
முதலீடு... புரோக்கரேஜ் கட்டணத்தைக் கவனியுங்கள்!
எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும்போது, அதற்கென்று குறிப்பிட்ட அளவுக்குச் செலவு இருக்கும். அந்தச் செலவானது மிக அதிகமாக இருந்தால், அது லாபத்தின் பெரும்பகுதியைக் காலி செய்துவிடும்.

உதாரணத்துக்கு, மனை ஒன்றை முதலீட்டு நோக்கில் வாங்குகிறோம் எனில், அதற்குத் தரகர் கட்டணம் சுமார் 2% கொடுக்க வேண்டிவரும். அடுத்து, பத்திரப் பதிவு செலவு 11% (முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 4%) ஆகும். ஆகமொத்தம் 13% நிலத்தை வாங்கும்போதே செலவாகிவிடும். இந்த 13 சதவிகிதத்தைவிட விலை அதிகரிக்கும்போது மட்டுமே லாபம் கிடைக்கும்.

அடுத்து அதிக செலவு வைக்கும் திட்டம் என்றால் யூலிப் பாலிசிகளைக் குறிப்பிடலாம். இதில், ஏஜென்ட் கமிஷன், பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணம், பாலிசி நிர்வாகக் கட்டணம், ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம் எனப் பட்டியல் நீளுகிறது. ஏஜென்ட் கமிஷன் தவிர்த்து இதரக் கட்டணங்களை 2.25 சதவிகிதத்துக்குள் பராமரிக்க வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ உத்தரவு.
பங்குச் சந்தை முதலீட்டில் வாங்கும்போதும் விற்கும்போதும் புரோக்கரேஜ் கட்டணம் செலுத்த வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது அதன் அதிகபட்ச செலவு சுமார் 3%. முதலீடு செய்யும்போது, இந்தச் செலவையும் கணக்கில்கொள்வது அவசியம்.
- சேனா சரவணன்