மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...
பிரீமியம் ஸ்டோரி
News
வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

ஃபண்ட் டேட்டா! - 5சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

டப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும்  மூன்று மாதங்கள்தான் உள்ளன. பல முதலீட்டாளர்கள் இச்சமயத்தில்தான் அவசர அவசரமாக 80சி பிரிவின் கீழ் வரி விலக்குப் பெறுவதற்காக முதலீடுகளைத் தேடுவார்கள். அல்லது தங்களின் வீடு தேடி வருபவர்களிடம், யோசிக்காமல் ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து விடுவார்கள். அவ்வாறு ஒரு 80சி முதலீட்டைத் தேடிக் கொண்டிருப்பவர் களுக்குத்தான் இந்த ஃபண்ட் பரிந்துரை.  

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகளில் மிகக் குறுகிய லாக்கின் உள்ள முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகும். லாக்கின் மூன்று வருடம்தான். இந்த முதலீட்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்பவர்களுக்கு, வருடா வருடம் டிவிடெண்ட் கையில் கிடைத்துவிடும்.  வரிச் சலுகையும் கிடைக்கும்; கையில் கேஷ் ஃப்ளோவும் கிடைக்கும். 80சி பிரிவின் கீழ் இதுபோன்ற வசதியிருக்கும் முதலீடுகள் வெகுசிலவே. மேலும், மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து இவ்வகை ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டால் போதும்; வாழ்க்கை முழுவதும் இந்த மூன்று வருட முதலீட்டை, தேவைப்படும்பட்சத்தில், ரொட்டேட் செய்துகொண்டே இருக்கலாம்.  மேலும்மேலும் முதலீடு தேவைப்படாது; ஆனால், ஒவ்வொரு வருடமும் வரி விலக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அதிக கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்களுக்கு, இது ஒரு நல்ல உத்தி அல்லவா?

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...



பல சில்லறை முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறை நுழைவது வரியைச் சேமிக்கத்தான். வரியைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தத் திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியைத் தந்துள்ளன/தரக்கூடியவை. 80சி பிரிவின் கீழ் உள்ள முதலீடுகளில், அதீத வளர்ச்சியைத் தரக்கூடியது இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) அல்லது டாக்ஸ் சேவர் (Tax Saver) என்று அழைக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள்தான். இவ்வகைத் திட்டங்களுள் ஒன்றான         ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் (இ.எல்.எஸ்.எஸ்) ஃபண்டைப் பற்றித்தான் இவ்வாரம் அலசுகிறோம்.

இத்திட்டம் தற்போது சுமார் ரூ.800 கோடி  மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் டெய்லின் பிண்டோ ஆவார். இது ஒரு மல்டி கேப் ஃபண்டாகும். கிட்டத்தட்ட 48% லார்ஜ் கேப் ஃபண்டுகளிலும், எஞ்சியது ஸ்மால் அண்டு மிட் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் போர்ட்ஃபோலியோவில் எவ்வித பங்கும் 5 சத விகிதத்துக்கு அதிகமாக இடம் பெறவில்லை. இதன் டாப் ஹோல்டிங்ஸாக  ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஃப்யூச்சர் ரீடெய்ல், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்,  மிண்டா இண்டஸ்ட்ரீஸ், கே.இ.சி இன்டர்நேஷனல் போன்ற பங்குகள் உள்ளன. போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றிருக்கும் பங்கு களின் சராசரி சந்தை மதிப்பு ரூ.23,665 கோடியாக உள்ளது. இந்த ஃபண்டின் பீட்டா சந்தையைவிடக் குறைவாக 0.96 என்ற அளவிலும், ஆல்ஃபா 10.11 என்ற அளவில் மிக உன்னதமாகவும் உள்ளது.  

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆண்டுகளைத் தவிர மீதி 7 ஆண்டுகளில் சென்செக்ஸை விட அதிக வருமானத்தை இந்த ஃபண்ட் ஈட்டித் தந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், தனது கேட்டகிரி ஆவரேஜையும் தொடர்ந்து பீட் செய்துள்ளது.  போர்ட்ஃபோலியோவில்     95%-ஐ பங்கு சார்ந்த முதலீட்டில் வைத்துள்ளது. ஸ்மால் அண்டு மிட் கேப் ஃபண்டுகளிலும் தனது முதலீட்டை வைத்துள்ளதால், சற்று அதிக எண்ணிக்கையில், 74 பங்கு களில் முதலீட்டைச் செய்துள்ளது.  

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்க எடுத்துக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் நல்ல செயல்பாடுதான். மேலும், அனூப் பாஸ்கர் தலைமை யில், இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்கு சார்ந்த திட்டங்கள் தற்சமயம் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (டிசம்பர் 26, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.5,74,351-ஆக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் 21.50% வருமானம் ஆகும். அதே சமயத்தில் ஒருவர் பி.எஃப் அல்லது   பி.பி.எஃப் -ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது, ஆண்டுக்கு 8.50% வருமானம் என்ற அடிப்படையில், ரூ.2,07,967 ஆக வளர்ந்திருக்கும். இந்த ஒப்பிடுதல் மூலம் டாக்ஸ் சேவர் ஃபண்டுகளின் மகிமை உங்களுக்குப் புரிந்திருக்கும். 2010-லிருந்து இந்த ஃபண்ட் தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

யாருக்கு உகந்தது?

சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்து 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள்; முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, ரிஸ்க்கிற்கு ஏற்ப வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள். 

வரியைச் சேமிக்க ஏற்ற ஃபண்ட்! - ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட்...

யார் முதலீடு செய்யக்கூடாது?

80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகைத் தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், உறுதியான/நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள்.