தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு!

உருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
உருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு!

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ன்வெர்ட்டர் காலத் திலும் கரன்ட் கட் ஆகும்போது உடனே உதவிக்கு வருபவை மெழுகுவத்திகள். மின்சார மில்லாத வேளைகளில் ஒளியேற்றும் இவை, மற்ற நேரங்களில் சூழலை ரம்மியமாக்கவும் பயன் படுகின்றன. வாசனை சேர்த்த அரோமா கேண்டில்கள் இருப்பிடத்தை அழகாக்குவ துடன்,  மனதையும் இதமாக்கக் கூடியவை. ஜெல் மெழுகில் செய்யப்படுகிற வகைகள் அலங் காரத்துக்குப் பொருத்தமானவை. இப்படி எல்லா வகையான மெழுகுவத்திகளையும் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த லட்சுமி வீரமணி.

‘’ரயில்வேயில் வேலைபார்த்து ரிட்டயரான பிறகு பொழுதுபோக்கா கத்துக்கிட்டுச் செய்ய ஆரம்பிச்ச விஷயம் இது. தரமற்ற மெழுகுவத்திகள் உருகி வழிஞ்சு, தரையைப் பாழாக்கிடும். எரிகிற ஜுவாலை ஏற்படுத்தற புகை, கருமைப் படலத்தை ஏற்படுத்தும். அந்தப் பிரச்னைகள் இல்லாம எரியும்போதே உருகி வழியாம, ஆவியாகிற மாதிரியும் கருமை படியாதபடியும் சாதாரண மெழுகுவத்திகள் தயாரிக்கிறேன். இந்த வகை மெழுகுவத்திகளை உபயோகிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், அலங்கார மெழுகுவத்திகள் செய்யறதுல அதிக ஆர்வம் காட்டறேன்...’’ - அறிமுகம் சொல்பவர், அடுத்தவர்களுக்கும் பிசினஸ் ஐடியா சொல்கிறார்...

உருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு!

எத்தனை வகைகள்?

சாதாரண மெழுகுவத்திகள், வாசனை சேர்த்த அரோமா மெழுகுவத்திகள், தண்ணீரில் மிதக்கும் மெழுகுவத்திகள், அலங்காரத்துக்கு வைக்கிற ஜெல் கேண்டில்கள்.

ஜெல் கேண்டில்களின் சிறப்பே அவற்றின் கலர் காம்பினேஷன்தான். மல்ட்டி கலர்களில்கூடச் செய்யலாம்.

என்ன சிறப்பு?

எரிகிறபோது மெழுகுவத்தி வழிந்து கீழே வராமல் ஆவியாகிவிடும். மேலே கரும்புகை படியாது. அரோமா கேண்டில்களை ஏற்றி வைக்கிறபோது வீடு அழகாவதுடன், வீடெங்கிலும் நறுமணம் கமழும். இந்த அரோமா கேண்டில் களைத்தான் பியூட்டி பார்லர்களில் அரோமா தெரபி செய்வதற்கும் பயன்படுத்து கிறார்கள். ரோஜா, மல்லிகை, லேவண்டர் என இதில் விருப்பமான வாசனை சேர்த்துச் செய்ய முடியும்.

தண்ணீரில் மிதக்கும் மெழுகுவத்திகள் வீட்டையே ஜொலிக்கச் செய்யும். பண்டிகைகளின் போது எண்ணெய் ஊற்றி எரியவைக்கிற அகல் விளக்குகளுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தலாம். ஜெல் கேண்டில்கள் முழுக்க முழுக்க அலங்காரத்துக்கானவை மட்டுமே. டிரான்ஸ்பரன்ட் கிளாஸ் பாட்டில் மற்றும் கன்டெய்னர்களில் செய்கிறபோது உள்ளே நிறைய அழகு வேலைப்பாடுகள் செய்ய முடியும்.

உருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு!

என்னென்ன தேவை?

ஃபேன்ஸி மோல்டுகள், வேக்ஸ் சிப்ஸ், கலர், சென்ட், திரி, ஜெல் கேண்டில்களுக்கான ஜெல் வேக்ஸ் மற்றும் கண்ணாடிக் குடுவைகள் எல்லாம் சேர்த்து 700 ரூபாய் முதலீடு போதுமானது. இந்தத் தொகையானது ஒரு கிலோ சாதா மெழுகுக்கும் ஒரு கிலோ ஜெல் மெழுகுக்கு மானது. 50 சதவிகித லாபம்.

எங்கே விற்பனை செய்யலாம்?

ஃபேன்ஸி ஸ்டோர்கள்,  அன்பளிப்புப் பொருள்கள் விற்பனை செய்கிற கடை களில் கொடுக்கலாம். சாதா மெழுகுவத்திகளை மளிகைக் கடைகளில் கொடுக்கலாம். அரோமா கேண்டில்களுக்கு பியூட்டி பார்லர்களில் ஆர்டர் எடுக்கலாம்.

கடன் உதவி?

வெறும் 100 ரூபாய் முதலீட்டில் சாதா அல்லது மோல்டட் கேண்டில்கள் தயாரிப்பதில் தொடங்கலாம். அதில் வருகிற லாபத்தை வைத்து அரோமா கேண்டில்கள் செய்யலாம். அப்படியே லாபத்தை வைத்தே அடுத்தடுத்த நிலை களுக்குப் போக முடியும். மகளிர் சுயஉதவிக் குழுக் களில் இருப்போருக்கு உள் கடன் பெற்று பிசினஸ் செய்ய வாய்ப்புகள் உண்டு.

பயிற்சி?

ஒரே நாளில் அனைத் தையும் கற்றுக் கொள்ளலாம். மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.