
தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில் தொடர்ந்து காளைகள் கட்டுப் பாட்டிலேயே இருந்துவந்தது. அதாவது, சென்ற அக்டோபர், நவம்பர் என இரண்டு மாதமும், வலிமையான ஏற்றத்தில் இருந்தது. சொல்லப்போனால், டிசம்பர் முதல் வாரத்தில்கூட ஒரு வலிமையான ஏற்றத்தைக் காட்டியது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஏற்றமாகும். இந்த ஏற்றமானது வலிமையாக இருந்த நிலையிலிருந்து, இப்போது ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

தற்போதைய உச்சம் என்பது 1991.90 ஆகும். அதாவது, முந்தைய வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று 1923 என்ற உச்சத்தைத் தொட்டது. பின் காளைகள் சற்றே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.
சென்ற இதழில் மென்தா ஆயில் நாம் சொன்ன 1990-யும் தொட்டது. அதன்பின் தொடர்ந்து ஏற முடியாமல் கீழே இறங்கவும் செய்தது. இறங்கியது மட்டுமல்லாமல், நாம் கொடுத்த ஆதரவு நிலையான 1790-யும் தொட்டது. கடந்த திங்களன்று ஒரு கேப்அப்புடன் துவங்கியது. அதாவது, 1960-ல் துவங்கி மேலே நகர்ந்து உச்சமாக 1991.90-யைத் தொட்டு இறங்கி முடிந்துள்ளது. எனவே, இந்த ஏற்றத்தின் உச்சம் முடிவுக்கு வந்தது. பின்பு செவ்வாய், புதன், வியாழன் என்று தினமும் ஒவ்வொரு படியாக இறங்க ஆரம்பித்தது. இப்படி இறங்கியபோது, வியாழனன்று குறைந்தபட்சப் புள்ளியாக 1791.30-யைத் தொட்டது. நாம் கொடுத்த இரண்டு முக்கிய எல்லைகளையும் துல்லியமாகத் தொட்டது. அதன்பின், 1791 என்ற ஆதரவை எடுத்து மீண்டும் மேலே எழத் துவங்கியுள்ளது. இதை டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், ஒரு வலிமையான ஏற்றத்துக்குப்பின், ஒரு ரிடிரேஸ்மென்ட் முடிந்து, மீண்டும் ஏற்றத்தைத் தொடர முயற்சி செய்கிறது.

இனி என்ன செய்யலாம்? நமக்கு ஏற்கெனவே பழக்கமான 1790 என்பதே இப்போதைய ஆதரவு எல்லை; இது உடைக்கப்பட்டு இறங்காதவரை, மேலே முந்தைய உச்சமான 1990-யைத் தொட முயற்சி செய்யலாம். அடுத்து அதையும் உடைத்து மிகப் பெரிய ஏற்றத்துக்கு முயற்சி செய்யலாம். உச்சத்தை உடைக்க முடியவில்லை என்றால் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறலாம். கீழே 1790 என்ற ஆதரவை உடைத்தால், ஏற்றம் முடிந்து இறங்குமுகமாக மாறலாம்.

காட்டன்
காட்டன் 2017 அக்டோபர் 31-ம் தேதி, 19060 என்ற எல்லையில் இருந்தது. அடுத்த நாள் நவம்பர் 1-ம் தேதியன்று பெரிய அளவில் இறங்கி, 18270 என்ற விலையில் வியாபாரமானது. இதைத்தான் கேப் டவுன் என்று முந்தைய இதழ்களில் குறிப்பிட்டிருந்தேன். அதன்பின் காட்டன் படிப்படியான ஏற்றத்தைக் கண்டது. முந்தைய வாரம் இந்த இடைவெளியை முழுவதுமாக மூடவும் முயற்சி செய்தது. முந்தைய வாரம் வெள்ளியன்று 18850 என்ற புள்ளியில் முடிந்தது. இதன் மூலம் ஏறக்குறைய, முன்பே ஏற்பட்ட கேப்பை மூடியது. அதன்பின் காளைகள் கட்டுக்குள் வலிமையாக மாறத் துவங்கின.
சென்ற வாரம் திங்களன்று 18910 என்ற எல்லையில் துவங்கிய காட்டன் அதிகபட்சமாக 19190-யைத் தொட்டது. பின்பு அதைத் தக்கவைக்க முடியாமல் இறங்கி 18970-ல் முடிந்தது. இது ஒரு ஷூட்டிங் ஸ்டார் உருவமைப்பு ஆகும். அதன்பின் செவ்வாய், புதன் என்று காட்டன் விலை இறங்க ஆரம்பித்தது. புதனன்று குறைந்தபட்சப் புள்ளியாக 18770-யைத் தொட்டது. வியாழனன்று பெரிய மாற்றம் இல்லாமல் முடிந்தாலும், வெள்ளி அன்று மீண்டும் பலமாக ஏற ஆரம்பித்துள்ளது. இந்த ஏற்றம் சந்தை மீண்டும் காளைகள் கைக்கு மாறிக்கொண்டு இருப்பதைக் காட்டுகிறது.
இனி என்ன செய்யலாம்? தற்போது பலமான ஏற்றத்தில் இருக்கும் காட்டன், மேலே முந்தைய உச்சமான 19190-ல் வலிமையாகத் தடுக்கப்படலாம். மேலே 19190 முதல் 19240 வரை வலிமையான தடைநிலை ஆகும். இந்தத் தடைநிலை உடைக்கப்பட்டால், அடுத்து மிகப் பெரிய விலை ஏற்றத்திற்குத் தயாராகலாம். கீழே 18770 என்பது மிக முக்கிய ஆதரவு. இதை உடைக்கப் பட்டால், ஏற்றம் முடிவுக்கு வரலாம்.