நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?

ஓவியம்: பாரதிராஜா

‘‘என் பெயர் மதன்குமார். எனக்குச் சொந்த ஊர் மதுரை. நான் தற்போது ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். நான் ரூ.21 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியும், என் சேமிப்பையும் சேர்த்து ரூ.25 லட்சம் மதிப்பில் மதுரை புறநகரில் வீடு ஒன்றைக் கட்டினேன். அதற்கான இ.எம்.ஐ ரூ.17 ஆயிரம் செலுத்தி வருகிறேன். தற்போது அந்த வீட்டை வாடகைக்கு விட்டதன் மூலம் மாதம் ரூ.4,000 கிடைக்கிறது. இன்னும் 13 வருடங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டும்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?

என் பெயரில் எடுத்த இன்ஷூரன்ஸ் அடுத்த 10 ஆண்டுகளிலும், என் மகளின் பெயரில் எடுத்த பாலிசி அடுத்த எட்டு ஆண்டுகளிலும், என் மகனின் பெயரில் எடுத்த பாலிசி அடுத்த 11 ஆண்டுகளிலும்  முதிர்வடையும். இந்த மூன்று பாலிசிகளின் முதிர்வுத் தொகை ரூ.12 லட்சம்.

கடந்த மூன்று வருடங்களாகச் செலுத்தப்படும் பி.எஃப் தொகை இதுவரை ரூ.3 லட்சம் வரை உள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்து வருகிறேன்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?



அலுவலகத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சத்துக்கு எடுத்துத் தந்துள்ளார்கள். நான் எவ்வளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் எனச் சொன்னால் உடனே எடுத்துவிட வாய்ப்பாக இருக்கும்.

என் 47-வது வயதில் என் மகளின் மேற்படிப்புக்காக ரூ.10 லட்சம் தேவை. என் 50-வது வயதில்,  என் மகனுடைய மேற்படிப்புக்கு ரூ.10 லட்சம் தேவை. அடுத்து என் 52-வது வயதில் என் மகளின் திருமணத்துக்கு ரூ.20 லட்சம் தேவை.

என் 58-வது வயதில், அதாவது அடுத்த 18 வருடங்களில் என் ஓய்வுக்காலத்துக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரும் வகையில் முதலீட்டுத் திட்டம் தேவை. அடுத்து என் 61-வது வயதில் என் மகனின் திருமணத்துக்கு ரூ.20 லட்சம் தேவை.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?

அடுத்ததாக, மதுரையில் உள்ள வீட்டின் மாடியில் டாப் அப் லோன் மூலம் ரூ.15 லட்சம் வாங்கி தனி போர்ஷன் கட்டி வாடகைக்கு விடவேண்டும். நான் மாதம் ரூ.10 ஆயிரம் சீட்டுக் கட்டி வருகிறேன். வரும் பிப்ரவரியில் ரூ.2.5 லட்சம் சீட்டுப் பணம் கிடைக்கும். அதனை வீடு கட்டப் பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்றவர், தன் வரவு செலவு விவரங்கள் உள்ளிட்ட நிதி தொடர்பான விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.

மொத்த வருமானம்    : 1,32,000 (சம்பளம் + வாடகை)

வீட்டு வாடகை  : ரூ.20,000,  வீட்டுக் கடன் இ.எம்.ஐ : ரூ.17,000, மியூச்சுவல் ஃபண்ட் : ரூ.20,000, சீட்டு : 10,000 (பிப்ரவரியில் சீட்டு முடியும்), இன்ஷூரன்ஸ் பிரீமியம் : ரூ.8,000, குடும்பச் செலவுகள் : ரூ.25,000, போக்கு வரத்து : ரூ.10,000, பள்ளிக் கட்டணம் : ரூ.10,000, மொத்தம் : ரூ.1,20,000, மீதம் : ரூ.12,000 (பிப்ரவரியில் சீட்டு முடிந்து விட்டபிறகும், மார்ச் 2018-ல் மனைவி குழந்தைகள் ஹைதராபாத் வந்தபிறகும்  மொத்தம் மிச்சமாகும் தொகை 34,000)     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“பொதுவாகவே, சுயதொழில் செய்பவர் களுக்கும், வியாபாரிகளுக்கும் சீட்டுத் திட்டம்  பயனுடையதாக இருக்கும். உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. 

நீங்கள் ஏற்கெனவே கடன் வாங்கி வீடு கட்டி யுள்ளீர்கள். வாடகை வருமானம் ரூ.4,000 என்கிற நிலையில், வாடகை வருமானம் வெறும் 2% மட்டுமே. இதற்காக 8.5% கடன் வாங்கி வீடு கட்டி யுள்ளீர்கள். மேற்கொண்டு ரூ.15 லட்சம் டாப் அப் கடன் வாங்கி மாடி போர்ஷன் கட்டினால் வாடகை வருமானம்  4.5% ஆகும். இது மோசமான வருமானமே. நீங்கள் உங்கள்  தேவைக்கு மட்டுமே வீடு கட்டினால் போதும்.

உங்களின் எல்லா இலக்குகளையும் நிறைவேற்றிக்கொள்ள உங்களுக்கு ரூ.45,600 இருந்தால் போதும். ஆனால், பி.எஃப் தொகை 14,000, ஏற்கெனவே செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.20 ஆயிரம், மார்ச் முதல் உங்களிடம் இருக்கக்கூடிய மீதமாகும் தொகை ரூ.34 ஆயிரம் என மொத்தம் 68 ஆயிரம் ரூபாய் முதலீட்டு வாய்ப்பாக இருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

நீங்கள் சீட்டு மூலம் கிடைக்கும் ரூ.2.5 லட்சத்தை அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் இதுவரை உள்ள ரூ.3 லட்சத்தை வருடாந்திரச் சுற்றுலா செல்லப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்து, உங்கள் மகள் மேற்படிப்புக்கு அன்றைய நிலையில் ரூ.17 லட்சம் தேவை. உங்கள் மகள் பெயரில் உள்ள இன்ஷூரன்ஸ் மூலம் ரூ.6.30 லட்சம் கிடைக்கும். மீதம் ரூ.10.70 லட்சம் சேர்க்க மாதம் ரூ.8,300 முதலீடு செய்யவும்.

உங்கள் மகனின் மேற்படிப்புக்கு அன்றைய காலகட்டத்தில் ரூ.19.70 லட்சம் தேவை. உங்கள் மகன் பெயரில் உள்ள இன்ஷூரன்ஸ் தொகை ரூ.6.30 லட்சம் போக, மீதம் ரூ13.40 லட்சம் சேர்க்க மாதம் ரூ.5,800 முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்து, உங்கள் மகளின் திருமணத்துக்கு ரூ.45 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.14,100 முதலீடு செய்யவும். உங்களின் மகன் திருமணத்துக்கு ரூ.83 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.7,300 முதலீடு செய்யவும்.

அடுத்து உங்கள் ஓய்வுக்காலத்துக்கு ஆண்டுக்கு ரூ.11.6 லட்சம் தேவை. அப்படியானால் நீங்கள் ரூ.2.55 கோடி கார்ப்பஸ் தொகையாகச் சேர்க்க வேண்டும்.

உங்களுக்குக் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் தொகையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மறுமுதலீடு செய்வதன் மூலம் ரூ.13.7 லட்சம் கிடைக்கும். மீதம் ரூ.2.45 கோடி சேர்க்க மாதம் ரூ.24,500 முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே பி.எஃப் மூலம் ரூ.14 ஆயிரம் முதலீடு செய்யப்பட்டு வருவதால், நீங்கள் இன்னும் ரூ.10,500 முதலீடு செய்தால் போதும். எல்லா முதலீடுகளுக்கும் போக இருக்கும் உபரிப் பணத்தைக் கூடுதலாக முதலீடு செய்தால் நீங்கள் 55 வயதிலேயே ஓய்வுபெற்றுவிடலாம்.

உங்களுக்கு ஹெல்த் பாலிசி ரூ.5 லட்சத்துக்கு உள்ளது. அதுவே போதும். டேர்ம் இன்ஷூரன்ஸ்  ரூ.1.5 கோடிக்கு எடுத்துக்கொள்ளவும்.

பரிந்துரை : ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் ரூ.8,200, கோட்டக் செலக்ட் ஃபோகஸ்டு ஃபண்ட் ரூ.11,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.8,100 ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.8,000, செல்வமகள் திட்டம் ரூ.7,900, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ரெகுலர் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.2,300”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878  
                      
 - கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 23 - சொந்தவீடு எப்போது தேவை?