அதிலிருந்து சீக்கிரம் மீள வாய்ப்புண்டு என்று கூறியிருந்தேன். அது என்னவாயிற்று என்று பார்க்கலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது... “தற்போது ஏற ஆரம்பித்திருக்கும் வெள்ளி, 39000 என்ற எல்லையை ஆதரவாகக்கொண்டு இயங்க ஆரம்பித்துள்ளது.   அதேநேரம் கீழே 38600 வரை இறங்கி ஏறி இருப்பதால், வாங்குவதற்கான ஸ்டாப்லாஸாக 38600 ஐ வைக்கலாம். அது உடைக்காதவரை இறக்கங்களை வாங்குவதற்கு வாய்ப்பாகப் பார்க்கலாம்.  மேலே 40000 என்பது மிக மிக வலிமையான தடைநிலை ஆகும்.”

வெள்ளி சென்றவாரம், திங்களன்று 39000 என்ற ஆதரவில் இருந்து ஏற ஆரம்பித்தது.  இந்த ஏற்றம் அன்றே வலிமையாக மாறி, 39950 வரைச் சென்றது.  அதாவது, நாம் ஏற்கெனவே கொடுத்த  தடைநிலையான 40000-க்கு அருகில் தடுக்கப்பட்டது.  அதன்பின் அடுத்தடுத்த நான்கு நாள்களும், மிகவும் குறுகிய எல்லை களுக்குள்ளாகவே சுழன்று வந்தது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்..? நாம் கொடுத்துள்ள தடைநிலையான 40000 என்பது இன்னும் வலிமையான தடைநிலையாகவே உள்ளது.   இருந்தாலும், தற்போது ஏற்றத்துக்கான முயற்சி நடைபெறுவதால், தடையை 40150 என்ற எல்லைக்கு வைக்கிறோம். கீழே 39450 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. இனி  வாங்குவதற்கு 39450-க்கு கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வியாபாரம் செய்யலாம். மேலே 40150-ஐ தாண்டினால் வலிமையான ஏற்றம் வரலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது... “கச்சா எண்ணெய் ஆதரவு எல்லை படிப்படியாக உயர்ந்து வருகிறது.  தற்போது 3480 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த எல்லைக்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்து வாங்கி விற்கலாம்.  மேலே 3580 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. அது உடைக்கப்பட்டால், வலிமையான ஏற்றங்கள் வரலாம்.”

கச்சா எண்ணெய் சென்ற வார நகர்வு, இதைவிட எப்படி எளிமையாக வழிகாட்டமுடியும் என்பதுபோல், நாம் கொடுத்த 3580 என்ற தடைநிலையை உடைத்து ஏறியது. திங்களன்று 3580-ஐ உடைத்து ஏறி 3704 வரை சென்றது.  இதுவும் மகத்தான லாபம் ஈட்டும் நாளாகவும்,  வாரமாகவும் அமைந்தது.  அதுவும் ஒரே நாளில் சுமார் 125 புள்ளிகள் ஏற்றத்தைத் தந்தது.   அடுத்த நான்கு நாள்களும் மேலே 3765 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வந்தது.

இனி என்ன நடக்கலாம்..? கச்சா எண்ணெய்  தற்போது கீழே 3660 என்ற ஆதரவு நிலையையும், மேலே 3780 என்ற தடைநிலையையும் கொண்டு நகர்ந்து வருகிறது. மேலே 3780 என்பது மிக வலிமையான தடைநிலையாகும். அது உடைக்கப் பட்டால் மிகப்பெரிய ஏற்றம் வரலாம்.