நடப்பு
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

மீப காலமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, பெருமளவில் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது குறித்து ஏராளமான சந்தேகங்களை வாசகர்கள் கேட்டபடி இருந்தனர். மியூச்சுவல் ஃபண்ட் பயிற்சி வகுப்பை சென்னையில் ஏற்கெனவே நாணயம் விகடன் நடத்தியிருந்தும்கூட, மீண்டும் நடத்தும்படி வாசகர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை தாம்பரத்தில் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்கிற தலைப்பில் நாணயம் விகடன் சார்பில் கட்டணப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், இந்தப் பயிற்சி வகுப்பைச் சிறப்பாக நடத்தினார். 

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் பேர் முதலீடு செய்யும் ஈக்விட்டி ஃபண்டின் வகைகள் பற்றி விரிவாக விளக்கினார். நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்ய எந்த மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நம்மவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன, அவற்றைக் களைவது எப்படி என்பதை விளக்கினார். புதியவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்டுகளைப் பட்டியலிட்டார்.
வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், தேவைப்படும் கால அளவின் அடிப்படையில்  போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது என்பதை உதாரணத்துடன் சொல்லிக் கொடுத்தார்.

கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டோம் எனப் பாராட்டிச் சென்றனர்.

சேனா சரவணன்

படம்: வீ.நாகமணி