
ட்விட்டர் சர்வே - ஓய்வுக்கால முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
பணத்தின் அருமை இளமைக் காலத்தில் யாருக்குமே தெரிவதில்லை. 45 வயதைத் தாண்டிய பிறகுதான், குழந்தையின் திருமணம், ஓய்வுக்காலம் என ஒவ்வொன்றாக நம்மை அச்சுறுத்த, முடிந்தவரைப் பணத்தைச் சேர்க்க ஆரம்பிக்கிறோம்.

ஓய்வுக்காலம் போன்ற நீண்ட காலத்துக்கான முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டு ஒரு சர்வே எடுத்தோம்.

ஏறக்குறைய 51 சதவிகித வாசகர்கள் 25 முதல் 30 வயதுக்குள் ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்பதைச் சொன்னதிலிருந்து, ஓய்வுக்கால முதலீடு பற்றி நாணயம் ட்விட்டர் வாசகர்களிடம் நல்ல விழிப்பு உணர்வு இருக்கிறது என்று தெரிகிறது.
35% பேர் 30 - 35 வயதுக்குள் எனவும், 14% பேர் 40 - 45 வயதுக்குள் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனவும் சொல்லியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

ஓய்வுக்கால முதலீட்டை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவர்கள் ஓய்வுக்கால முதலீட்டைச் சரியாகப் புரிந்துகொள்வதுடன், அதற்கான முதலீட்டை உடனே தொடங்குவது மிக அவசியம்.
-ஏ.ஆர்.கே